பக்கம் எண் :

தமிழச்சியின் கத்தி

சோற்றில் நஞ்சு

தென்பாங்கு -- கண்ணிகள்

உண்ணால் கசக்காது; கண்டால் வெறுக்காதே
உண்ணக் கொடுத்து விடடி -- அடி
கொண்டைக் கருங்கூந்தல் கோதை அருந்தினால்
கொல்லாது; சோற்றில் இடடி!
தொண்டைக்குள் சென்றவுடன் தோகை மயக்கமுறக்
கெண்டை விழிகள் சுழலும் -- அடி
தண்டா மரைமலரின் தண்டாய் உடம்பில் நெளி
உண்டாக மண்ணில் உழலும்.

இந்தா மருந்துப்பொடி தந்தேன் கலந்திடு: வி
ரைந்தே புறப்படு பெண்ணே! -- அந்தச்
செந்தேன் உதட்டு மங்கை தின்பாள் ஒளிந்திருந்து
வந்து நுழைகுவேன் கண்ணே!
அந்தச் சுதரிசனும் இந்த வகையுரைத்துத்
தந்த மயக்க மருந்தைக் -- குப்பும்,
அந்தி உணவொடுக லந்து கொடுத்து விட்டு
வந்தாள் திரும்பி விரைந்தே.



( 5 )





( 10 )




( 15 )

உண்ண எழுந்தாள்

பஃறொடை வெண்பா

குப்பு மகிழ்வோடு
கொண்டு கொடுத்திட்ட
செப்புக்குண்டான் சோற்றைச்
செய்த கறிவகையைச்
சேரிச்செங் கான்வாங்கித்
திண்ணையிலே வைத்திருந்தான்.
இயல்புடையான் ஆதலினால்
நஞ்சக் கலப்புணவை
நல்லுணவே என்றெண்ணிக்
கொஞ்சம் இருட்டியதும்,
கோழி அடைந்தவுடன்
கூப்பிட்டான் நங்கையினை'
'ஏன்', என்றாள் கோதையும்!
'சாப்பிடம்மா' என்றுமே
சாற்றினான். அப்போது
கள்ளர்கள் போலே
இருமாதர் கண்உறுத்தே
உள்ளே வராமல்
ஒளிந்துகொண்டு பார்த்திருந்தார்.
சிங்கன் தெருவை
அடைகின்றான் அந்நேரம்!
நங்கை எழுந்தாள் நலிந்து.




( 20 )



( 25 )




( 30 )





( 35 )



நஞ்சுண்டு வீழ்ந்தாள்

தென்பாங்கு -- கண்ணிகள்

வாழை இலைதனில் சோற்றைச் -- செங்கான்
வட்டித்துக் கூப்பிட்ட போது
சூழ நடந்த சுப்பம்மா -- தன்
துணைவன் நினைப்போடு வந்தாள்!
ஆழும் அலைகடலுக்குள் -- சூழல்
ஆயிரம் வாய்த்திடக் கூடும்
ஏழைத் துணைவனை எண்ணி -- நையும்
ஏந்திழை எப்படிக் காண்பாள்?

சோற்றினை உண்டனள் நங்கை -- நீர்
தூக்கிப் பருகிய பின்னர்
காற்றினில் ஆடும் கிளைபோல் -- அவள்
கட்டுடல் ஆடிற்று! நெஞ்சம்
மாற்றம் அடைந்தது! கண்ணில் ஒளி
மாறி மயங்கி விழுந்தாள்.
சோற்றில் "மயக்க மருந்தா" -- என்று
சொல்லி விழுந்தனள் மண்ணில்!

தன்னிலை தன்னைவிட்டோட -- அதைத்
தான்தொடர்ந்தேபற்றி வந்த
மின்னல் அசைவது போலத் -- தன்
மேனி தள்ளாட எழுந்தாள்
சின்னதோர் பாயினை நோக்கிச் -- சென்று
திம்மனை எண்ணி விழுந்தாள்.
பொன்னுடல் வாடிற்று! நெஞ்சு -- துயில்
புக்கு மறைந்திடு முன்னே.

மெல்லிடையில் வைத்த கத்தி -- தனை
மென்கையினால் தொட்டுப் பார்த்தாள்
சொல்லினில் தீயைக் கலந்து -- சில
சொற்களைச் சொல்லினள் மெல்ல;
கல்லிடை நார் உரிக்கின்றான்! அனற்
காற்றினில் நீர்வேண்டுகின்றான்
வல்லியைத் தொட்டிடுவானேல் -- அவன்
வாழ்வினை மீட்பவர் இல்லை!

