பக்கம் எண் :

வந்தே மாதரம்

சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்

பாரததேவி வாழ்த்து


வெண்பா

சொல்வாய்ந்த *பாரதத்தைத் தோளில் அறங்காக்க
வில்லாய்ந்த என்றன் *விறல்நாட்டைக்-கல்லாய்ந்த
விண்ணிலுயர் நல்லிமய வெற்பாளை நெஞ்சமே!
மண்ணில்உயர்ந் தாளென்று வாழ்த்து,

* பாரதம்-பாரததேசம்
* விறல்நாடு-வலிமைமிகுந்த தேசம்


சக்தி பாட்டு

                      இராகம்-சஹானா; தாளம் ஆதி


"அப்பா பழநிமலை" என்ற மெட்டோடு ஒருவாறு ஒத்தது.
  பாரத நாட்டுக்குத் தாயடி நீ!-உன்
  பாரதத்தை நம்பிய *சேயடி யான்!
  பாரத நாட்டுக்கு வந்த கதி-தனைப்
  பார்த்திருந்தும் அதைத் தீர்த்த தில்லை அடி! (பா)
* சேய்-குமாரன்

வீரர்தம் நாட்டுக் குலதெய்வ மே-எம்

  வெற்றிப் புயத்தினில் வாழ்பவளே!
  சாரஎம் வாழ்வில் சனிபுகுந்தான்-இங்குச்
  சக்திக்குத் தொண்டர் தலைகுனிந்தோம் அடி! (பா)

   இட்ட தலைவிதி தீர் வதில்லை-என்ற
  ஈனக் கருத்திலும் உண்மை யுண்டோ?
  துட்ட விதிகளிற் கோடியினர்-தமைச்
  சூரைப் படுத்திய சுந்தரியே! அடி! (பா)

  வட்ட நிலாநின் முகத்தொளியில்-எம்
  வாழ்க்கையின் வெற்றிமலர்வ தடீ!
  தொட்டவை ஓங்க வசப்படுவாய்-எம்
  * தொழும்பு போக்கிடு! சுந்தரியே! அடி! (பா)
  * தொழும்பு-அடிமை வேலை




( 5 )






( 10 )






( 15 )






( 20 )
- Untitled Document
காளையர் எழுச்சி

  "சென்று கனிபறித்துக் கொண்டு" என்ற மெட்டு.

  மன்னும் இமயமலை வடக்காம்-புகழ்
  வாய்ந் திருக்கும் *குமரி தெற்காம்-நாம்
  பன்னும் தொடர்ச்சிமலை இரண்டு-மற்ற
  பக்கங்களில் அமைந்த துண்டு.

     பாரத நன்னாடு
     பழமைபெற்ற நாடு-தினம்
     சாரத் தமிழிலதைப் பாடு!
* குமரி-கன்யாகுமரி.

   முன்னை வணங்கும்ம உமை போன்றாள்-அவள்
   முப்பது கோடி மைந்தர் ஈன்றாள்
   அன்னை வாழ்கஎன வாழ்த்தி-மற்றும்
   அவளுக்குறும் பகையைத் தாழ்த்தி,

   ஆர்வத்தினில் ஏறு
   தாரணிக்குள் வீறு-கொண்ட
   பாரதபுத்ர னென்று கூறு.
ஆய புகழ் மிகுந்த தேயம்-இந்நாள்
அடிமை அடைந்த தென்னமாயம்!-உனைத்
தாயதோ அழைக்கின்றாளே-தன்
தளையை நீக்கச்சொன்னாளே

    தமிழன் எலி அன்று
    தாவும் புலி என்று-நீ
    தாரணி அறியச்செய் இன்று.

 *வாய்மை படைத்துப் பொய்ம்மை விடும்பாய்-நீ
 வல்லாளன் என்று பெயர் எடுப்பாய்-மிகத்
 தூய்மை உடையஉன்றன் தாய்க்கு-நீ
 தொன்மை நிலைமை உண்டாக்கு.

  சுடர் அடிக்கும் அங்கம்
  உடன் பிறந்த சிங்கங்-களைத்
  தொண்டு செய வரச்சொல் எங்கும்

*வாய்மை-சத்தியம்.
  அடிமை நீங்கஇந்த நரியும்-மண்ணில்
  ஆர்க்கும் உயர்வென்பது தெரியும்
  அடிமையாகும் அந்தகாரம்-அதை
  அகற்றினால் தெரியும் வீரம்

      ஆண்மையினில் ஒழுகு
      வேண்டுந்தொழில் பழகு-நின்
     *மாண்புடைய குலத்துக்கழகு.
     *மாண்பு-பெருமை.

