வேணும்என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின் வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாண லாகுமே. | 140 |
| | |
சிட்டர்ஓது வேதமும் சிறந்தஆக மங்களும் நட்டகார ணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும் கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம் பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின். | 141 |
| | |
நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம் நூறுகோடி நாளிருந்தும் ஓதினால் அதன்பயன் ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்திலோர் எழுத்துமாய் ஏறு சீரெழுத்தையோத ஈசன்வந்து பேசுமோ. | 142 |
| | |
காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார் மாலைகாலை யாய்ச்சிவந்த மாயமேது செப்பிடீர் காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால் காலைமாலை ஆகிநின்ற காலனில்லை இல்லையே. | 143 |
| | |
எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து இட்டமண்டலத்திலே எண்ணியாறு மண்டலம் தொட்டமண்டலத்திலே தோன்றிமூன்று மண்டலம் நட்டமண்டலத்திலே நாதன்ஆடி நின்றதே. | 144 |
| | |
நாலிரண்டு மண்டலத்துள் நாதனின்றது எவ்விடம் காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன் சேரிரண்டு கண்கலந்து திசைகளெட்டு மூடியே மேலிரண்டு தான் கலந்து வீசியாடி நின்றதே. | 145 |
| | |
அம்மையப்பன் அப்புநீ ரறிந்ததே அறிகிலீர் அம்மையப்ன் அப்புநீ ரரியய ன்அரனுமாய் அம்மையப்பன் அப்புநீ ராதியாதி ஆனபின் அம்மையப்பன் அன்னையன்றி யாருமில்லை ஆனதே. | 146 |
| | |
உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே கருத்தரிப் பதற்குமுன் காரணங்கள் எங்ஙனே பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே. | 147 |