பக்கம் எண் :

மணிமேகலை வெண்பா

ஆபுத்திரன் புகழ் விண்ணினும் பெரிது

ஒழுக்க மெனுநல் லுறுதுணைக் கேபே
ரிழுக்கம் புரிவார்க் கெதிர்ப்பு-முழக்கம்
புரிந்திட்ட ஆமகன் பெற்ற புகழ்தான்
விரிந்திட்ட விண்ணிற் பெரிது.



கொலை வேள்வியை எதிர்த்தவன் ஆபுத்திரன்

வேள்வி எனஉரைத்து மாடாடு வெட்டலும்
கேள்வியே இன்றிக் கிளத்தலும்-நீள்வியான்
ஆமகன் பெற்ற புகழ்தன்னை அந்நாளில்
கோமகன் பெற்றானா கூறு.
( 5 )


எத்தீமைக்கும் ஆபுத்திரன் இளைத்து விடவில்லை

அறத்தினைச் சார்ந்தே அடைத்த புகழை
அறத்தினுக் கேசெல வாக்கும்-திறத்தைக்
குறுகிய கொள்கையார் கொல்ல நினைத்தார்
இறுகிய நெஞ்சா இறும்?

( 10 )

பிற்போக்காளரின் தலைவன் ஆபுத்திரனைக் கெடுக்க
நரிவேலை செய்தான்

இருளில் உலகை நடத்துவார்க் கேந்தல்
அருளில் நடந்தானை அண்டி-மருளில்
நடந்த நரிவேலை செய்ததும் உண்டு
கடப்பானா கொண்ட கருத்து.


( 15 )
ஆபுத்திரன் வரலாறெல்லாம் சொல்லி முடிக்கப்பட்டது

என்று சிறப்பிடங்கள் சுட்டி அறவணர்
நன்று முதலிருந் தீறுவரை-ஒன்றவே
ஆமகனின் அன்பு வரலாறெ லாம்சொல்லிப்
போமகளே என்றார்அப் போது.



( 20 )
மணிமேகலை பிச்சைக்காரியானாள்

ஏன்று கலம்ஏந்தி மேகலைதான் அன்னவரை
மூன்று முறைசுற்றி முன்வணங்கி-மான்போல்
மருண்ட வழிநடந்தாள் மற்றவரை விட்டே!
தெருண்டு வழிநடக்கும் தேன்.



எல்லோரும் மணிமேகலையைச் சூழ்ந்து கொண்டார்கள்

ஊர்ப்பிச்சைக் காரி உருவடைந்தாள் அவ்வுருவைச்
சேர்ப்பித்தாள் நல்ல தெருவழியே-வார்ப்படத்துத்
தங்கப் படிவம் தரையில் வரக்கண்டோர்
அங்கப் படியேசூழ்ந் தார்.

( 30 )

எல்லோரும் வரவேற்கிறார்கள்

கண்ணம்மா உன்வரவு! கைநிறைய இட்டிடுவோம்
உண்ணம்மா என்றேஓ ராயிரம்பேர்-வண்ணம்
இருக்கும் படிவத்தார் சொன்னார்கள் சற்றே
இருக்கும் படிசொன்னாள் யாழ்.


( 35 )
ஆதிரை வீட்டில் மணிமேகலை

கற்புப் புகழ்வாய்ந்தோள் உள்ளாளோ அன்னவளின்
இற்புக்கு முன்இடக்கேட் பாய்என்ற-சொற்பெருக்கிக்
காயசண்டி கைஎன்பாள் ஆதிரைஇல் காட்டினாள்
போயறங்கேட் டாள்சுடர்ப் பொன்.



( 40 )
ஆதிரை வரவேற்பு

கையிற் கலத்தோடும் கண்ணில் அருளோடும்
பொய்யில் துறவென்னும் பூட்கையொடும்-துய்யமணி
மேகலையை ஆதிரை கண்டாள் மிகமகிழ்ந்தாள்
ஆகஅம் மாஎன்றாள் ஆய்ந்து.



ஆதிரை கறியோடு சோறிட்டாள்

தேவர் உலகம் சிறப்பென்னும் ஆரியர்சொல்
ஈவார் உலகம் இழிவாக்கப்-பாவை
கலமே நிறையக் கறியொடு சோறிட்டாள்
இலமே இலம்என்னு மாறு.
( 45 )


ஆதிரை வாழ்த்து

அழகும் இளமையும் எண்ணாய் துறவே
பழகும் இளையாய் பசுநெய்-ஒழுகக்
கலத்திலிட் டேவிரு கையாலும் சோறு
நிலத்து நிலைக்கநின் சீர்.

