பக்கம் எண் :

தாழ்த்தப் பட்டோர் சமத்துவப் பாட்டு

ஞாயமற்ற மறியல்

(நொண்டிச் சிந்து)

என்றுதான் சுகப்படுவதோ? -- நம்மில்
யாவரும் "சமானம என்ற பாவனை இல்லை -- அந்தோ
ஒன்றுதான் இம்மானிடச் சாதி -- இதில்
உயர்பிறப் பிழிபிறப் பென்பதும் உண்டோ? -- நம்மில்
அன்றிருந்த பல தொழிலில் -- பெயர்
அத்தனையும் "சாதிகள என்றாக்கிவிட்டனர் -- இன்று
கொன்றிடுமே "பேதம எனும் பேய்! -- மிகக்
கூசும்இக் கதை நினைக்கத் தேசமக்களே!       (என்று)

இத்தனை பெரும் புவியிலே -- மிக
எண்ணற்ற தேசங்கள் இருப்ப தறிவோம்
அத்தனை தேசத்து மக்களும் -- தாம்
அனைவரும் "மாந்தர என்று நினைவதல்லால்-மண்ணில்
இத்தகைய நாட்டு மக்கள்போல் -- பேதம்
எட்டுலக்ஷம் சொல்லிமிகக் கெட்டலைவாரோ! -- இவர்
பித்துமிகக் கொண்டவர்கள்போல் -- தம்
பிறப்பினில் தாழ்வுயர்வு பேசுதல் நன்றோ?     (என்று)

தீண்டாமை என்னுமொரு பேய் -- இந்தத்
தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம் -- எனில்
ஈண்டு பிறநாட்டில் இருப்போர் -- செவிக்
கேறியதும் இச்செயலைக் காறி யுமிழ்வார்
ஆண்டாண்டு தோறு மிதனால் -- நாம்
அறிவற்ற மக்கள் எனக் கருதப் பட்டோம்
கூண்டோடு மாய்வ தறிந்தும் -- இந்தக்
கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை நாம்   (என்று)

ஞானிகளின் பேரப் பிள்ளைகள் -- இந்த
நாற்றிசைக்கும் ஞானப்புனல் ஊற்றிவந்தவர் -- மிகு
மேனிலையில் வாழ்ந்து வந்தவர் -- இந்த
மேதினியில் மக்களுக்கு மேலுயர்ந்தவர் --இந்த
வானமட்டும் புகழ்ந்து கொள்வார் -- எனில்
மக்களிடைத் தீட்டுரைக்கும் காரணத்தினை -- இங்கு
யானிவரைக் கேட்கப் புகுந்தால் -- இவர்
இஞ்சிதின்ற குரங்கென இளித்திடுவார் -- நாம்  (என்று)

உயர்மக்கள் என்றுரைப்பவர் -- தாம்
ஊரை அடித்து உலையிலிட் டுண்ணுவதற்கே -- அந்தப்
பெயர்வைத்துக் கொள்ளுவதல்லால் -- மக்கள்
பேதமில்லை என்னுமிதில் வாதமுள்ளதோ? -- தம்
வயிற்றுக்கு விதவித ஊண் -- நல்ல
வாகனங்கள் போகப்பொருள் அநுபவிக்க -- மிக
முயல்பவர் தம்மிற் சிலரை -- மண்ணில்
முட்டித்தள்ள நினைப்பது மூடத்தனமாம் -- நாம் (என்று)

உண்டி விற்கும் பார்ப்பன னுக்கே -- தான்
உயர்ந்தவன் என்ற பட்டம் ஒழிந்துவிட்டால் -- தான்
கண்டபடி விலை உயர்த்தி -- மக்கள்
காசினைப் பறிப்பதற்குக் காரணமுண்டோ? -- சிறு
தொண்டு செய்யும் சாதி என்பதும் -- நல்ல
துரைத்தனச் சாதியென்று சொல்லிக் கொள்வதும் -- இவை
பண்டிருந்த தில்லை எனினும் -- இன்று
பகர்வது தாங்கள் நலம் நுகர்வதற்கே -- நாம் (என்று)

வேதமுணர்ந் தவன் அந்தணன் -- இந்த
மேதினியை ஆளுபவன் க்ஷத்திரியனாம் -- மிக
நீதமுடன் வர்த்தகம் செய்வோன் -- மறை
நியமித்த வைசியனென் றுயர்வு செய்தார் -- மிக
நாதியற்று வேலைகள் செய்தே -- முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே -- சொல்லி
ஆதியினில் மநுவகுத்தான் -- இவை
அன்றியுமே பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம் -- நாம் (என்று)

