வண்ணப் படங்களுடன் - பல
வகைவகைப் புத்தகங்கள்
கண்ணைக் கவர்ந்திடுமே - நன்கு
களிப்பினில் ஆழ்த்திடுமே!
சிறுவர்க் குதவிடவே - என்றும்
சிரித்த முகத்துடனே
அருமை தெரிந்தநல்ல - ஓர்
"அக்கா"வும் அங்கிருப்பாள்!
விடுமுறை நாட்களிலே - சிறுவர்
வீட்டை மறந்திடுவார்.
"குடுகுடு" என்றுவந்தே - ஒன்றாய்க்
கூடிப் படித்திடுவார்.
பாட்டிக் கதைகளுடன் - இன்னும்
பற்பல நற்கதைகள்
நாட்டமாய்க் கூறிடுவார் - ஒருவர்
ஞாயிறு மாலையிலே.
எங்களூர் நூல்நிலையம் - போலே
இன்பத் தமிழகத்தில்
எங்கும் அமைந்திடுமோ? - அந்நாள்
என்றுதான் வந்திடுமோ!
|