உதித்தெழுந்த வாலையும் உசங்கிநின்ற வாலையும் சதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும் மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும் கொதித்தெழுந்து கும்பலாகி ஹு வுங் ஹீயுமானதே. | 343 |
| | |
கூவுங்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே பூவிலே நறைகள் போல் பொருந்திநின்ற பூரணம் ஆவியாவி ஆவியாவி அன்பருள்ளம் உற்றதே. | 344 |
| | |
ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியைக் காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே. | 345 |
| | |
நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில் வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே கீதமான ஹீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே. | 346 |
| | |
ஆவியாவி ஆவியாவி ஐந்துகொம்பின் ஆவியே மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர் வாவிவாவி வாவிவாவி வண்டல்கள் அறிந்திடார் பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே. | 347 |
| | |
வித்திலே முளைத்தசோதி வில்வளைவின் மத்தியில் உத்திலே யொளிவதாகி மோனமான தீபமே நத்திலோ திரட்சிபோன்ற நாதனை யறிந்திடார் வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே. | 348 |
| | |
மாலையோடு காலையும், வடிந்து பொங்கும், மோனமே மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர் காலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே. | 349 |
| | |
மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே ஈனமின்றி வேகமான வேகமென்ன வேகமே | |