மரம் ஏறலாம்
தென்னைமரத்தில் ஏறலாம். தேங்காயைப் பறிக்கலாம். மாமரத்தில் ஏறலாம். மாங்காயைப் பறிக்கலாம். புளியமரத்தில் ஏறலாம். புளியங்காயைப் பறிக்கலாம். நெல்லிமரத்தில் ஏறலாம். நெல்லிக்காயைப் பறிக்கலாம். வாழைமரத்தில் ஏறினால், வழுக்கிவழுக்கி விழுகலாம்!