     உடைமை சிறந்த இந்துஸ் தானம்-தன்
     உரிமை பறிகொடுத்த தீனம்-உன்
     கடமை தனைநினைந்து பாராய்-குறி
     கண்ணிற் றெரிகின்றது நேராய்!

            காளைகள் செல்க!
            கதிபுவிக்கு நல்க!-உன்றன்
            தோளையுயர்த்தி நாடி வெல்க!
     *இந்துஸ்தானம்-பாரததேசம்.




( 25 )






( 30 )






( 35 )





( 40 )






( 45 )







( 50 )









( 55 )





( 60 )
Untitled Document
தேசிய விடுகவிகள்

 கங்கைநதி தலையில் உண்டு சிவனார்அல்ல,
 காலடியிற் குமரி யுண்டு ராமன்அல்ல,
 சங்கையற்ற வயதுண்டு கிழவி  அல்ல,
 சாத்திரத் தின் ஊற்றனையாள் கலைமா தல்ல,

    எங்குலத்தைப் பெற்றதுண்டு பிரமன்அல்ல,
    ஏற்றுண்ணும் எண்ணமில்லை இறுமாப்பல்ல,
    லங்கை என்று பாடிடுவர் புலவ      ரெல்லாம்,
    மற்றி தனை இன்னதென வழுத்து        வீரே.

    "பாவம் ஒன்றினுக்கே அஞ்சும் பழக்கம்
    ரண சூரருக்கும் சலியாத ஆண்மை
    தவமே தனக்குத் துணையென்ற எண்ணம்
    வானொத்த வாழ்வு வாய்ந்திட்ட கீர்த்தி
    சிவனார் தமக்கே பிரியாத தொண்டு"
    சொல்லும் இவ் வைந்தின் தொடக்கம் தன்னைக்
    கூட்டிப் பார்த்துக் கூறினால்
    நாட்டை விட்டவன் நற்பெயர் தோன்றுமே

    அதிக உயரத்தில் ஆகாய            வாணி
    அவளூர்க்கும் நம்மூர்க்கும் வைத்ததோர்  ஏணி
    மதிப்புக் கடங்குமோ அவ்வேணி       உயரம்
    மனிதர்சிலர் ஏறப்பார்த் தடைந்தனர்     துயரம்
    குதித்துக் குதித்திறங் கிடுவர்சில      பெண்கள்
    குளிரில் இறங்குகையில் பாடிடுவர்     பண்கள்
    இதற்கு விடைசொல்லக் கூடுமோ     உன்னால்
    ஏற்ற பரிசளிக்க வாகும் இது       சொன்னால்

    ஏழ்மையைப் போக்கிவிடும் இலக்ஷ்மி அல்ல.
    எதிரிற் சுழலும் அது சூரியன் அல்ல.
    தாழ்மையைப் போக்கிவிடும் சற்குரு அல்ல.
    தாய்மானம் காக்கும் அது கண்ணனும் அல்ல;
    தோழியாய்க் கொண்டதுண்டு காந்தியடிகள்.

    தொழும்பை அகற்றும் என்பர் காந்தியடிகள்
    ஆழ்ந்து நினைந்துபார் பாரதமைந்தா!
    அதன்பிற கின்னதென்று கூறிவிடுவாய்.
    
    ஒன்று சேர்ந்த "தரை" ஆக்க
    ஒன்று சேர்ந்த "வலை" கொண்டார்
    ஒன்று சேர்ந்த 'படம அற்றார்
    உடனே தமது கண் முன்னே
    இன்று பாரதம் விடுபட்டால்
    இரண்டு சேர்ந்த 'வகை" கொள்வார்
    என்றேன் இதனை விவரித்தால்
    எட்டுச் சேர்ந்த "வலை" அளிப்பேன்.

    ஆமை, அருமை, பெருமை, சிறுமை,
    அடிமை, கடுமை, மடமையே
    ஊமை; உண்மை, இன்மை, இளமை,
    உரிமை, திறமை, இவைகளில்
    தீமைசெய்து பாரதத்தைச்
    சீரழிப்ப தெது சொல்வாய்?
    நாமடைய வேண்டு வதையும்
    நன்கு பார்த்துக் கூறுவாய்,

    ஈக்கள், எறும்புகள், எலிகள், பூனைகள்
           எருதுகள், குதிரைகள்,
    பூக்கள், மரங்கள், செடிகள், கொடிகள்
           புளிகள், மிளகாய்கள்,
    ஊக்கம் கெடவைத் துங்கள் பணத்தை
           ஒழித்துப் பாரதத்ததை
    ஏக்கம் கொள்ள அறிவை மயக்குவ
           திவற்றில் எது சொல்வாய்?



