பக்கம் எண் :

114மலரும் உள்ளம்

கட்டட மத்தியிலே - தூய
   கலைமகள் வீற்றிருப்பாள்.
சுற்றுச் சுவரிலெல்லாம் - பல
   சுந்தர ஓவியங்கள்!

பஞ்ச தந்திரத்தில் - உள்ளே
   பற்பல கதைகளுக்கே
நெஞ்சைக் கவருகின்ற - பல
   நிகரிலாச் சித்திரங்கள்!

உலகப் புகழுடைய - சில
   உயர்ந்த கதைகளுக்கும்
பலப்பல வண்ணங்களில் - அங்கே
   பளிச்சென ஓவியங்கள்!

சின்னஞ் சிறுவருக்கே - ஏற்ற
   சிறுசிறு நாற்காலி
முன்னால் இருந்திடுமே - நல்ல
   மேசைகள், புத்தகங்கள்!

ஆனையும், ஒட்டகமும் - நல்ல 
   அழகுக் குதிரைகளும்
மானும் மயிலும் உண்டு - யாவும்
   மரத்திலே செய்தவைகயாம்!