( 50 )

ஆதிரை இட்ட அமிழ்து

கண்டனர் ஊரார் கடிதுகேட் டார்பாரோர்
மண்டினோர் எல்லாரும் வாழ்த்தினார்-அண்டுமுயிர்
ஏதிரை என்னாமைக் கிங்கு முதன்மையாம்
ஆதிரை இட்ட அமிழ்து.


( 55 )
மணிமேகலை எல்லார்க்கும் இட்டாள்

இலம்நிறைந்தார்க்கல்லாம் மனம்நிறைந்த தென்னக்
கலம்நிறைந்து போனது கண்டு-நலம்நிறைத்தாள்
வாரீர்உண் பீர்என்பாள் வந்துண்பார், பின்னும்இலார்
வாரீர்என் பாள்உண்பார் வந்து.



( 60 )
காயசண்டிகை சொன்னாள்

காயசண்டி கைஎன்பாள் மாதவியின் கண்ணாள்முன்
நீயறத்தின் செல்வியென்று நேர்வந்து-தாயேநான்
யானைத்தீ என்னும் பசியுடையேன் வற்றாஉன்
தேனத்தீ னேன்என்றாள் தேர்ந்து.



யானைத் தீ என்பதென்ன?

வயிறுநிறைந் தாலும் மனநிறையார்க் குள்ள
இயல்பின்பேர் யானைத்தீ என்பர்-துயரறுக
சாப்பிடுநீ சாப்பிடு நீ சாப்பிட்டு நன்னிலையைக்
கூப்பிடுநீ என்ன குறை?
( 65 )


சொல்லால் பாதி தொல்லை போயிற்று

என்றுரைத்தாள் மேகலைதான் ஈபவளே சொன்னதனால்
நின்றபிணி யிற்பாதி நீங்கிற்றாம்-நன்றுண்டாள்
மேலுண்டாள் மற்றுண்டாள் மேன்மேலுண் டாள்நாட்கள்
நாலுண்டாள் நன்னிலையுண் டாள்.

( 70 )

காயசண்டிகை நோயகன்றது

ஆறென்றால் ஆறாத யானைத்தீ ஆறியது!
சோறென்றால் முப்போதே துய்க்கின்றேன்-கூறென்றால்
பட்ட தொல்லை பஞ்சு படாதம்மா! பெற்று விட்டேன்
விட்டதொல்லை யாலே மிடல்.


( 75 )
v
காயசண்டிகை கணவனை நொந்தாள்

என்னை உடையான் எனக்குநோய் என்றவுடன்
தன்னை உடையானைத் தான்பிரிந்தான்-பின்னுமவன்
காவிரிப்பூம் பட்டினத்தில் காத்திருந்தால் சான்றோர்கள்
நாவிரிப்பார் நன்றாம்என் றான்.



( 80 )
என் கணவர் ஒரு மரம்

சிற்றுளியும் நன்மை சிதைந்தால் சிதைவகற்றிப்
பொற்றுளிபோல் போற்றத் தவறிடார்-நற்றொழிலோர்!
தீராநோய் எங்கேனும் தீர்த்துவா என்றானை
ஆராயின் அன்னோன் மரம்.



அறம் எது!

அறஞ்சென்று கெட்டாரு மில்லை அறத்தின்
புறஞ்சென்று வாழ்ந்தாரு மில்லை-பறந்த
கிளிவாய்ப் பழம்நழுகிக் கீழ்ப்பசித்தோன் வாயில்
துளிவீழல் தூயற மன்று.

( 90 )

நல்லறம்

அறிந்து பசித்தோர்க் கருளல் அறமாம்
முறிந்த மனத்தாலே மூன்று-முறஞ்சோறு
போடல் அறமன்றே என்று புரிந்தாய்
வாடல்இங் கேன்என்றாள் மாது.


( 95 )
உலக அறவி பற்றிக் காயசண்டிகை

உலக அறவி புகுந்தே உலகின்
கலகப் பசிநோய் களைந்து-நிலவுகவே
என்றுசெல் லும்காயசண்டிகையை இன்னமுதே
நன்றுசெல்க என்றாள் நகை.



( 100 )
மணிமேகலை உலக அறவி அடைந்தாள்

ஈந்து மகிழ்வாள் எழிற்றா மரைமுகத்தேன்
ஏந்துவாள் போற்கலத்தை இன்னமுதோ-டேந்திய
வண்ணம் உலக அறவி மருளினாள்
தண்ணம் தமிழ்க்குயில் தான்



உலக அறவி புக்காள் மணிமேகலை

ஒளிந்து நடந்த ஒருமயிலை ஊரார்
தெளிந்து செறிந்து வரவும்-குளிர்ந்தநிலா
இன்னம் உணவுண்ண வாரீரோ என்றபடி
தன்னந் தனிநுழைந்தாள் உள்.
( 105 )


மறைமலை அடிகளின் சொற்பெருக்கா?