( 65 )






( 70 )




( 75 )






( 80 )




( 85 )





( 90 )






( 95 )





( 100 )





( 105 )





( 110 )




( 115 )
Untitled Document
சிட்டுக்குருவிப் பாட்டு

சிட்டுக்குருவிச் சிறுபெண்ணே,
சித்தம் போலச் செய்பவளே.
கொட்டிக் கிடக்கும் தானியமும்
கொல்லைப் புழுவும் தின்பவளே,
எட்டிப் பறத்தால் மண்முழுதும்
ஏறிப் பறந்தால் வானமெல்லாம்
இஷ்டப்படி நீ செய்கையிலே
ஏன்? என்பாரைச் ''சீ'''என்பாய்.
உன்னைக் கேட்பேன் ஒருசேதி,
*உரிமைத் தெய்வத்தின் மகளே
தின்னத் தீனி தந்திடுவேன்.
தெரிவிக்காமல் ஓடாதே;
மன்னன் அடிமைப்பிணி யில்லான்.
வாய்மைச் சிறகால் உலகேழும்,
மன்னும் காந்திப் பெருமானார்
மகிழும் தோழி நீ தானோ?

உரிமைத்தெய்வம் - சுதந்திரதேவி


( 120 )




( 125 )





( 130 )
Untitled Document
நிலாப்பாட்டு

நிலவே நிலவே எங்கெங்குப் போனாய்?
உலக முற்றும் உலாவப் போனேன்.
உலாவல் எதற்கு விலாசத் தீபமே?
காடும், மலையும் மனிதரும் காண
காண்பது எதற்குக் களிக்கும் பூவே?
''சூரிய வெப்பம் நீங்கிக் குளிர,
குளிர்ச்சி எதற்கு வெளிச்சப்பொருளே?
செய்யுந் தொழிலிற் சித்தங் களிக்க.
சித்தங்களிக்கச் செய்வ தெற்கு?
நித்தமும் நாட்டை நிலையில் உயர்த்த,
நாட்டை உயர்த்தும் நாட்டம் எதற்கு?
வீட்டைச் சுரண்டும் அடிமை விலக்க,
அடிமை விலக்கும் அதுதான் எதற்கு?
கொடுமை தவிர்த்துக் குலத்தை காக்க,
குலத்தைக் காக்கும் குறிதான் எதற்கு?
நிலத்துச் சண்டையைச் சாந்தியில் நிறுத்த,
சாந்தி ஆக்கும் அதுதான் எதற்கோ?
ஏயந்திடும் உயிரெலாந் தேவராய் இருக்க,
பதந்தனில் அமர வாழ்வுதான் எதற்கு?
சுதந்தர முடிவின் சுகநிலை காணவே.

( 135 )




( 140 )




( 145 )




( 150 )
Untitled Document
சுதந்திரம் உயிரின் இயற்கை

நாய்ப்பாட்டு


மெத்தை வீட்டு வெள்ளை       நாய்
வீட்டு வாசற்படியில்போய்க்
கத்திக் கொண்டே சற்று        நின்று
கறுப்பு நாயை வா                   என்று
கத்திக் கத்திக்                    கூவிற்று.
''கறுப்புத் தெருநாய்              போயிற்று''
''வேளைக் கென்ன புசிக்கின்றாய்''
என்று கறுப்பு, வெள்ளையுடன்
இளித்துக் கொண்டே சொன்னவுடன்,
''ஒன்றும் இங்கே குறை இல்லை''
''உறைப்பேன் கேட்பாய் என் சொல்லை''
''அன்றன்றைக்கும் பால் சாதம்''
'' அப்பம் ரொட்டி *நவநீதம்''
''பன்றியைப் போல் வீங்குகின்றேன்''
''பட்டுமெத்தையில் தூங்குகின்றேன்'
''இருப்பாய் நீயும் என்னோட
என்றது வெள்ளை அன்போடே''
*நவநீதம் - வெண்ணெய்
காதால் கேட்ட கறுப்புதான்
''கழுத்தில் வடுவாய் இருப்பதென்ன?
ஏதோ சொல்வாய்'' என்றதே.
''ஏதாகிலும் செய்யாமல்''
''எனது கழுத்து நையாமல்''
''காதோரத்தில் வார் கொண்டு''
''கட்டிவைக்கும் வடிவுண்டு''
அதனைக் கேட்ட கறுப்புதான்
''அடிமையாய் நீ இருப்பதேன்!''
கதிதான் கெட நீ நடப்பதா?''
''கட்டுப்பட்டுக் கிடப்பதா?''
''சதிராய் உன்னிடம் அண்டேனே!''
''சதையில் ரத்தம் கண்டேனே!''
இதனால் அஞ்சி ஓடுதுபார்!
இன்னும் ஓடுது ஓடுதுபார்.