அவனவன் செய்யும் தொழிலைக் -- குறித்
தவனவன் சாதியென மநுவகுத்தான் -- இன்று
கவிழ்ந்தது மநுவின் எண்ணம் -- இந்தக்
காலத்தினில் நடைபெறும் கோலமும் கண்டோம் -- மிகக்
குவிந்திடும் நால்வருணமும் -- கீழ்க்
குப்புறக் கவிழ்த்ததென்று செப்பிடத்தகும் -- இன்று
எவன்தொழில் எவன் செய்யினும் -- அதை
ஏனென்பவன் இங்கொருவனேனுமில்லையே -- நாம் (என்று)

பஞ்சமர்கள் எனப்படுவோர்
பாங்கடைவ தால்நமக்குத் தீங்குவருமோ -- இனித்
தஞ்சமர்த்தை வெளிப்படுத்தித் -- தம்
தலைநிமிர்ந் தாலது குற்றமென்பதோ -- இது
வஞ்சத்திலும் வஞ்சமல்லவோ -- பொது
வாழ்வினுக்கும் இதுமிகத் தாழ்வேயல்லவோ -- நம்
நெஞ்சத்தினில் ஈரமில்லையோ? -- அன்றி
நேர்மையுடன் வாழுமதிக் கூர்மையில்லையோ -- நாம் (என்று)

கோரும் "இமயாசல" முதல் -- தெற்கில்
கொட்டுபுனல் நற் "குமரி" மட்டும் இருப்போம் -- இவர்
யாருமொரு சாதியெனவும் -- இதில்
எள்ளளவும் பேதமெனல் இல்லையெனவும் -- நம்
பாரதநற் றேவிதனக்கே -- நாம்
படைமக்கள் எனவும் நம்மிடை இக்கணம் -- அந்த
ஓருணர்ச்சி தோன்றியஉடன் -- அந்த
ஒற்றுமை அன்றோநமக்கு வெற்றியளிக்கும் -- நாம் (என்று)




( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )




( 30 )





( 35 )




( 40 )





( 45 )





( 50 )




( 55 )





( 60 )




( 65 )




( 70 )





( 75 )




( 80 )
சகோதரத்வம்

உறுதி     உறுதி       உறுதி

ஒன்றே சமூகம் என்றெண்ணார்க்கே -- இறுதி!         (உறுதி)

உறவி்னர் ஆவார் ஒருநாட்டார் -- எனில் (உறுதி)

பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை -- இந்தப்
பிழைநீங்குவதே உயிருள்ளாரின் கடமை -- நம்மிற்
குறைசொல வேண்டாம் உறவினர் பகைநீங்குங்காள் --                                            உங்கள்

குகையினை விட்டே வெளிவருவீர்சிங் கங்காள்        (உறுதி)

நாட்டுக் குலையில் தீட்டுச் சொல்வார் மொழியை -- நாமே
நம்பித் தேடிக் கொண்டோம் மீளாப் பழியை -- நாட்டின்
கோட்டைக் கதவைக் காக்கத் தவறும் அந்நாள் - இந்தக்
குற்றம் செய்தோம்; விடுவோம்; வாழ்வோம் இந்நாள்  (உறுதி)

வாழ்விற் செம்மை அடைதல் வேண்டும் நாமே -- நம்மில்
வஞ்சம் காட்டிச் சிலரைத் தாழ்த்தல் தீமை -- புவியில்
வாழ்வோரெல்லாம் சமதர்மத்தால் வாழ்வோர் -- மற்றும்
வரிதிற் றாழ்வோர் பேதத்தாலே தாழ்வோர்            (உறுதி)

தேசத்தினர்கள் ஓர்தாய் தந்திடு சேய்கள் -- இதனைத்
தெளியா மக்கள் பிறரை நத்தும் நாய்கள் -- மிகவும்
நேசத்தாலே நாமெல்லாரும் ஒன்றாய் -- நின்றால்
நிறைவாழ்வடைவோம் சலியாவயிரக் குன்றாய்       (உறுதி)

பத்துங் கூடிப் பயனைத்தேடும் போது -- நம்மில்
பகைகொண் டிழிவாய்க் கூறிக்கொள்ளல் தீது -- நம்
சித்தத்தினிலே இருளைப் போக்கும் சொல்லை -- கேளீர்
செனனத்தாலே உயர்வும் தாழ்வும் இல்லை           (உறுதி)







( 85 )






( 90 )





( 95 )






( 100 )

சேசு பொழிந்த தெள்ளமுது

மேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி         தோழி -- முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா--அவர்

காதினிக்கும்படி சொன்னசொல் ஏதடி?        தோழி -- அந்தக்
கர்த்தர் உரைத்தது புத்தமுது என்றறி        தோழா -- அந்தப்

பாதையில் நின்று பயனடைந்தார் எவர்       தோழி -- இந்தப்
பாரதநாட்டினர் நீங்கிய மற்றவர்             தோழா -- இவர்

ஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை        தோழி -- இங்கு ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா.

