இளையார்
ஆத்திசூடி
|
1. அழுபவன் கோழை
2. ஆவின் பால் இனிது
3. இரவினில் தூங்கு
4. ஈவது மகிழ்ச்சி
5. உள்ளதைப் பேசு
6. ஊமைபோல் இராதே
7. எதையும் ஊன்றிப் பார்
8. ஏசேல் எவரையும்
9. ஐந்தில் கலை பயில்
10. ஒற்றுமை வெல்லும்
11. ஓரம்போ தெருவில்
12. ஒளவை தமிழ்த்தாய்
13. கணக்கில் தேர்ச்சிகொள்
14. சரியாய் எழுது
15. தமிழ் உன் தாய்மொழி
16. நல்லவனாய் இரு
17. பல்லினைத் தூய்மை செய்
18. மற்றவர்க்கு உதவி செய்
19. வண்டி பார்த்து நட
20. கல்வி கற்கண்டு
21. கால் விலங்கு கல்லாமை
22. கிழிந்தாடை தீது
23. கீரை உடற்கினிது
24. குப்பை ஆக்காதே
25. ஊனி நடவேல்
26. கெட்ட சொல் நீக்கு
27. கேலி பண்ணாதே
28. கைத்தொழில் பழகு
29. கொடியரைச் சேரேல்
30. கௌவி உமிழேல்
31. சமமே அனைவரும்
32. சாப்பிடு வேளையோடு
33. சிரித்துப் பேசு
34. சீறினால் சீறு
35. செக்கெண்ணெய் முழுகு
36. சேவல்போல் நிமிர்த்து நில்
37. சை என இகழேல்
38. சொல்லை விழுங்கேல்
39. சோம்பல் ஒரு நோய்
40. தந்தை சொற்படி நட
41. தாயைக் கும்பிடு
42. தின்பாரை நோக்கல்
43. தீக் கண்டு விலகி நில் 44. துவைத்ததை உடுத்து
45. தூசியாய் இராதே
46. தென்னையின் பயன்கொள்
47. தேன் ஈ வளர்த்திடு
48. தைப் பொங்கல் இனிது
49. தொலைத்தும் தொலைத்திடேல்
50. தோற்பினும் முயற்சி செய்
51. நரிச் செயல் கான்று உமிழ்
52. நாட்டின் பகை தொலை
53. நினைத்ததை உடன் முடி
54. நீந்தப் பழகு
55. நுணல் வாயால் கெடும்
56. நூல் பயில் நாடொறும்
57. நெல் விளைத்துக் குவி
58. நேரம் வீணாக்கேல்
59. நைத்தது அறுந்திடும்
60. நொய்யும் பயன்படும்
61. நோய் தீயொழுக்கம்
62. பனைப்பயன் பெரிது
63. பாட்டிக்குத் தொண்டு செய்
64. பிறர்நலம் நாடு
65. பீளை கண்ணில் கொளேல்
66. புற்றில் கை விடேல்
67. பூச்செடி வளர்த்திடு
68. பெற்றதைக் காத்தல் செய்
69. பேராசை தவிர்
70. பையும் பறிபோம்
71. பொய் பேசாதே
72. போர்த் தொழில் பழகு
73. மாடு ஆடு செல்வம்
74. மிதியொடு நட
75. மீன் உணல் நன்றே
76. முத்தமிழ் முக்கனி
77. மூத்தவர் சொற்கேள்
78. மெத்தென்ப பெசு
79. மேலவர் கற்றவர்
80. மையினம் காத்தல் செய்
81. மொழிகளில் தமிழ் முதல்
82. வள்ளுவர் நூல் பயில்
83. வாழ்ந்தவர் உழைத்தவர்
84. விடியலில் கண்விழி
85. வீரசைப் போற்று
86. வெல்லத் தமிழ் பயில்
87. வேர்க்க விளையாடு
88. வையநூல் ஆய்வு செய்
|
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
|