இவ்வுரை சொன்ன மறத்தி -- மயக்
கேறினாள்; மெய்ம்மறந்திட்டாள்!
செவ்விதழ் சோர்ந்தது! கண்கள் -- ஒளி
தீர்ந்தன' வேர்வையின் நீரில்
அவ்வுடல் மூழ்கிற்று! மேகம் -- திசை
ஆர்ந்தது போற்கருங் கூந்தல்
எவ்விடத்தும்பரந் தோடி -- நிறைந்
திட்டது கட்டுக் குலைந்தே!

செங்கான் உடல்பதைத் திட்டான் -- என்ன
செய்வதென்றே அறியாமல்
அங்கும் இங்கும் பறந்தோடி -- வீட்டின்
அக்கம் பக்கம் சொல்லப் போனான்.
சிங்கனைக் கண்டனன்! "ஏடா -- செங்கான்,
செல என்று கூறினன் சிங்கன்.
செங்கான் பயந்து நடந்தான் -- அந்தச்
சின்னக் குடிசையின் பின்னே.

சிங்கன் அவ்வீட்டில் நுழைந்தான் -- உற்ற
சேதிகள் யாவும் தெரிந்தான்
அங்குச்சுப்பம்மாவின் அண்டை -- அவன்
அண்டினன்! மற்றவர் இல்லை.
பொங்கிற்று வானில் முழக்கம் -- மின்னல்
பொல்லாங்கு காட்டிற்று! நல்ல
மங்கைக்கிரங்கி இருட்டும் -- அழும்
வண்ணம் பொழிந்தது மாரி.

காட்டை முறித்திடும் காற்றும் -- அவன்
கையை முறிப்பது போலே,
தோட்டத்து வாசலி னோடு -- சென்று
தூள்பட வைத்தது வீட்டை!
கூட்ட மலர்ச்சிறு கொம்பை -- வையம்
கும்பிடத் தக்கஓர் தாயைத்
தீட்டுப் படாத நெருப்பை -- விரல்
தீண்டக் கடித்திடும் பாம்பை.

ஒட்டுற வில்லா வடக்கண்! -- உல
கொத்தது காணாத தீயன்!
எட்டுத் திசைகளில் எல்லாம் -- பின்னர்
'ஏஏ' எனச்சொல்லி ஏசக்
கொட்டிக் கிடந்திட்ட பூப்போல் -- அந்தக்
கோதை கிடந்திட்ட போது
தொட்டனன்! தொட்டனன்! மீளாப் -- பழி
சூழ்ந்தனன்! சூழ்ந்தனன் சிங்கன்!

பொழுது விடிந்திட வில்லை! -- இன்னும்
பொற்கோழி கூவிட வில்லை
எழுந்து வெளியினிற் சென்றான் -- மாதர்
இருவர் இருந்திடும் வீட்டில்!
நுழைந்தனன் அத்தீய சிங்கன் -- இதை
நோக்கி யிருந்தஅச் செங்கான்
அழுது கண்ணீரில் நனைத்தான் -- சுப்
பம்மாவைக் கண்டிட நின்றான்.

போயிற்று மங்கை மயக்கம் -- இன்னும்
பொழுதோ வெளுத்திட வில்லை
போயிற்று மானம்; உணர்ந்தாள் -- உடல்
போயிற்று! நல்லுயிர் தானும்
போயிற்றுப் போவதன் முன்னே -- சென்று
போக்கிடுவேன் அவ னாவி!
வாயிலில் நின்ற செங்கானைச் -- "சிங்கன்
வந்ததுண்டோ" என்று கேட்டாள்!

"உண்டதும் நீவிர் மயங்கிப் -- பாயில்
உருண்டதும் கண்டேன் துடித்தேன்.
கண்டதும் இப்பாழும் கண்தான் -- இக்
கையில் வலியில்லை தாயே
அண்டையில் நானின்றிருந்தேன் -- பின்னர்
அச்சிங்கன் உள்ளே நுழைந்தான்
அண்டையில் நில்லாது போடா -- என்ற
அவன் சொல்லை மீறாதிருந்தேன்.

இருட்டோடு வெளிவந்த சிங்கன் -- அவன்
இங்கிருந்தேபுறப் பட்டான்
புரட்டனோகு ஏகினேன் நானும் -- கால்
பொத்தென்ற சத்தமி லாமல்!
திருட்டுநடை கொண்ட குப்பு -- வீடு
சென்றனன் நானிங்கு வந்தேன்
கருத்துக் கலங்கினேன் தாயே -- என்
கடமையை நான்செய்ய வில்லை.

