பக்கம் எண் :

மலரும் உள்ளம்127

இந்து - முஸ்லிம் சண்டையில்
   இருவர் நலனும் கருதியே
சொந்த உயிரைக் கொடுக்கவும்
   துணிந்த தவரின் அன்புதான்!

குண்டு தன்னை வீசியே
   கொல்ல வந்தான் அவனையும்
மன்னித் தாரே - அதுவுமே
   மகிமைக் காந்தி அன்புதான்!

ஃ ஃ ஃ

தோழர்க ளிடத்தும் அன்பு!
   தொண்டர்க ளிடத்தும் அன்பு!
ஏழைக ளிடத்தும் அன்பு!
   எதிரிக ளிடத்தும் அன்பு!
கோழைக ளிடத்தும் அன்பு!
   கொலைஞர்க ளிடத்தும் அன்பு!
வாழைபோல் உதவி அன்பை
   வளர்த்தனர் காந்தி அண்ணல்!