பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 83

இன்னும் இழிவு ஏன்?

துன்பமென்ற குளத்திடை ஆசையின்
தோற்றமென்ற நறுமலர் ஆடவும்
இன்பமென்ற குமிழ்வெறுங் கற்பனை
என்றவாறு திரைதொடர்ந் தோடவும்,

குறை எனக்கரை ஓரம் இருந்திடும்
குறியகல்லொடு மல்லிட ஆடையை
அறைவதொப்ப அழுக்கை அகற்றிடும்
அவர்வெறும் உவர் மண்ணென் றிருந்தனர்!

சாடும்துன்பப் பெரும்புயற் சிக்கினர்!
சாதிஎன்ற சழக்கினில் மக்கினர்!
ஓடும்நீரில் உருண்டிடும் கல்லென
ஒன்றும் நன்மை இலாமல் உருண்டனர்!

வாழைஎன்று பிறர்க்குப் பயன்தரும்
வாழ்வில்மக்கி மடிந்து மறைந்திடும்
ஏழைஇன்னும் இழிந்தவன் என்பதை
இந்தநாட்டின் இதயம் பொறுக்குமோ?

‘சங்க ஆண்டு மலர்’ - 1955