சேரியெல் லாமிதைச் சொன்னேன் -- அவர்
சீறிக் குதித்தனர் தாயே
சேரியின் மக்களைப் பாரீர் -- இதோ
தீயெனச் சீறிநிற் கின்றார்.
ஊரும் கிளம்பிடும் தாயே -- மொழி
ஒன்றுசொல் வீர்இந்த நேரம்
வாரிக் குவிப்பார்கள் தாயே -- அந்த
வடக்கரை" என்றனன் செங்கான்.

ஓடினள் சிங்கனை நோக்கி -- உடன்
ஓடினர் சேரியின் மக்கள்
ஓடினன் செங்கானும் அங்கே -- உம்
உம் என்று தட்டினள் கதவை
நாடித் திறந்தனன் சிங்கன் -- கதவின
நடுநின்ற அவன்மார்பு நடுவைச்
சாடிப் புகுந்ததே கத்தி -- குத்திச்
சாய்த்தனள் பெண்இந்நிலத்தில்!

காம்பில் வளைந்திட்ட கொடுவாள் -- செங்கான்
கையோடி ருந்திட்ட தாலே
பாம்புகாள் ஒழியுங்கள் என்றான் -- இரு
பழிமாத ரும்தீர்ந்து போனார்.
தேம்பாத அழுகையும் நீரின் -- துளி
தெரியாத கண்களும் கொண்டாள்
வேம்பாக எண்ணினாள் வாழ்வை -- கோட்டை
விடியாத முன்னமே சேர்ந்தாள்.

கோட்டையின் வாசலைக் காப்போர் -- பெருங்
கொட்டாவி விட்டுக் கிடந்தார்
பாட்டையைப் பார்க்கவே யில்லை -- உயிர்ப்
பாவையும் காவல் கடந்தாள்
கோட்டைப் புறத்தினில் எங்கும் -- தூக்கக்
கோல மல்லால் விழிப் பில்லை
பூட்டும் படைவீடு கட்குள் -- நெடும்
புன்னை மரத்திற்கு நேரில்

தன்கணவன் சேர்படை வீடும் -- முற்றும்
சாத்திக் கிடந்ததைக் கண்டாள்
'என்னுயிர்ப் பொருளே திறப்பீர் -- கதவை
இன்னுமோ தூக்கம் என் அத்தான்?
ஒன்றும் அறியேனைச் சிங்கன் -- தொடும்
உள்ளம் படைத்தனன் கேளீர்
என்னை மயக்கத்தில் ஆழ்த்திக் -- கற்பை
ஈடழித் தான் வெறும் பேடி
செந்தமிழ்ச் சேய்தொட்ட மேனி -- தன்னைத்
தீண்டிட்ட தீயனைக் கொன்றேன்
அந்தோ உமைக்கான வேண்டும் -- என்றன்
ஆவிதான் போய்ச்சேரு முன்னே!
எந்த நிலைதனில் உள்ளீர்? -- உம்மை
என்னென்ன செய்தனன்! காணேன்!
அந்தோ எனக்கூவி மங்கை -- அவள்
அங்குமிங்கும்பறக்கின்றாள்.

( 40 )




( 45 )





( 50 )





( 55 )




( 60 )





( 65 )




( 70 )





( 75 )





( 80 )




( 85 )





( 90 )





( 95 )




( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )





( 125 )





( 130 )





( 135 )




( 140 )





( 145 )




( 150 )




( 155 )





( 160 )





( 165 )





( 170 )





( 175 )




( 180 )




( 185 )




( 190 )

 

மன்னன் வந்தான்

எண்சீர் விருத்தம்

காட்டுத்தீப் போலேசுபேதார் சாவு
        கடிதோடித் தேசிங்கின் காதுக் குள்ளும்
கோட்டைக்குள் எப்புறத்தும் சென்ற தாலே
        குலுங்கிற்றுக் கோட்டையெலாம்! மார்பில் குத்திப்
போட்டிருந்த சுபேதாரைச் சிப்பாய்மார்கள
        புடைசூழ்ந்தார். தேசிங்கும் அங்கு வந்தான்.
கேட்கலுற்றான் என்னஇது என்ன என்றே
        கிட்டஇருந்தோரெல்லாம் தெரியா தென்றார்.

படைவீரர் தமக்குள்ளே நடந்ததென்றால்
        படுகொலைசெய் தோன்யாவன்? என்று கேட்டான்
படைவீரன் அல்லாது பிறரே என்றால்
        பலகாவற் கட்டங்கள் தாண்டி எந்தக்
கடையன்இங்கு வரமுடியும்? கோட்டை வாசல்
        காத்திருந்தோன் என்னசெய்து கொண்டிருந்தான்!
நடைமுறைகள் இப்படியா? பகைவர் கையை
        நத்திடுவோர் இங்குண்டா? புதுமை யன்றோ!

