பக்கம் எண் :

மலரும் உள்ளம்61

போலீஸ்காரர்

கையில்தடி வைத்திருப்பார்
   போலீஸ்காரர்.
காக்கிச்சட்டை போட்டிருப்பார்
   போலீஸ்காரர்.
பையில்ஊதல் வைத்திருப்பார்
   போலீஸ்காரர்.
பலத்தபூட்சும் அணிந்திருப்பார்
   போலீஸ்காரர்.
உயரத்தொப்பி வைத்திருப்பார்
   போலீஸ்காரர்.
ஊரைச்சுற்றி வந்திடுவார்
   போலீஸ்காரர்.
பயத்தையெல்லாம் போக்கிடுவார்
   போலீஸ்காரர்.
பட்டணத்தில் அதிகம் உண்டு
   போலீஸ்காரர்.
திருடர்களைப் பிடித்திடுவார்
   போலீஸ்காரர்.