பக்கம் எண் :

8மலரும் உள்ளம்

நத்தையம்மா

நத்தை யம்மா, நத்தை யம்மா.
   எங்கே போகிறாய் ?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம்
   கொண்டு போகிறேன்.

எத்த னைநாள் ஆகும் அத்தை
   வீடு செல்லவே ?
பத்தே நாள்தான்; வேணு மானால் 
   பார்த்துக் கொண்டிரு.