வகுப்பில் நுழைந்தேன், அங்கும்நான்
மற்றவ ருடனே பேசாமல்,
கதையைப் படிப்பதில் என்னுடைய
கவனம் முழுவதும் செலுத்தினனே.
கலகல என்ற சிரிப்பொலிதான்
காதில் விழுந்தது, உடனேநான்,
"ஏனோ மாணவர் சிரிக்கின்றார்?"
என்றே நிமிர்ந்து பார்க்கையிலே,
என்னைப் பார்த்தே சிரித்தார்கள்.
என்பதை உடனே நானறிந்தேன்,
விஷயம் புரிந்தது. புரிந்ததுமே
வெட்கங் கொண்டேன். எதனாலே?
கதையைப் படிப்பதில் மாத்திரமே,
கவனம் செலுத்திச் சென்றதனால்,
எட்டாம் வகுப்பில் திரும்பவும்நான்
இருப்பதை அறிந்தேன், அடடாவோ!
படித்துத் தேறியும் முன்போலப்
பழைய வகுப்பில் நுழைந்ததனை
எண்ணி ஓட்டம் பிடித்தேனே,
எனது வகுப்பை அடைந்தேனே!
|