தாய்ப்பால் இன்றித் தவிக்கும் குழந்தைகள்
பரிவுடன் அருந்தப் பாலினைச் சுரந்தும்
உழுதிடக் காளைகள் உவந்தே நல்கியும்
அறத்தினை வளர்த்தே அவனியில் விளங்கும்
பசுவினைக் கொல்லுதல் பாரினில் நிலவும்
அன்பையே கொல்லுதல் ஆகும் அல்லவோ?
ஃ ஃ ஃ
பிள்ளை பெண்டு யாவரும்
உள்ளம் ஒன்றி வாழவே
கள்ளொ ழிக்கச் செய்ததே
காந்தி யாரின் அன்புதான்!
"தொடுதல் தீட்டு" என்பதும்
தொலைவில் ஒதுக்கி வைப்பதும்
கெடுதல் கெடுதல் என்றதே
கேட்பீர், காந்தி அன்புதான்!
வேற்று நாட்டுப் பொருள்களை
விலக்கி, ஏழை உய்யவே
நாட்டுத் தொழிலை வளர்த்ததே
நமது காந்தி அன்புதான்!
|