பக்கம் எண் :

206மலரும் உள்ளம்

சத்தம் கேட்ட வுடனே அம்மா
   தாவி ஓடி வந்தனள்.
"மொத்து மொத்து" என்றே எனது
   முதுகில் நான்கு வைத்தனள்.

"எத்தித் திருடித் தின்னத் தானே
   இங்கு வந்தாய்?" என்றவள்
சத்தம் போட்டுக் கொண்டே முதுகில்
   தாளம் போட லாயினள்.

"பட்பட்" வெடிகள் சத்தம் கேட்டுப்
   பயந்தே ஓடி ஒளிந்தநான்
"பட்பட்" டென்று முதுகில் விழவே
   "பாட்டு"ப் பாடத் தொடங்கினேன்!