ஏசுமதத்தினில் இந்துக்கள் ஏனடி?             தோழி -- அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர்    தோழா -- மிக

மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி          தோழி -- அட
முன் -- மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா -- அவன்

நாசம் விளைக்க நவின்றது யாதடி           தோழி -- சட்டம்
நால் வருணத்த்ினில் நாலாயிரம் சாதி         தோழா -- ஏசின்

ஆசை மதம்புகப் பேதம் அகன்றதோ? தோழி -- அவர்க்கு
அங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள் தோழா.

      ஃ       ஃ       ஃ

சொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி?  தோழி -- அந்தத் தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா -- அந்தப்

புல்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்?    தோழி -- அதைப்
போதாக் குறைக்குமுப் போகம் விளைத்தனர்  தோழா -- அடி
எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர்?    தோழி -- அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி      தோழா -- முன்பு

வல்லவர் சேசு வகுத்ததுதான் என்ன?       தோழி -- புவி
'மக்கள் எல்லாம் சமம்' என்று முழக்கினர் தோழா.

ஈண்டுள்ள தொண்டர்கள் என்னசெய்கின்றனர்தோழி -- அவர் ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர்  தோழா -- அடி

வேண்டவரும் திருக் கோயில் வழக்கென்ன?     தோழி -- அட மேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர்    தோழா -- விரல்

தீண்டப்படாதவர் என்பவர் யாரடி?     தோழி -- இங்குச் சேசு மதத்தினை தாபித்த பேர்கள் என்      தோழா -- உளம்

தூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி?  தோழி -- அவர்
'சோதரர் யாவரும்' என்று முழங்கினர் தோழா.

பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன? தோழி -- இவை
பாரதநாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர்     தோழா -- இங்குக்

கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி -- ஒப்புக் கொள்ளும் நிலத்தினில் கள்ளிமுளைத்திடும் தோழா -- இங்கு

நெஞ்சினிற்சேசுவின்தொண்டர்நினைப்பென்ன தோழா -- தினம்
நேர்மையில் கோயில்வி யாபாரம் செய்வது     தோழா -- இந்த

வஞ்சகர்க்கென்ன வழுத்தினர் சேசு நல்     தோழி -- இன்ப
வாழ்க்கையடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார்

நாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு?       தோழி -- அங்கு
நல்ல மரத்தினிற் பொம்மை அமைத்தனர்     தோழா -- அந்த

ஆலயம் சாமி அமைத்தவர் யாரடி?       தோழி -- மக்கள்
அறிவை இருட்டாக்கி ஆளநினைப்பவர்     தோழா -- மக்கள்

மாலைத் தவிர்த்து வழிசெய்வரோ இனித்     தோழி -- செக்கு
மாடுகளாக்கித்தம் காலைச்சுற்றச் செய்வர்  தோழா -- அந்தக்

கோலநற் சேசு குறுத்துதா னென்ன?       தோழி -- ஆஹா
கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர்       தோழா.

      ஃ       ஃ       ஃ

ஆண்மைகொள் சேசு புவிக்குப் புரிந்ததென்?   தோழி -- அவர்
அன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர்     தோழா -- அந்தக்
கேண்மைகொள் சேசுவின்கீர்த்தி யுரைத்திடு   தோழி -- அவர்
கீர்த்தியுரைத்திட வார்த்தை கிடைக்கிலை     தோழா -- நலம்
தாண்டவம் ஆடிடச் செய்தவரோ அவர்?     தோழி -- அன்று
தன்னைப் புவிக்குத் தரும் பெருமானவர்     தோழா -- அந்த

ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத்தக்கவர் யாவர் -- எனில்
'அன்னியர்' 'தான்' என்ற பேதமிலாதவர் தோழா.

( 105 )








( 110 )





( 115 )









( 120 )







( 125 )






( 130 )







( 135 )






( 140 )







( 145 )






( 150 )






( 155 )



( 160 )