-
காவியங்கள்
: கற்பனையும் கதையும்
|
திரிதராட்டிரன்
சம்மதித்தல்
வேறு
|
‘விதிசெயும் விளைவினுக்கே -- இங்கு
வேறுசெய்வார் புவிமீ துளரோ?
மதிசெறி விதுரன் அன்றே -- இது
வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்.
“அதிசயக் கொடுங் கோலம் -- விளைந்
தரசர்தங் குலத்தினை அழிக்கும்”என்றான்;
சதிசெயத் தொடங்கி விட்டாய்; -- “நின்றன்
சதியினிற் றானது விளையும்”என்றான். |
107 |
‘விதி! விதி! விதி! மகனே -- இனி்
வேறெது சொல்லுவன் அடமகனே!
கதியுறுங் கால னன்றோ -- இந்தக்
கய மக னெனநினைச் சார்ந்துவிட்டான்?
கொதியுறு முளம் வேண்டா; -- நின்றன்
கொள்கையின் படிஅவர் தமைஅழைப்பேன்;
வதியுறு மனைசெல்வாய்,’ -- என்று
வழியுங்கண் ணீரொடு விடைகொடுத்தான். |
108 |
-
|
|
|