கண்ண னாக வந்தவன் காரணத் துதித்தவன் ஒண்ண தாவது ஏதடா உண்மையான மந்திரம். | 260 |
| | |
உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம் மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர் உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம் கள்ள வாசலைத் திறந்து காணவேணும் அப்பனே. | 261 |
| | |
ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும் பாரமான தேவரும் பழுதிலாத பாசமும் ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும் சேரவந்து போயிந்த தேகமேது செப்புமே. | 262 |
| | |
என்னகத்துள் என்னை நானெங்குநாடி ஓடினேன் என்னகத்துள் என்னை நானறிந்திலாத தாகையால் என்னகத்துள் என்னை நானறிந்துமே தெரிந்தபின் என்னகத்துள் என்னையன்றி யாது மொன்றுமில்லையே. | 263 |
| | |
விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கும் ஆறுபோல் என்னுள் நின்று எண்ணுமீச ன்என்ன கத்துஇருக்கையில் கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறிவி லாமையால் என்னுள்நின்ற என்னையும் யானறிந்த தில்லையே. | 264 |
| | |
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய் அடக்கினிம் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே கிடக்கினும் இருக்கினுங் கிலேசம் வந்திருக்கினும் நடக்கினும் இடைவிடாத நாதசங்கு ஒலிக்குமே. | 265 |
| | |
மட்டுலாவு தண்டுழாய் அலங்கலாய் புனற்கழல் விட்டுவீழில் தாகபோக விண்ணில் கண்ணில் வெளியினும் எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக் கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே. | 266 |
| | |
ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர் போகமுற்றி புண்ணியத்தில் முத்தியன்றி முத்தியாய் நாகமுற்ற சயனமாய் நலங்கடல் கடந்ததீ யாகமுற்றி யாகிநின்ற தென்கொலாதி தேவனே. | 267 |