அறவி அகத்தும் புறத்தும் இளைய
துறவி முகம்பார்த்துச் சூழ்ந்தார்-நிறைகலி
ஆர்கலியோ அண்ணல் மறைமலைசொல் கேட்டாரால்
நேர்கலியோ என்னும் நிலம்.

( 110 )

சித்திராபதி வீட்டில்

பேர்த்தி துறவும் பெருநிலையம் சென்றதுவும்
நேர்த்தி எனவிரல் நேர்உதட்டில்-சேர்த்தியே
மாதென்ன மாதோ வழிதப்பக் கேட்டஎன்
காதென்ன காதோஎன் றாள்,


( 115 )
உதயகுமரனிடம் ஓடினாள் சித்தராபதி

எனச்சித்தி ராபதிதான் ஏதேதோ கூறி
மனச்சிற்றில் வேக மடிகண்-சினத்தால்
எரிய இளவரசன் எங்கென்று கூந்தல்
சரியச்சென் றாள்வீட்டை விட்டு.



( 120 )
ஆள் போய் உதயனிடம் சொன்னான்

இல்லில்லை என்று பளிக்கறையில் ஓர்ஆள்போய்ப்
பல்லில்லை என்று படுகிழவி-பொல்லா
உதட்டால் உமைப்பார்க்க வேண்டுமென் கின்றாள்
அதட்டவா என்றான் அவன்



சித்திராபதியைக் கூட்டிவா என்றான் உதயன்

கண்டசித்தி ராபதியைக் கையோடு நீகூட்டிக்
கொண்டுவா என்றுதையன் கூறவே-பண்டைக்
கிழமே! கிளிக்காட்டில் கெட்ட சுளைமாம்
பழமேபோ பார் என்றான் ஆள்.
( 125 )


சித்திராபதியைக் கூட்டிவா என்றான் உதயன்

கண்டசித்தி ராபதியைக் கையோடு நீகூட்டிக்
கொண்டுவா என்றுதையன் கூறவே-பண்டைக்
கிழமே! கிளிக்காட்டில் கெட்ட சுளைமாம்
பழமேபோ பார் என்றான் ஆள்.
( 125 )


மந்தியுடன் மன்னன் மகன்

குந்தி யிருந்த குமரனெதிர்க் கூன்முதுகு
மத்தி இருந்துதன் வாய்திறந்தாள்-சிந்தும்
கொழகொழத்த ஓசையெல்லாம் கொண்டுபொருள் கொள்வான்
இழவேஎன் றேஇளங் கோ.

( 130 )

என் மகள் பகை ஐயா

கோவலன் செத்ததனைத் கொண்டுமகள் மாதவிநான்
நோவத் தவத்துறையை நோக்கினாள்-யாவர்
நகையாரை யா? நங்கை யல்லா லெனக்குப்
பகையாரை யாநூற் படி.


( 135 )
பொது மகளிர் வழக்கம்

முற்புணர்ந்தான் செத்தால்பெண் முற்றும் துறப்பதெனும்
கற்புணர்ந்தால் கைச்செலவு கட்டுமா?-இற்புகுந்து
தொட்டாலே பொன்கேட்போம் தொட்டிருந்தால் சொத்தடைவோம்
விட்டாலோ வேறாள்என் போம்



( 140 )
யாழ் பொது

பாணன் இறந்துவிட்டால் யாழோ பலர்க்காகும்!
காணுமலர் உண்ணும் கருவண்டு-நாணமேன்?
பொன்றருமாண் பாலோர் புணரத் தகுந்தவரே
இன்ன்றக்கா யாமிப் படி



v
இன்பத்திற்கு வாழ்வா? துன்பத்துக்கா?

வளவரை சேர்மந்தி பலாவை விடாநாட்
டிளவரசே! என்றன் இளையாள்-உளவரைக்கும்
இன்ப முழுவதுவும் எய்தலாம்; எய்தாமல்
துன்பமுழு தும்தோய் வதோ?
( 145 )


மணிமேகலையைக் கொள்ளாமல் விடுதல் இழிவு

என்னழகை என்றன் மகளழகை மற்றழகைத்
தன்னழகாக் கொண்ட தனியரசைப்-பின்னரசே
கொள்ளல் புகழைக் கொடுக்கும்; புனிதத்தைத்
தள்ளல் இகழைத் தரும்.

