வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால் போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய் சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய் ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே. | 298 |
| | |
சாணிரு மடங்கினால் சரிந்த கொண்டை தன்னுளே பேணியப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர் தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லிரேல் காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே. | 299 |
| | |
அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால் நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால் அஞ்சுமோர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே. | 300 |
| | |
அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம் சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்ததும் எள்கரந்த வெண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான் உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே. | 301 |
| | |
ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூல ம்ஆதலால் தாகபோகம் அன்றியே தரித்ததற் பரமும்நீ ஏகபாதம் வைத்தனை உணர்த்தும்அஞ் செழுத்துளே ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே. | 302 |
| | |
மூலவாசல் மீதுளே முச்சதுர மாகியே நாலுவாசல் எண்விரல் நடுவுதித்த மந்திரம் கோலமொன்று மஞ்சுமாகும் இங்கலைந்து நின்றநீ வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே. | 303 |
| | |
சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே அக்கரத் தடியுளே அமர்ந்தவாதி சோதிநீ உக்கரத் தடியுளே உணர்ந்தஅஞ் செழுத்துளே அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே. | 304 |
| | |
குண்டலத்து ளேயுளே குறித்தகத்து நாயகன் கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை | |