பக்கம் எண் :

திராவிடர் திருப்பாடல்

இரண்டாம் பகுதி: காலைப்பத்து

நூல்

வெண்டளையான் வந்த தரவு இணைக்
கொச்சகக் கலிப்பா


கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து
விழித்தான்; எழுந்தான்: விழிகதிரோன் வாழி!
அழைத்தார்கள் அன்பால் திராவிடர்கள் உம்மை!
மொழிப்போர் விடுதலைப்போர் மூண்டனவே இங்கே!
விழிப்பெய்த மாட்டீரோ! தூங்குவீரோ மேலும்?
அழிப்பார் தமிழை! அடிமையிற் சேர்ப்பார்!
ஒழிப்பீர் பகையை! நொடியில் மறவர்
வழித்தோன்றும் மங்கையீர், காளையரே வாரீரோ!

எழுந்தன புட்கள்; சிறகடித்துப் பண்ணே
முழங்கின! ஏருழவர் முன்செல் எருதை
அழிஞ்சிக்கோல் காட்டி அதட்டலும் கேட்டீர்?
எழந்திருப்பீர் வீட்டினரே, இன்னும் துயிலோ?
பழந்தமிழர் செல்வம் கலையொழுக்கம் பண்பே
ஒழிந்து படவடக்கர் ஒட்டாரம் செய்தார்
அழிந்தோமா வென்றோமா என்ப துணர்த்த
எழில்மடவீர் காளையரே இன்னேநீர் வாரீரோ!

காக்கைக் கழுத்துப்போல் வல்லிருளும் கட்டவிழும்!
தாக்கும் மணிமுரசு தன்முழக்கம் கேட்டீரோ?
தூக்கமோ இன்னும்? திராவிடர்கள் சூழ்ந்து நின்றார்.
தூக்கறியார் வாளொன்றும் போராடும் துப்பில்லார்
சாய்க்கின்றார் இன்பத் தமிழைக் குறட் கருத்தை!
போக்கேதும் இல்லா வடக்கர் கொடுஞ்செயலும்
வாய்க்கஅவர் வால்பிடிக்கும் இங்குள்ளார் கீழ்ச்செயலும்
போக்க மடவீரே காளையரே வாரீரோ!

தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான்
செங்கதிர்ச் செல்வன்! திராவிடர்கள் பல்லோர்கள்
தங்கள் விடுதலைக்கோர் ஆதரவு தாங்கேட்டே
இங்குப் புடைசூழ்ந்தார் இன்னும் துயில்வீரோ?
பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும்
எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே!
வங்கத்துக்கிப்பால் குடியரசு வாய்ப்படைய
மங்கையீர் காளையரே வாரீரோ வாரீரோ!

தேர்கலி கொள்ள அமர்ந்து செழும்பரிதி
ஆர்கலிமேற் காட்சி அளிக்கின்றான் கீழ்த்திசையில்
ஊர்மலர்ந்தும் உங்கள் விழிமலர ஒண்ணாதோ?
சீர்மலிந்த அன்பின் திராவிடர்கள் பல்லோர்கள்
நேர்மலிந்தார் பெற்ற நெருக்கடிக்குத் தீர்ப்பளிப்பார்
பார்கலந்த கீர்த்திப் பழய திராவிடத்தை
வேர்கலங்கச் செய்ய வடக்கர் விரைகின்றார்
கார்குழலீர் காளையரே வாரீரோ வாரீரோ!

செஞ்சூட்டுச் சேவல்கள் கூவின கேட்டீரோ
மிஞ்சும் இருள்மீது பொன்னொளி வீழ்ந்ததுவே!
பஞ்சணை வீட்டெழந்து பாரீர் திராவிடத்தை
நஞ்சுநிகர் இந்தியினை நாட்டித் தமிழமுதை
வெஞ்சேற்றுப் பாழ்ங்கிணற்றில் வீழ்ந்த நினைத்தாரே
நெஞ்சிளைப் போமோ? நெடுந்தோள் தளர்வோமோ!
அஞ்சுவமோ என்று வடக்கர்க் கறிவிக்கக்
கொஞ்சு குயில்களே காளையரே வாரீரோ!