( 150 )

v
மணிமேகலையைக் கொள்வது பண்பாடு

முகத்தை நிலவால் முடித்து விரலின்
நகத்தைக் கிளிமூக்கால் நாட்டி-முடித்த
அழகு முடிப்பை எடுத்து முடித்தல்
பழகுமுடி வேந்தர்பண் பாடு.


( 155 )
அவள் மெய்இன்ப ஊற்று

மைவேண்டாம்; கண்ணல்ல நெய்தல் மலர்கள்
நெய்ஏன்; குழலன்று நீளருவி-பொய்யன்று
பூண்வேண்டாம்; மேனியன்று; பொன்னின் ஒளிப்பிழம்பே
ஊண்ஏன்? மெய் அன்றின்ப ஊற்று.



( 160 )
தாமரைப் பொய்கை

ப ணிமே வரசுக்குப் பட்டத்தரசி
மணிமே கலையல்லால் மற்றார்-தணியாத
ஆசை அனலுக்குத் தாமரைப் பொய்கை அன்றோ
மீசையுளார் சொல்க விரைந்து.



மேகலை கிடைத்தால் எல்லாம் கிடைக்கும்

பல்லெல்லாம் வெண்முத்துப் பந்தர்! கிளிநாணும்
சொல்லெல்லாம் முத்தமிழ்ச் சோலையே-வெல்லரிய
தென்றுவரின் கொத்துச் சிரிக்குமிதழ் மேகலைதான்
ஒன்றுவரின் எல்லாம் உனக்கு.
( 165 )


என் விண்ணப்பம் காண்!

கட்டழகா காண்பாய்என் விண்ணப்பம்! உன்னடியில்
இட்டழவே இங்குற்றேன் என்னெனில்-ஒட்டாரக்
காரிதனைக் கைக்கெள்க காற்றாய் பறக்குமுன்
தேரிதனைச் செய்க விரைந்து.

( 170 )

அவள் உலக அறவியில் உள்ளாள்

உலக அறவியினில் உள்ளாள்என் மூச்சு
விலக அறவிடேல் என்னை-இலகணையின்
மென்பஞ் சுமக்கமையும் வேளைஇது! மற்றிதுவே
இன்பம் சுமக்கும் இனிது.


( 175 )
உதயன் தேரேறி விரைவாய்ச் சென்றான்

ஏற்பாரை நோக்கிக் கிழவி இடலானாள்
மேற்பாரை நீங்கமலை விட்டெழுந்தீப்-போற்பாரோர்
தங்கோமான் பிள்ளைபோய்த் தட்டிய தேர்ப்பரிகள்
தங்கோமான் என்பன; தாம்.



( 180 )
மணிமேகலையை உதயன் மறித்தான்

உலக அறவி உலவு நிலவை
விலக விடாது மறித்து-நிலமீது
செப்புக் குடம்படல் தெண்ணீர்க்கும் ஆம்காம
வெப்புக் குடம்படல் வேண்டு.



இன்பம் துறப்பது கட்டாயமா?

ஏனித் துறவு மணிமே கலைஎன்தீர்
மானித்துறவு மறந்தாய்-நான்நீ
இறப்பதுகட் டாயம் இடைநடுவில் இன்பம்
துறப்பது கட்டாயமா சொல்?
( 185 )


மணிமேகலை கூறுவாள்

என்றுதையன் சொல்ல எதிர் வணங்கி ஐயாவே
ஒன்றுதையல் சொல்வேன் உளங்கொள்க-என்றும்
இடும்பை மலையென எள்ளென நேரும்
இடும்பைஇவ் யாக்கை அன்றோ?

( 190 )

மும்மைத் தமிழ் காண்க

பொன்னெனப் பூவெனப் போரென நேரென
என்னென சொல்லினும் இன்னலின்-முன்வலைஎன்
றான்றோர் அணுகார் அவற்றால் துயரெய்தார்
சான்றோர்க; மும்மைத் தமிழ்.


( 195 )
வள்ளுவன் சொல் ஓர்க

'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்'என்றே-ஓதினார்
வள்ளுவர்; அன்னாரின் வாய்மை யதனையோ
எள்ளுவர் எய்தார் நலம்.



( 200 )
மணிமேகலை உருமாறினாள்

ஈதுபுகன்ற மணிமே கலைஇனியும்
தீது செயக்கூடும் என்றுட்போய்-மாதான
காயசண்டி கைபோலக் காணுருமாற் றித்தெருவிற்
போயகன்றாள் கைக்கலமும் பூண்டு.



