பக்கம் எண் :

72மலரும் உள்ளம்

எத் திசையும் புகழ்பரவ
   எங்கள் நேருஜி,
இந்தி யாவை நடத்திச்சென்ற
   எங்கள் நேருஜி.
உத்த மரில் உத்தமராம்
   எங்கள் நேருஜி.
உறுதி கொண்ட நெஞ்சினராம்
   எங்கள் நேருஜி.

தக்க வழி காட்டி வந்த
   எங்கள் நேருஜி.
தடைக ளெல்லாம் தகர்த்துவந்த
   எங்கள் நேருஜி.
மக்க ளுக்குள் மாணிக்கமாம்
   எங்கள் நேருஜி.
வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க
   எங்கள் நேருஜி.