கோவாழும் இல்லொன்றே கோவிலாம் மற்றவை
நாவாலும் மேல்என்னோம்! நல்லறம் நாடுவோம்
தேவர்யாம் என்பவரைத் தெவ்வ ரெனஎதிர்ப்போம்
சாவு தவிர்ந்த மறுமையினை ஒப்புகிலோம்
வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம்
மேவும்இக் கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர்
தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமைஎதிர்க்க
பாவையரே காளையரே பல்லோரும் வாரீரோ!

மன்னிய கீழ்க்கடல்மேல் பொன்னங் கதிர்ச்செல்வன்
துன்னினான் இன்னும்நீர் தூங்கல் இனிதாமோ?
முன்னாள் தமிழ்காத்த மூவேந்தர் தம்உலகில்
?அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது? என்னும் நன்னாட்டில்
சின்ன வடக்கரும், வால்பிடிக்கும் தீயர்களும்,
இன்னலே சூழ்கின்றார் இன்பத் திராவிடத்துக்
கன்னல்மொழி மங்கையீர் காளையரே வாரீரோ

நீல உடையூடு பொன்னிழை நேர்ந்ததென
ஞால இருளின் நடுவில் கதிர்பரப்பிக்
கோலஞ்செய் கின்றான் இளம்பரிதி! கொண்டதுயில்
ஏலுமோ? உம்மை எதிர்பார்த் திருக்கின்றார்
தோலிருக்க உள்ளே சுளையைப் பறிப்பவரைப்
போல வடக்கர்தம் பொய்நநூல் தனைப்புகுத்தி
மேலும்நமை மாய்க்க விரைகின்றார் வீழ்த்தோமோ?
வாலிழையீர் காளையரே வாரீரோ வாரீரோ!

அருவி, மலைமரங்கள் அத்தனையும் பொன்னின்
மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான்.
விரியாவோ உங்கள் விழித்தா மரைகள்?
அருகு திராவிடர்கள் பல்லோர்கள் ஆர்த்தார்
ஒருமகளை ஐவர் உவக்கும் வடக்கர்,
திருநாட்டைத் தம்மடிக்கீழ்ச் சேர்க்க நினைத்தார்.
உருவிய வாளின், முரசின்ஒலி கேட்பீர்
வரைத்தோளீர் காளையரே வாரீரோ வாரீரோ!




( 145 )




( 150 )





( 155 )





( 160 )




( 165 )





( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )





( 195 )





( 200 )




( 205 )





( 210 )




( 215 )





( 220 )


விடுதலைப்பாட்டு

மீள்வது நோக்கம் -- இந்த
மேன்மைத் திராவிடர் மீளுவதின்றேல்
மாள்வது நோக்கம் -- இதை
வஞ்ச வடக்கர்க்கெம் வாள்முனை கூறும்!
ஆள்வது நோக்கம் -- எங்கள
அன்னை நிலத்தினில் இன்னெரு வன்கால்
நீள்வது காணோம் -- இதை
நீண்டஎம் செந்தூக்கு வாள்முனை கூறும்!
                      (மீள்வது நோக்கம்)

கனவொன்று கண்டார் -- தங்கள்
கையிருப் பிவ்விடம் செல்வதுண்டோ
இனநலம் காண்பார் -- எனில்
இங்கென்ன வேலை அடக்குக வாலை!
தினவுண்டு தோளில் -- வரத்
திறல்மிக உண்டெனில் வந்துபார்க்கட்டும்
மனநோய் அடைந்தார் -- அந்த
வடக்கர்க்கு நல்விடை வாள்முனை கூறும்!
                      (கனவொன்று கண்டார்)

திராவிடர் நாங்கள் -- இத்தி
ராவிட நாடெங்கள் செல்வப் பெருக்கம்!
ஒரே இனத்தார்கள் -- எமக்
கொன்றே கலைபண்பு ஒழுக்கமும் ஒன்றே!
சரேலென ஓர்சொல் -- இங்குத்
தாவுதல் கேட்டோம் ஆவி துடித்தோம்
வராதவர் வந்தார் -- இங்கு
வந்தவர் எம்மிடம் வாளுண்டு காண்பார்!
                      (திராவிடர் நாங்கள்)

( 225 )




( 230 )