போட்டசட்டை யைத்துளைத்து மார்பெ லும்பைப்
        புறம்விலக்கிப் பாய்ந்திருக்கும் கத்தி தன்னை
மீட்காமல் சென்றவனைப் பிடிக்க வேண்டும்;
        விளைவுக்குக் காரணத்தை யறிதல் வேண்டும்;
கேட்டுக்கொண் டிருக்கின்றீர்; தெரிந்தி ருந்தால்
        கேடில்லை! செப்பிடுவீர் உண்மை தன்னை
வாட்டுகின்றீர் என்னுள்ளம்; சூழ்ச்சி தானோ!
        மற்றென்ன மற்றென்ன எனத்து டித்தான்!

கூட்டத்தில் திம்மனுளம் பட்ட பாடு
        கூறத்தான் முடியுமோ! அந்தோ அந்தோ!
காட்டிவைத்தான் எனக்கிந்த வேலை தன்னைக்
        கடல்போன்ற அன்புடையான் என்னிடத்தில்
நீட்டிவைத்த வில்லைப்போல், மணித்தேர் போலே
        நிலைகெட்டு வீழ்ந்திட்ட புலியைப் போல
ஊட்டத்து மார்புடையான் சுபேதார் மண்ணில்
        உயிரின்றிக் கிடக்கின்றான் எவன் செய்தானோ?

மன்னவரோ, அறிவீரோ எனக்கேட் கின்றார்
        வாய்திறவா திருக்கின்றேன்; வாய்தி றந்தால்
என்னவரு மோஅறியேன், வழிதான் என்ன?
        என்றுபல வாறெண்ணி இருக்கும் போது,
மன்னவரே பணிகின்றேன் என்று கூறி
        வந்தெதிரில் நின்றுரைப்பான் ரஞ்சித் சிங்கன்
என் நண்பன் சுதரிசன்சிங்க்! அவனைப் பற்றி
        என்றனுக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன்;

திம்மன்எனும் பேருடையான் வளவனூரில்
        தென்பட்டான் சுதரிசனின் கண்ணில் ஓர்நாள்!
அம்மட்டே அவனோடு வீடு சென்றான்;
        அங்கோர்நாள் விருந்துண்டான் அவன்மனைவி்
செம்மையுறும் அழகுடையாள்; அவளின் மீதில்
        சுதரிசன்சிங்க் திருப்பினான் உளத்தை! அன்னாள்.
திம்மனைஅல்லால்வேறு மனிதர் தம்மைத்
        திரும்பியும்பார்ப்பவளில்லை; சுதரிசன் சிங்க்

திம்மனையும் மங்கையையும் அழைத்துக் கொண்டு
        செஞ்சிக்கு வந்துவிட்டான். ஆசை காட்டிக்
திம்மனுக்கு வேலைதருவ தாகச் சொன்ன
        சேதியினால் திம்மனவன் ஒப்பி வந்தான்
அம்மங்கை கணவன்சொல் தட்ட வில்லை!
        அவள்மட்டும் சுபேதாரை நம்ப வில்லை!
திம்மனையும், வஞ்சியையும், சுபேதார் செஞ்சிச்
        சேரியிலே குடிவைத்தான் வந்த அன்றே!

குப்பென்றும் முருகிஎன்றும் சொல்லிடும்தன்
        கூத்திமார் இருவரையும் அவர்களோடு
நற்பணியாளர்போலே இருக்கச் செய்தான்.
        நானுரைக்கும் அப்பெண்கள் இப்பிணங்கள்!
அப்பரே இதுதான்நான் அறிவேன் என்றான்.
        'அழையுங்கள் அழையுங்கள் திம்மன் தன்னைத்
துப்பியது காயுமுன்னே' என்று தேசிங்க்
         துடிதுடித்தான் நெருப்புப்பட்டவனைப் போலே.





