Untitled Document
இருந்தனர். அப்பொழில் அழிந்ததைப் பற்றியும் பஞ்ச சேனாதிபதிகள், அக்ஷய குமாரன் முதலானவர்களின் வதத்தைப் பற்றியும் இராவணனுக்கு அறிவிக்கும் பொறுப்பு இவ்வேழைத் தேவர்களுக்கு ஏற்பட்டது. இராவணன் சமூகத்திற்கு அவர்கள் உள்ளம் பறைகொட்ட நடுநடுங்கி வருதலும், அவனிடம் சொல்வதற்கு அஞ்சித் தடுமாறும் நிலைமையும், நகைச்சுவைப்பட, இகழ்ச்சிக் குறிப்புத் தோன்ற, வருணிக்கப்படுகின்றன. அடிமை வாழ்வின் மீது ஏற்படும் அருவருப்பு தேவஜாதியாரின்மீது ஏற்றி உணர்த்தப்படுகிறது. இதனால் விளையும் சுவையும் பயனும் பெரிதும் போற்றத்தக்கவை.
இராமாயணத்தில் வருவது பழங்காலச் சரித்திரத்தில் ஓர் ஆழ்ந்த உண்மை. ஓர் ஆசிரியன் தன் காலத்து வாழ்ந்த சில இனத்தாரைப் பரிகசித்து இகழ்வதுதான் மிகுதியாகக் காணப்படுகிறது. இவ்வாறு இகழப்படுதற்குப் பெரும்பாலும் பெண்ணினத்தார்களும் துறவு வேடம் பூண்டவர்களுமே தக்கவர்கள் ஆவார்களென்று ஆசிரியர்கள் கருதினார்கள்.
பெண்களுடைய நடையுடை பாவனைகளையும் அவர்களுடைய சாகசத்தினையும் அறிவு நுட்பத்தினையும் ‘அளக்கவொண்ணா வஞ்சத்தினை’யும் பற்றிப் பல நூல்கள் ஆங்கிலத்தில் முற்காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக, தாமஸ் டெக்கர் என்னும் கவிஞர் எழுதிய ‘பிரமசாரியின்விருந்து’ (Bachelor’s Banquet) என்ற நூலைக் கூறலாம். நமது நாட்டில் பெண்களைப் பழித்துரைத்தலே பிற்காலத்தில் ஜைன பௌத்த மதங்கள் ஓங்கி நின்ற காலத்தில் - பெரு வழக்கமாக ஏற்பட்டு விட்டது. புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்புற நாடின்வேறு அல்ல - புதுப்புனலும் மாரி அறவே அறுமே அவரன்பும் வாரி அறவே அறும் | என்ற நாலடிச் செய்யுளும் (370) உண்டியுட் காப்பு உண்டு உறுபொருட் காப்பு உண்டு கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்பு உண்டு பெண்டிரைக் காப்பது இலமென்று ஞாலத்துக் கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே | என்ற வளையாபதிச் செய்யுளும் தக்க உதாரணங்களாம். இங்ஙனமேஒரு பௌத்த பிக்ஷு வையும் ஒரு காபாலிகனையும் ‘மத்த விலாஸ ப்ரஹஸதம்’ என்ற வடமொழி நாடகம் பரிகசிக்கிறது. வள்ளுவரும், | |
|
|