எங்கள் நேருஜி
உலக மெல்லாம் போற்றிவரும்
எங்கள் நேருஜி.
உண்மைக் காந்தி பரம்பரையாம்
எங்கள் நேருஜி.
நலங்க ளெல்லாம் தேடித்தந்த
எங்கள் நேருஜி.
நாட்டுக் காகப் பாடுபட்ட
எங்கள் நேருஜி.
மழலைப் பேச்சுக் கேட்டதுமே
எங்கள் நேருஜி.
மனத்தை யெல்லாம் பறிகொடுப்பார்
எங்கள் நேருஜி.
குழந்தை யோடு குழந்தையாக
எங்கள் நேருஜி.
கூடி ஆடிக் குதித்திடுவார்
எங்கள் நேருஜி.
|