உதயன் ஏமாற்றம்

இன்னுமவள் உள்ளே இருக்கின்றாள் என்றிருந்தான்
பின்னும் அவளைப் பெறாதகலேன்-என்றங்கே
நின்றிருந்தான் நெஞ்சை நிலைகேட்டான் வீடுபோய்
நன்றிருந்தான் நாட்டான் மகன்.
( 205 )


மணிமேகலை தொண்டு

நிலையத்தில் நல்லுணவு வந்து நீட்ட
மலையத் தனையளவு மண்ட-அலைபோல்
வறியார்கள் வந்து வயிறார்ந்திட் டார்தேக்
கெறிவார்கள் எண்ணற் றவர்

( 210 )

அவள் பறித்த அறம்

இடுகை மகிழ்ந்திடுவாள் ஏழைகள் தன்பால்
கடுகையில் தன்கை கடுக-மடமடென
அள்ளி இடுவாள்நல் லின்பம் அதிற்பறிப்பாள்
கள்ளி மணிமே கலை


( 215 )
என் மாற்றுருவம் பயன்பட்டது என்றாள்

தான்கொண்ட காய சண்டிகையின் நல்லுருவம்
தான்கொண் டிருப்பதே நன்றென்பாள்-ஏன்றவர்கள்
தேன்கண்டு நெய்பால் தயிர்கொண்டு வந்தாலும்
தான்கண்டு வாங்குவாள் தாழ்ந்து.



( 220 )
ஏந்துகை காணாத நேரம் கண் துயிலும்நேரம்

ஈந்தன எல்லாம் இனப்படுத்திச் சோறுகழி
வாய்ந்தன ஆக்கி வறியோரின்-ஏந்துகை
காணாத நேரமதன் கண்துயிலும் நேரமென்றாள்
வாணாள்வா ணாளாக்குகின்ற மான்.



v
ஊருக்குத் தாய்

தெருவில் கடையில் சிறுமுடக்கில் வீட்டின்
அருகில் முதியோர் அழிந்தார்-திரியுறுப்பர்
வாயூட்டி நெஞ்சம் மகிழ்வாள் தமையீன்ற
தாயூட்டி னாற்போலும் சார்ந்து.
( 225 )


சிறைப்பட்டோரும் திருத்தப்பட்டார்

வேந்து சிறைக்கூடம் மேகலைதான் சென்றங்கே
ஈந்த முதலீகைக் கெட்டாநாள்-தேர்ந்த
கொலை கண்டார் தாமும் குறைகண் டுணர்ந்த
நிலைகண்டாள் நெஞ்சுவந்தாள்.

( 230 )

எல்லோரும் திருந்தினார்கள்

சோறும் மிகக்கொடுத்துச் சொற்பொழிவும் தானடத்தி
ஊறு பிறர்க்கொருவர் உன்னாத-வாறு
முறைகண்டாள் மூன்று தமிழ்கண்டாள், நாட்டில்
சிறைகண்டார் தீங்குகண்டார் யார்?


( 235 )
நாட்டு நிலையறிதல்

நாட்டு நிலையறிந்து தொண்டு நலமறிந்து
காட்டுக் குயிலைக் கடிதழைத்துச்-சூட்டும்
முடியரசும் ஆட்சி முறைஎவ்வா றென்றான்
குடியரசும் சொன்னாள் குறை.



( 240 )
அரசன் மேகலை நேர்பாடு

முறையிருக்கும் போது சிறைஎதற்கு வேந்தே?
குறையிருக்க ஆட்சிசெயல் குற்றம்-இறைகேட்க;
மாணவரின் வாய்க்குத் தமிழும், மனத்துக்கச்
சாணி அறிவும் உயிர்.



கட்டாயக்கல்வி தேவை

கல்லார் கடைப்பட்டார் ஆதலினால் கல்விதான்
எல்லார்க்கும் கட்டாயம் வேண்டுமால்-இல்லார்க்கோ
ஊணுடை நல்ல உறையுள் படிப்பளித்தல்
மாணுடை மன்னர் கடன்.
( 245 )


தமிழின் இன்றியமையாமை

ஆசைக் களவில்லை ஆதலினால் மாந்தர்கன்
காசைப் பெருக்கக் கருதுவர்-ஆசைதான்
உந்தா தடக்குதற்கும் உள்ளுணர்வு சேர்வதற்கும்
செந்தமிழைச் சேர்க்க இறை.

( 250 )

வேந்தன் வேலை தொடங்கினான்

மேகலை இவ்வாறு விளம்பச் சிறையினை
மாகலைக் கூடமா மாற்றுதற்குப்-போக என
நல்லமைச்சர்க் காணை நவின்றான் நவின்றஅச்
சொல்லமைச்சுத் தொட்டார் வினை.


