பக்கம் எண் :

148மலரும் உள்ளம்

கண்ணன் அருகில் அக்கிளியும்
   களிப்புடன் நெருங்கி வந்ததுவே.
அன்புடன் அதனைக் கண்ணனுமே
   அணைத்துக் கொஞ்சி மகிழ்ந்தனனே!

இன்றும் அக்கிளி கண்ணனிடம் 
   இனிக்கும் ஆப்பிள் பழத்துடனே
நன்றி செலுத்த வருவதனை
   நானும் அறிவேன், நண்பர்களே!