( 235 )




( 240 )






( 245 )



இரண்டாம் பகுதி: காலைப்பத்து

நூல்

வெண்டளையான் வந்த தரவிணைக்
கொச்சகக் கலிப்பா


கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து
விழித்தான்; எழுந்தான்: விழிகதிரோன் வாழி!
அழைத்தார்கள் அன்பால் திராவிடர்கள் உம்மை!
மொழிப்போர் விடுதலைப்போர் மூண்டனவே இங்கே!
விழிப்பெய்த மாட்டீரோ! தூங்குவீரோ மேலும்?
அழிப்பார் தமிழை! அடிமையிற் சேர்ப்பார்!
ஒழிப்பீர் பகையை! நொடியில் மறவர்
வழித்தோன்றும் மங்கையீர், காளையரே வாரீரோ!

எழுந்தன புட்கள்; சிறகடித்துப் பண்ணே
முழங்கின! ஏருழவர் முன்செல் எருதை
அழிஞ்சிக்கோல் காட்டி அதட்டலும் கேட்டீர்’
எழந்திருப்பீர் வீட்டினரே, இன்னும் துயிலோ?
பழந்தமிழர் செல்வம் கலையொழக்கம் பண்பே
ஒழிந்து படவடக்கர் ஒட்டாரம் செய்தார்
அழிந்தோமா வென்றோமா என்ப துணர்த்த
எழில்மடவீர் காளையரே இன்னேநீர் வாரீரோ!

காக்கைக் கழுத்துப்போல் வல்லிருளும் கட்டவிழும்!
தாக்கும் மணிமுரசு தன் முழக்கும் கேட்டீரோ?
தூக்கமோ இன்னும்? திராவிடர்கள் சூழ்ந்து நின்றார்.
தூக்கறியார் வாளென்றும் போராடும் துப்பில்லார்
சாய்க்கின்றார் இன்பத் தமிழைக் குறட் கருத்தை!
போக்கேதும் இல்லா வடக்கர் கொடுஞ்செயலும்
வாய்க்க அவர் வால்பிடிக்கும் இங்குள்ளார் கீழ்ச்செயலும்
போக்க மடவீரே காளையரே வாரீரோ!

தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான்
செங்கதிர்ச் செல்வன்! திராவிடர்கள் பல்லோர்கள்
தங்கள் விடுதலைக்கோர் ஆதரவு தாங்கேட்டே
இங்குப் புடைசூழ்ந்தார் இன்னும் துயில்வீரோ?
பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும்
எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே!
வங்கத்துக் கிப்பால் குடியரசு வாய்ப்படைய
மங்கையீர் காளையரே வாரீரோ வாரீரோ!

தேர்கலி கொள்ள அமர்ந்து செழும்பரிதி
ஆர்கலிமேற் காட்சி அளிக்கின்றான் கீழ்த்திசையில்
ஊர்மலர்ந்தும் உங்கள் விழிமலர ஒண்ணாதோ?
சீர்மலிந்த அன்பின் திராவிடர்கள் பல்லோர்கள்
நேர்மலிந்தார்? பெற்ற நெருக்கடிக்குத் தீர்ப்பளிப்பீர்
பார்கலந்த சீர் த்திப் பழய திராவிடத்தை
வேர்கலங்கச் செய்ய வடக்கர் விரைகின்றார்
கார்குழலீர் காளையரே வாரீரோ வாரீரோ.

செஞ்சூட்டுச் சேவல்கஇ கூவின கேட்டீரோ
மிஞ்சும் இருள்மீது பொன்னொளி வீழ்ந்ததுவே!
பஞ்சணை வீட்டெழந்து பாரீர் திராவிடத்தை
நஞ்சுநிகர் இந்தியினை நாட்டித் தமிழமுதை
வெஞ்சே ற்றுப் பாழ்ங்கிணற்றில் வீழ்ந்த நினைத்தாரே
நெஞ்சிளைப் போமே? நெடிந்தோள் தளர்வோமோ!
அஞ்சுவமோ என்று வடக்கர்க் கறிவிக்கக்
கொஞ்சு குயில்களே காளையரே வாரீரோ