( 255 )
மணிமேகலை போக விடை பெற்றாள்

எல்லார்க்கும் கல்விதான் கட்டாயம் என்றபடி
இல்லார்க்குக் கல்வியும் ஏற்றவை-எல்லாமும்
ஆம்படி ஆக்குவேன் என்றான் விடைகேட்டாள்
போம்படி சொன்னார் புகழ்ந்து.



( 260 )
உதய குமாரன் மனக் கண்முன்

தார்வேந்தன் மைந்தன் தனியிருந்து மேகலைதன்
நேர்வாய்ந்தாற் போலும் நினைவாக-வார்வாய்ந்த
கொங்கையார் கோமாட்டி கொள்கலத்தோ டங்ககன்ற
மங்கையார் என்றான் மதித்து.



வானிலவு எங்கே?

உலக அறவியின் உட்சென்றாய்! ஓர்பெண்
விலகி வெளியில் நடந்தாள்-நிலையத்துள்
மீனெலாம் கண்டேன் மிகுநேரம் என்னருமை
வானிலா எங்கே வழுத்து.
( 265 )


நான் புகார் நாடன்

யானைத்தீ நோயாளி போல எழில்மாற்றிப்
பானைத்தேன் நீவெளியிற் பாய்ந்தாயே-மானுக்கு
வேடனா உள்ளத்து மன்னியோய் வேண்டுபுகார்
நாடனான் நன்கு மதி.

( 270 )

சித்திராபதி வரக்கண்டான்

பெண்நேரில் உள்ளாள்போற் பேசும் உதையனின்
கண்நேரில் கூனிவரக் கண்டுவிட்டான்-புண்நடுவில்
வேலொன்று பெற்றதுபோல் வெட்கினால் வந்தகிழத்
தோலொன்று சொல்லலா னாள்.


( 275 )
வேங்கை வெள்ளாட்டுக்குத் தள்ளாடுமா?

வெள்ளாடு கண்ட ஒருவேங்கை இரைதவறித்
தள்ளாடும் இஃது தனிவியப்பே-எள்ளாடும்
செக்கும் எருதிழுக்கும் தேன்சுட்டும் நின்வலைக்குச்
சிக்கும்என் றாள்உடைந்த சீப்பு.



( 280 )
களிறு கன்னல் ஒடிப்பதும் அரிதா?

நாளைக்கே ஏதிலான் நாடு பிடித்தாளும்
காளைக்கே வஞ்சியின் காம்பான-தோளைப்
பிடித்தல் அரிதா பெருங்களிறு கன்னல்
ஒடித்தல் அரிதா உரை.



சித்திராபதி எண்ணம் என்ன?

என்று முடுக்கினாள் அன்னாள் இளவரசை
ஒன்று கொடுத்தொன்றை வாங்கியே-தின்று
கொழுக்கலாம் என்னுமொரு கொள்கையால் கூனி
முழுக்கலாம் மூட்டினாள் ஆங்கு.
( 285 )


மணிமேகலையிடம் ஓடினான் உதயன்

மாலையுற்றான் மாலையிற்றான் மேகலைமேல் மாலை வைத்தே
ஆலையுற்றான் அக்கரும்பின் சாறுபற்றல்-ஏலுமென்றே
காயசண்டி கையுருவின் கண்ணகியின் பெண்ணையுற்றுத்
தீயசண்டை கைவிடென்றான் சேய்.

( 290 )

என்னை அல்லால் உனக்கு யார்?

மைகாரி சண்டிகையாய் மாறி உலவுகின்ற
கைகாரி மேல்நடக்கும் காரியம்என்-மொய்காரின்
கூந்தலாய் வாஎன்று கூறினோன் யார்இந்த
ஏந்தலை அல்லால் இனிது,


( 295 )
தன் தகுதியை மேலும் கூறுகிறான் உதயன்

என்னிலும் மேலோன் இருக்கின்றான் போலும்நான்
உன்னிலும் மேலாம் ஒருத்தியையும்-உன்னுகிலேன்
அன்றில் உனையழைத்த அன்றில்யான்! யாவர்சொல்
மன்றில் உனையழைத்தார் மற்று.



( 300 )
இளமை நிலையாமையை எடுத்துக் காட்டினாள்
மணிமேகலை

அங்கு விழுந்தெழுந் தாடிநிற்கும் ஓர்கிழத்தைத்
திங்கள் எழுந்த திருமுகத்தாள்-இங்கேகாண்
எங்கே அழகிளமை? எத்தனைநாள் முத்துப்பல்
தொங்கும் துரிஞ்சில் முலை.



