பக்கம் எண் :

38மலரும் உள்ளம்

அழகு நிலா

பந்து வடிவ மாயிருக்கும்
பகலில் எல்லாம் ஒளிந்திருக்கும்
அந்த ரத்தில் வந்துநிற்கும்

அழகு நிலா, அதோ பார்.
அழகு நிலா, அதோ பார்.

கப்பலைப்போல் ஊர்ந்து செல்லும் 
கடலைக்கூடக் கடந்து செல்லும்
அப்பம் போல வட்டமான

அழகு நிலா, அதோ பார்.
அழகு நிலா, அதோ பார்.

ஊருக் கெல்லாம் ஒரு விளக்காம்
உயரக் காணும் தெருவிளக்காம்
யாரும் ஏற்றி வைக்கவில்லை,

அழகு நிலா, அதோ பார்.
அழகு நிலா, அதோ பார்.