பக்கம் எண் :

பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்


பகவத் கீதை

காப்புச் செய்யுள்


செந்தண்மை பூண்டொழுகுந் திறத்தானே
   யறவோர்தம் சிறப்பு வாய்ந்த
அந்தணரப் பிரமநிலை யறிகுநரே
   பிராமணரென் றளவி னூற்கள்
சந்தமும் கூறியதைத் தேராமே
   பிறப்பொன்றாற் றருக்கி நாமே
எந்தநெறி யுடையபிற ரெனினும்அவர்
   சூத்திரரென்று இகழ்கின் றோமால்
1

10. ஆதாரம்: தினமணி சுடர் 11-12-77
ஆதாரம்: வருண சிந்தாமணி -- பக்கம் 4

மேழிகொடு நிலமுழுது வாழ்வதுவே
   முதல்வாழ்க்கை வேத மோதலி
வாழியதினுஞ் சிறப்பாம் மற்றவிவை
   யிரண்டனுக்கும் வல்லார்தம்மைப்
பாழிலிவர் கடைக்குலத்தா ரென்பதுபே
   தைமையன்றோ பார்க்குங் காலைக்
கூழிவரே பிறர்க்களிப்பர் நிலமுடைவை
   சியரென்றே கொள்வா ம்மனோ
2

பன்னளா வேளாளர் சூத்திரரென்
   றெண்ணிவரும் பழம்பொய் தன்னை
ஒன்னார்பற் பலர்நாண வருண சிந்தா
   மணி யென்னு முண்மைவாளாற்
சின்னாபின் னம்புரிந்து புவியினரைக்
   கடப்படுத்தான், சென்னை வாழும்
நன்னாவலோர் பெருமான்,கனகசபைப் 
   பிள்ளையெனும் நாமத்தானே.
3