காப்பது தவமே

பற்றினோர் துன்பமே பற்றினோர்! நற்றுறவு
பற்றினோர் துன்பமே பற்றாதார்-எற்றுக்கோ
காமம் எதற்குமனக் கோட்டம் இவ்வுலகில்
ஏமம் எவர்க்கும் தவம்.
( 305 )


காஞ்சனன் ஐயப்பாடு

வாஞ்சநன் மாற்றமெலாம் மங்கைசொலும் போதங்குக்
காஞ்சனன் வந்துகண்டான் கண்ணேரில்-தீஞ்சொல்லாள்
காயசண்டி கைதான் கசந்தாளோ என்னைஎன்றான்
ஆயஅண்டி னான் அவளை அங்கு.

( 310 )

என் காயசண்டிகையே

என்காய சண்டிகையே இன்னல்சேர் உன்நோயும்
நன்காய தோஎன்றான்! நங்கைதான்-வன்காயை
மெல்ல நினையாள்போல் வேந்தன் மகனிடத்தே
சொல்ல நினைத்தாள் தொடர்ந்து.


( 315 )
மனத்தூய்மையே தவம்

மனந்தன் நிலையினில் மன்னல் பொருளாம்
மனம்பெண்பொன்மண்மேற் செலுமேல்-துனியாம்
உவந்தலை யாதுமனம்பயில் விப்பவர்
தவந்தலைப் பட்டவர் தாம்.



( 320 )
தவம் துயர் மாற்றும் மருந்து

தனக்கென வாழாமை தான்பிறர்க் காதல்
சினம்பகை என்றும்எண் ணாமை-அனைத்தும்
வருந்துயர் நீக்கிடும் ஆயின்நற்ற வந்தான்
இருந்துயர் எற்றும் மருந்து.



அருளின் தழைவே தவம்

தவமோ அருளின் தழைவாம்; அருளோ
எவர்மாட்டும் ஏதில் இரக்கம்-உவப்பப்
பிறர்க்குழைத் தின்புற் றிருப்பதும் நன்றே
இறப்பதும் இவ்விரண்டும் வீடு.

( 325 )

காஞ்சனன் ஐயப்பாடு

இதுகண்ட காஞ்சனன் என்சொல் விரும்பாள்;
எதுகண் டவன்பால் இருந்தாள்?-அதுகாண்பேன்
என்றே ஒளிந்திருந்தான் இன்னல் மனத்துடன்
ஒன்றி அநிவியி னுள்,

( 330 )

உதயகுமரனின் ஐயப்பாடு

தன்மனத்துள் மன்னன் மகனுமே சாற்றுவான்
என்மனத்தை வேறொன்றில் ஏகவைத்தாள்-அன்னவன்பால்
அன்புடையாள் போலும்! அறிவேன் எனச்சொல்லி
வன்புடையான் சென்றான் மறைந்து


( 335 )
உதயன் பன்னே காஞ்சனன் சென்றான்

உலக அறவியில் உள்ள அறையில்
உலவி யிருந்த ஒருத்தி-நிலையினை
உற்றறிய வந்த உதையனனைக் காஞ்சனன்
முற்றறியச் சென்றான் முனைந்து.



( 340 )
உதயனைக் காஞ்சனன் வெட்டி வீழ்த்தினான்

எட்டியடி உள்ளறையில் இட்ட இளங்கோவை
வெட்டியடி வீழ்த்தினான் காஞ்சனன்-கட்டிக்
கரும்பே எனநெருங்கக் கண்ட இளமான்
விரும்பேல் விளம்புதல் கேள்.



காயசண்டிகை அல்லள்; இவள் மணிமேகலை

மணிமே கலையேநான் மாற்றுருவம் பூண்டேன்
அணிமேவு காயசண்டி கைபோல்!-துணிய
எனைப்பார் எனத்தன் இயல்உருவம் காட்டி
அனுப்பினாள் காஞ்சனனை அங்கு.
( 345 )


இறந்த உதயனுக்கு அழுதாள் மணிமேகலை

தன்னுடைபூண் டாள்காய சண்டிகைத்தோற் றம்தணந்தாள்
பொன்னுடை வேந்தன் புதல்வனைப்போய்-என் அசையா
நெஞ்சம் அசைத்தென் நினைவாற்செத் தாய்என்று
கொஞ்சி அழுதாள் குயில்.

( 350 )

அறம் பயிலும் நான் இறந்தானுக்கு அழுவதா?

அறந்தான் தவம்பயில் பள்ளிஅஃ தல்லால்
இறந்தானை எண்ணுதல் என்னாம்?-மறந்தும்
அழுந்தேன் துயரினில் என்றாளுக் காம்என்
றெழுந்தான் கிழக்கினில் என்று.


