தாபத்துக்குத் தண்ணீர் தாரான்.
ஆபத்துக்கும் உதவான்; கொள்ளை
லாபத்துக்குப் பொருளை விற்பான்
பாபத்துக்கே ஆளாவானே!
என்று பாட வந்துவிடுகிறது. பூ, இவ்வளவுதானே!
தொப்பென்று வீழ்ந்தான்!
தெருவில் நடந்து சென்றான்
சின்னச் சாமி என்பான்.
வாழைப் பழத்தைத் தின்றான்;
வழியில் தோலை எறிந்தான்;
மேலும் நடந்து சென்றான்;
விரைந்து திரும்பி வந்தான்;
தோலில் காலை வைத்தான்.
தொப்பென் றங்கே வீழ்ந்தான்!
|