பக்கம் எண் :

62மலரும் உள்ளம்

சிறையினுள்ளே அடைத்திடுவார்
   போலீஸ்காரர்.

சுறுசுறுப்பாய் இருந்திடுவார்
   போலீஸ்காரர்.

துப்பறியும் வேலைசெய்வார்
   போலீஸ்காரர்.
சைக்கிள், மோட்டார் வண்டிகளை
   போலீஸ்காரர்
சைகைகாட்டி அனுப்பிடுவார்
   போலீஸ்காரர்.
ஐக்கியமாய் அமைதியாக
   மக்கள் வாழவே,
அனுதினமும் உழைத்திடுவார்
   போலீஸ்காரர்.