( 355 )
அமுதசுரபியைக் கண்டு பிச்சையிட்டவர்கள் பின்பு அஃது
இருக்கும் இடம்வந்து பிச்சையிடலானார்கள்

அமுத சுரபி அடையாளம் கண்டே
அமுதளித் தோர்பின் அதுதான்-அமைவிடம்
சென்றீய லாயினார் சென்றீயல் தம்கடன்
என்றீய லாயினார் பின்.



( 360 )
ஈதல் என்றால் அமுதசுரபிக்கு ஈதல்தான்

ஈதல் அமுத சுரபிக்கே ஈதல்என்
றோதலும் ஆனார் உலகத்தார்-ஈதல்
அமுத சுரபியே ஆகி ஈவானும்
அமுத சுரபிஆ னான்



ஐயம் ஏற்கும் மணிமேகலை அறமே செய்கின்றாள்

ஓம்புகார் என்னப் பசித்தோர்க் குதவுமோர்
பூம்புகார்க் கேறற் புகழெல்லாம்-ஆம்படி
செய்யு மணிமே கலையின் செயலெல்லாம்
ஐய மெனினும் அறம்.
( 365 )


அறவி முனிவர் அறிந்தார்கள்

அறமா மணிபால் உதையன் அடைவும்
மறமேவு காசனன் வாளால்-எறிந்ததுவும்
ஓர்ந்தார் உலக அறவி முனிவரெலாம்
போந்தார் புரைதீர்ந்தாள் முன்.

( 370 )

நடந்தது கேட்ட முனிவர்கள் தம் வருகையை
அரசனுக்குச் சொல்லி அனுப்பினார்கள்

அறைந்திருக்க உற்றவற்றை அன்னவர்பால் மங்கை!
மறைந்திருக்க! மாய்ந்தோன் உடலும்.....மறைத்து வைக்க?
என்றார் முனிவரெலாம் ஏந்தலைக் காணுதற்குச்
சென்றார் வரவுரைத்தார் தேர்ந்து.


( 375 )
v
வாயில் காப்போன் முனிவர் வரவை மன்னனுக்கு உரைத்தான்

அன்னது கேட்டநல் வாயிலோன் அங்கோடி
அன்னது செய்தியாம் என்னலும்-முன்னர்
வரவிடு கென்றுமா வண்கிள்ளி சொன்னான்
விரவினர் வேந்தன்முற் சென்று.



( 380 )
முனிவர் முடிந்தது கூறினார்கள்

வாழ்கமா வண்கிள்ளி நாளுமே செங்கோல்தான்
சூழ்கமா வண்புகழ்! தூயோய்நின்-வாழ்வில்
இதுவரை எய்தாத இன்னல்எய் திற்றால்
அதுவரை அன்று; பெரிது!



காமத்தால் செத்தவர்களின் கதைகள் பல

ககந்தன் மகன்தான் மருதிஎனும் கன்னல்
உகந்தன்னான் தந்தையால் ஊறுற்-றிகழ்வுற்றான்
முந்தை விசாகையினை மூத்தசேய் முன்னியதால்
தந்தையால் தானிறந் தான்
( 385 )


அன்று பல நடந்தன என்ற முனிவரை
இன்றும் உளதோ என்றான் மன்னன்

காமக்கள் உண்டவர் கற்பழித்துச் செத்ததனை
யாமிதற்கு முன்னுங்கேட் டோமன்றோ-கோமானே
என்று முனிவர் இயம்ப அரசனவன்
இன்று முளதோஎன் றான்.

( 390 )

மாதவி துறந்தாள் மகளும் துறந்தாள்

கோவலனார் குற்றமிலார்; ஆயினும் கோள்கேட்ட
காவலனார் கொல்லென்று காய்ந்தார்என்-றோவத்து
மாதவியும் நற்றவத்தில் மன்னினாள்; பெண்மணியும்
மாதவியே ஆனாள் மனம்.


( 395 )
மணிமேகலையிடம் உதயகுமரன் தன்
கையிருப்பைக் காட்டினான்

காயசண்டி கைஎன்று கண்டார் நினைக்கஅவள்
ஆயஉரு மாற்றி அம்பலத்தில்-தூயளாய்
ஏற்றலும் ஈதலும் செய்திருந்தாள் மன்னன்மகன்
ஆற்றலும் காட்டினான் ஆங்கு.



( 400 )
காஞ்சனன் உதயனைக் கொன்றான்

நள்ளிரவிற் நங்கையினை நண்ணும் இளங்கோவை
எள்ளியே காயசண்டி கைகணவன்-துள்ளியே
வாளாள் எறிந்தான் வழுவின்றி அங்குளோம்
ஆளால் அறிந்தோம்என் றார்.