மனத்தில் நாங்கள் நினைப்பதெல்லாம்
வாயை விட்டுச் சொல்லிடுவான்;
பணத்தைக் கீழே புதைத்துவிட்டுப்
பையன் கையில் வரவழைப்பான்!
(வித்தைக்காரன்)
தரையிலுள்ள மண்ணை அள்ளிச்
சர்க்க ரையாய்த் தந்திடுவான்;
மறைந்து போன மோதிரத்தை
வாழைப் பழத்தில் வரவழைப்பான்!
(வித்தைக்காரன்)
மாய வித்தை செய்திடுவான்;
மந்திர வித்தை செய்திடுவான்;
ஆயி ரம்பேர் வாய்பிளந்தே
"ஆஹா!" என்று கூறவைப்பான்!
(வித்தைக்காரன்)
|