பார்த்தேன் அதையே.
படத்தில் யானை!
பார்த்தேன் அவரை.
பக்கெனச் சிரித்தார்.
"யானைநீ கேட்டாய்.
அன்புடன் தந்தேன்.
தீனியே வேண்டாம்.
செலவுமே இல்லை.
அடக்கமா யிருக்கும்.
அங்குசம் வேண்டாம்.
மடித்துநீ பைக்குள்
வைத்திடு" என்றார்.
ஜோர் ஜோர் யானை!
ஷோக்கான யானை!
யார்தான் தருவார்
இதுபோல் யானை?
தலைவர் தந்தார்
தங்கக் கையால்,
விலைக்கா வேண்டும்?
விற்கவே மாட்டேன்!
|