பக்கம் எண் :

150மலரும் உள்ளம்

தண்ணீர் அருகே சென்று நரியும்
   நின்று கொண்டதாம்.
தனது வாலை மெள்ள மெள்ள
   உள்ளே விட்டதாம்.
தண்ணீ ருக்குள் வாலை முழுதும்
   விட்ட வுடனேயே
தரையும் அந்த வாலின் நுனியில்
   தட்டுப் பட்டதாம்.

“கடலின் ஆழம் எனது வாலின்
   நீளம் தானடா!
கண்டு பிடித்து விட்டே” னென்று
   துள்ளிக் குதித்ததாம்.
“அடடா, "மிகவும் ஆழம்" என்று
   சொல்லும் கடலையே,
அளந்து விட்டேன்” என்றே பெருமை
   அளக்க லானதாம்!