பக்கம் எண் :

200மலரும் உள்ளம்

என்ன பெண்ணடி? - இவள்
என்ன பெண்ணடி?

பட்டுச் சேலை கட்டவில்லை.
   பவுடர் கூடப் பூசவில்லை.
ஒட்டி யாணம் அணியவில்லை.
   ஒருந கையும் போடவில்லை. (என்ன)

சடையில் பூவும் வைக்கவில்லை.
   தலையைக் குனிந்து கொள்ளவில்லை.
நடனம் ஆடத் தெரியவில்லை.
   நலுங்குப் பாட்டும் புரியவில்லை. (என்ன)

தையல் வேலை பழகவில்லை.
   சமையல் வேலை தெரியவில்லை.
கையைக் காலை அசைப்பதில்லை.
   கண்ணை மூடித் திறப்பதில்லை.

என்ன பெண்ணடி? - இவள்
என்ன பெண்ணடி?

ஃ ஃ ஃ

குறையேது சொன்னாலும்
குற்றங்கள் கண்டாலும் 
மரப்பாச்சி மணமக்கள்.
வாய்பேச மாட்டாதே!