நிலத்தை
வெட்டி எடுப்பார்-அதில்
நிறைய இரும்புத் தூளே
கலந்திருக்கும் அதையே-பின்
காய்ச்சிக் காய்ச்சி வார்ப்பார்
வலுத்த கம்பி வார்ப்பார்-அதில்
வலுத்த தகுடும் வார்ப்பார்
மெலுக்கு வளையம் வார்ப்பார்-மிகு
மிகுக்கு வளையம் வார்ப்பார்.
ஆணி வகைகள் செய்வார்-அதில்
அரங்கள் எல்லாம் செய்வார்
ஏணி வகைகள் செய்வார்-அதில்
ஏரின் முனையும் செய்வார்
தோணி தூக்கும் கருவி-கப்பல்
தூக்கும் கருவி செய்வார்
வாணல் சட்டி வண்டி-பெரு
வான ஊர்தி செய்வார்.
இரும்பே இல்லா விட்டால்-இங்
கென்ன வேலை நடக்கும்?
கரும்பு வெட்டும் கொடுவாள்-பெருங்
காடு வெட்டும் சுத்தி
திரும்பு கின்ற பக்கம்-எங்கும்
தெரியும் பொருள்கள் எல்லாம்
இரும்பு கொண்ட பொருள்கள்-அவை
விரும்பத்தக்க பொருள்கள்.
இரும்பு வேலை செய்வொர்-அவர்
எல்லாம் "கொல்லர ஆவார்
இருந்து வேலை செய்யும்-அவர்
இடமே "உலைக்கூடம
திருந்திய தென் றால்ஊர்-அவர்
செய்த தொண்டா லேதான்
வருந்தித் தொழில் செய்வார்-அவர்
வாழ்க வாழ்க வாழ்க
|
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
|