( 155 )




( 160 )




( 165 )





( 170 )




( 175 )




( 180 )




( 185 )
Untitled Document
தேசிய விளையாட்டு

நாடு பிடிக்கும் விளையாட்டு

(விசாலமான நான்குமூலைக் கோடுகிழிக்கவேண்டும்
ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொருவர் நிற்க வேண்டும்;
அப்படி நிற்பவர்கள் பாரதநாட்டார். ஒருவன் நடுவில்
நிற்பான், அவன்தான் அயலானாகிய கோட்டான்.)

கோட்டான் - நாட்டாரே நாட்டாரே நாட்டில்
          என்ன செய்கின்றீர்.
நாட்டார் - கோட்டானே! கோட்டானே?
கோட்டில் நின்றோம் கோட்டானே.
கோட்டான் - கோட்டிற்கொஞ்சும் தூங்குங்கள்
          குலதர்மத்தில் நீங்குங்கள்
நாட்டார் - பாட்டன் காலம் பழுத்தது
          பாரதநாடு விழித்தது.

(நாட்டார்கள் ஜாக்கிரதையாய்த் தமது கோட்டி
லிருந்து மாறவேண்டும் கோட்டானுக்கு மூலையைப் பறி
கொடுத்துவிடக் கூடாது, பறிகொடுத்தவன் கோட்டானாக
நிற்க வேண்டும். அடுத்த ஆட்டம் தொடங்கும்போதும்
பாட்டைச் சொல்லவேண்டும்.)






( 195 )




( 200 )





( 205 )

Untitled Document
நியாயசபை விளையாட்டு

(சீமானுக்கும் வைத்தியருக்கும் சம்பாசணை; வைத்தியரைக்
கேலிசெய்து தாம் கொழுத்திருப்பதற்கு மருந்து கேட்கிறார் சீமான்.)

சீமான் - கை பார்ப்பரே வைத்தியரே?
       கால் பார்ப்பீரோ வைத்தியரே?
வைத்தியர் - கைபார்க்கின்றோம் சீமானே!
          கதியைச் சொல்வோம் சீமானே!
சீமான் - மெய்யாய் உடம்பு கொழுக்குதே?
       மேனிசரிந்து பழுக்குதே?
வைத்தியர் - நையப் பலரை இழுப்பீரே!
          நாட்டுக்கு அவருடன் உழைப்பிரே!

(இந்தக் குற்றத்திற்காக சேவகன் வைத்தியரை
இழுத்துக் கொண்டுபோய் நியாயாதிபதியிடம் நிறுத்துகிறான்.)

நியாயாதிபதி - நாட்டுக்குழைக்க முன்நீரே
            நால்வர் அறியச் சொன்னீரே?
வைத்தியர் - பாட்டுப் பாடி எங்கும் நான்,
          பறைகொட்டாதது குற்றத்தான்.
நியாயாதிபதி - போட்டேன் உம்மை ஓர் வருடம்
           போவீர்சிறைக்குத் தீரும் அடம்
வைத்தியர் - பாட்டும் பறையும் முழக்கினீர்
          பாரத மக்களை எழுப்பினீர்

(சேவகன் வைத்தியரைச் சிறைக்கிழுத்துக் கொண்டு போகுதல்.)



( 195 )




( 200 )









( 205 )




( 210 )
Untitled Document
ஓடிபிடிக்கும் புறா விளையாட்டு

{ சிறுவர்கள் சமமாக பிரித்து பாதிப்பேர் ஓரு பொது
மனிதர்வசம் நிற்க வேண்டும். அவர்கள் வீட்டுப் புறாக்கள்.
மற்றவர்கள் காட்டுப் புறாக்கள். }

வீ - கூட்டம் போட்டீர் காட்டுப் புறாக்களே?
கா - குலமொத்திருந்தோம் வீட்டுப் புறாக்களே!
வீ - ஊட்டம் கிடைக்குதோ காட்டுப் புறாக்களே?
கா - ஓடிப்பொருக்குவோம் வீட்டுப் புறாக்களே!
வீ - ஓட்டம் எமக்கில்லை காட்டுப் புறாக்களே?
கா - உரிமை தொலைந்ததோ வீட்டுப்புறாக்களே!
வீ - வாட்டமாய் வாருங்கள் காட்டுப்புறாக்களே?
கா - வந்தாற் பிடிக்கலாம் வீட்டுக் புறாக்களே.

{ காட்டுப் புறாக்களை வீட்டுப் புறாக்கள் பிடிக்க ஓடுகின்றன.
பொது மனிதரைத் தொட்டு விட்டால் காட்டுக் புறாக்களுக்கு
ஜயம். ஓரு காட்டுப் புறா அகப்பட்டுவிட்டாலும் எல்லாம்
அகப்பட்ட மாதிரிதான். பிறகு ஜயித்தவர் காட்டுப் புறாவாக
ஆட்டந் தொடங்கும். }








( 215 )