அறுத்து விட்ட சிறகுகளோ
அதற்குள் எப்படி முளைத்துவிடும்?
பறந்து செல்ல முடியாமல்
பட்டெனத் தரையில் வீழ்ந்ததுவே!
கீழே கிடந்த அக்கிளியைக்
கிழித்துக் கடித்துக் கொன்றிடவே,
பாழும் பூனை ஒன்றங்கே
பாய்ந்தே ஓடி வந்ததுவே!
கண்ணன் என்பவன் இக்காட்சி
கண்டதும் உடனே பூனைதனைக்
குண்டாந் தடியால் விரட்டினனே;
கொஞ்சும் கிளியைக் காத்தனனே.
கருத்துடன் சிலநாள் வளர்த்தனனே
கண்ணன் அந்தக் கிளிதனையே.
சிறகுகள் நன்றாய் வளர்ந்தனவே;
தெம்புடன் பறக்க முடிந்ததுவே.
காலையில் ஒருநாள் அக்கிளியைக்
கண்ணன் கையில் எடுத்தனனே.
சோலையை நோக்கிச் சென்றனனே.
சுகமாய்த் தடவிக் கொடுத்தனனே.
|