கோவாழம் இல்லொன்றே கோவிலாம் மற்றவை
நாவாலும் மேல்என்னோம்! நல்லறம் நாடுவோம்
தேவர்யாம் என்பவரைத் தெவ்வ ரெனஎதிர்ப்போம்
சாவு தவிர்த்த மறுமையினை ஒப்புகிலோம்
வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம்
மேவும்இக் கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர்
தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமை
பாவையரே காளையரே பல்லோரும் வாரீரோ

மன்னிய கீழ்க்கடல்மேல் பொன்னங் கதிர்ச்செல்வன்
துன்னினான் இன்னும்நீர் தூங்கல் இனிதாமோ?
முன்னாள் தமிழ்காத்த மூவேந்தர் தம்உலகில்
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” என்னும் நன்னாட்டில்
சின்ன வடக்கரும், வால்பிடிக்கும் தீயர்களும்,
இன்னலே சூழ்கின்றார் இன்பத் திராவிடத்துக்
கன்னல்மொழி மங்கையீர் காளையரே வாரீரோ

நீலஉடையூடு பொன்னிழை நேர்ந்ததென
ஞால இருளின் நடுவிற் கதிர்பரப்பிக்
கோலஞ்செய் கின்றான் இளம்பரிதி! கொண்டதுயில்
ஏலுமோ? உம்மை எதிர்பார்த் திருக்கின்றார்
தோலிருக்க உள்ளே சுளையைப் பறிப்பவரைப்
போல வடக்கர்தம் பொய்நநூல் தனைப்புகுத்தி
மேலும்நமை மாய்க்க விரைகின்றார் வீழ்த்தோமோ?
வாலிழையீர் காளையரே வாரீரோ வாரீரோ.

அருவி, மலைமரங்கள் அத்தனையும் பொன்னின்
மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான்.
விரியாவோ உங்கள் விழித்தா மரைகள்?
அருகு திராவிடர்கள் பல்லோர்கள் ஆர்ந்தார்
ஒருமகளை ஐவர் உவக்கும் வடக்கர்,
திருநாட்டைத் தம்மடிக்கீழ்ச் சேர்க்க நினைத்தார்.
உருவிய வாளின், முரசின்ஒலி கேட்பீர்
வரைத் தோளீர் காளையரே வாரீரோ வாரீரோ




( 145 )




( 150 )





( 155 )





( 160 )




( 165 )





( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )





( 195 )





( 200 )




( 205 )





( 210 )




( 215 )





( 220 )


விடுதலைப்பாட்டு

மீள்வது நோக்கம் -- இந்த
மேன்மைத் திராவிடர் மீளுவ தின்றேல்
மாள்வது நோக்கம் -- இதை
வஞ்ச வடக்கர்க்கெம் வாள்முனை கூறும்!
ஆள்வது நோக்கம் -- எங்கள
அன்னை நிலத்தினில் இன்னெரு வன்கால்
நீள்வது காணோம் -- இதை
நீண்டஎம் செந்தூக்கு வாள்முனை கூறும்!
(மீள்வது நோக்கம்)

கனவொன்று கண்டார் -- தங்கள்
கையிருப் பிவ்விடம் செல்லுவ துண்டோ
இனநலம் காண்பார் -- எனில்
இங்கென்ன வேலை அடக்குக வாலை!
தினவுண்டு தோளில் -- வரத்
தினவுண்டு தோளில் -- வரத்
திறல்மிக உண்டெனில் வந்துபார்க் கட்டும்
மனநோய் அடைந்தார் -- அந்த
வடக்கர்க்கு நல்விடை வாள்முனை கூறும்!
(கனவொன்று கண்டார்)

திராவிடர் நாங்கள் -- இத்தி
ராவிட நாடெங்கள் செல்வப் பெருக்கம்!
ஒரே இனத்தார்கள் -- எமக்
கொன்றே கலைபண் பொழுக்கமும் ஒன்றே!
சரேலென ஓர்சொல் -- இங்குத்
தாவுதல் கேட்டோம் ஆவி துடித்தோம்
வராதவர் வந்தார் -- இங்கு
வந்தவர் எம்மிடம் வாளுண்டு காண்பார்
(திராவிடர் நாங்கள்)

( 225 )




( 230 )






( 235 )




( 240 )






( 245 )