( 195 )





( 200 )




( 205 )




( 210 )




( 215 )





( 220 )





( 225 )




( 230 )





( 235 )





( 240 )




( 245 )





( 250 )




( 255 )

திம்மன் நான் என்றான்

எண்சீர் விருத்தம்


திம்மன்பெண்டாட்டிஎங்கே என்றான் மன்னன்!
         தெரியவில்லை என்றார்கள் சிப்பாய் மார்கள்!
திம்மனெங்கே எனக்கேட்டான் பின்னும் மன்னன்
         நான்தான் என்றெதிர்வந்தான் தமிழத் திம்மன்
திம்மன்எனல் நீதானா? யார்கொ டுத்தார்
         சிப்பாய்வேலையுனக்குச் செப்பாய் என்றான்.
திம்மன'்இவரே' என்றான் பிணத்தைக் காட்டி!
         தேசிங்கும் சுதரிசனின் சூழ்ச்சி கண்டான்

பொய்யுடையச் சுதரிசன்சிங்க், திம்மனுக்குப்
         போட்டஒரு குற்றத்தை அறிந்த மன்னன்
மெய்பதைத்தல் இல்லாமல் திம்மா இந்த
         மிகக்கொடிய செயல்செய்தோன் யாவன் என்றான்.
செய்யாத குற்றத்தைச் செய்திருப்பான்,
         செத்திருப்பான். நள்ளிரவிற் செஞ்சி வந்தேன்
வெய்யில்வரா முன்னமே சிங்கன் என்னை
         வீட்டிலிருநது் இவ்விடத்தில் அழைத்து வந்தான்.

இதுவரைக்கும் வெளிச்செல்ல வில்லை என்றான்.
         உன்மனைவி எங்கென்றான் தேசிங்க் மன்னன்
அதுஎனக்குத் தெரியாதே என்றான் திம்மன்!
          அவனுக்கு வேறுதுணை உண்டோ என்றான்.
புதியஊர், துணையில்லை என்றான் திம்மன்.
         பொய்ஒன்றும் கூறாதே என்றான் மன்னன்!
பதறியே பொய்யல்ல என்றான் திம்மன்!
         பழஊராய் இருந்திட்டால் பத்தினிக்கே

பலதுணைவர் இருப்பாரோ என்றான் மன்னன்.
         பலஉறவோர் துணையிருப்பார் என்றான் திம்மன்.
தலையுருண்டு போகுமடா திம்மா அந்தத்
         தமிழச்சி இருப்பிடத்தைககாட்ட வேண்டும்!
* நிலையறியாத் திம்மனைநீர் இழுத்துச் செல்வீர்
         நெடுவீதி தொறுந்தேடச் செய்வீர் இன்னோன்
கொலைக்கொத்த தோழரையும் அஞ்சா நெஞ்சக்
         கூத்தியையும் பிடிப்பீர்என்றுரைத்தான் மன்னன்.

அமுதொத்த பெண்ணாளைக் கற்பின் வைப்பை
         அயலானின் கூத்திஎன்று சொல்லி விட்டீர்
தமிழச்சி கத்திஐயா அந்தக் கத்தி!
         தடமார்பில் நுழைத்தகத்தி நுழைத்த வண்ணம்
அமைந்துவிட்டுப் போயினாள். அவளின் பேரை
         அதுசொல்ல வேண்டுமென நினைத்தாள் போலும்
தமைக்கெடுக்க வந்தவனைக் கொல்லும் பெண்கள்
          தண்டிக்கப் படவேண்டும் என்று சொன்னால்,

நான்தேடி அழைந்துவர அட்டிஇல்லை.
         நடுமார்பில் நிற்கின்ற கத்தி யே!உன்
தேன்போன்ற சொல்லாளைத் தலைவி தன்னைத்
         தெரிவிப்பாய், எங்குள்ளாள்? செங்குத் தாக
வான்பார்த்து நிற்கின்றாய் சிங்கன் மார்பில்.
         வானத்தில் அவளாவி அளாவிச் செல்லத்
தான்மறைந்து போனாளா வாழ்கின்றாளா?
         சாற்றுவாய் எனத்திம்மன் வாய்பதைத்தான்.

அங்கிருந்த சிப்பாய்கள் இருவர், திம்மன்
         இருகையைப் பின்கட்டி அழைத்துச் சென்றார்
குரலொலியும் உள்அழுந்த நடந்தான் திம்மன்!
         கூர்வாளை உயர்த்திநடந்தார்சிப்பாய்கள்.
பெரிதுயர்ந்த குன்றத்தின் சாரல் தன்னில்
         பெண்ணாளும், செங்கானும் ஓர்ஆலின்கீழ்
தெரியாமல் நின்றிருந்தார்! திம்மன் மற்றும்,
         சிப்பாய்கள் வரும்நிலையைத் தெரிந்து கொண்டார்

* இது அங்கிருந்த சிப்பாய்களை நோக்கிச் சொல்லுவது.





( 260 )




( 265 )




( 270 )





( 275 )





( 280 )




( 285 )





( 290 )




( 295 )





( 300 )







( 305 )




( 310 )