பக்கம் எண் :

மலரும் உள்ளம்193

இது பாட்டு!

முறுக்கு, முறுக்கு, முறுக்கு,
வாயிலே போட்டு நொறுக்கு.

அரக்கு, அரக்கு, அரக்கு
தீயிலே காட்டி உருக்கு.

சரக்கு, சரக்கு, சரக்கு
கப்பலை விட்டே இறக்கு.

எருக்கு, எருக்கு, எருக்கு,
எருக்கஞ் செடியை நறுக்கு!