பக்கம் எண் :

ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது!

நிழல்கள் நிழல்கள்

ஒளியின் எதிரில் கைநீட்டி
ஒப்பனையாக விரல் காட்டிக்
கிளியின் நிழலினைக் காட்டினேன் பார்!
முன்னும்பின்னும் விரல் காட்டி
முட்டிக்குமேல் ஒரு விரல்நீட்டி
கன்றுக் குட்டியைக் காட்டினேன் பார்!
கழுதைக் குட்டிடைக் காட்டினேன் பார்!
நாயினைப்பார், நரியினைப்பார்
நல்ல மாடு, குதிரையைப் பார்
கோயில்சுற்றும் பார்ப்பைக் காட்டினேன் பார்!
குணங் கெட்ட எருமை ஒடுதல்பார்!
கரடியைப் பார், காக்கையைப் பார்
காண்டாமிருகம் நிற்றலைப் பார்!
பரட்டைதலை பையன் காட்டினேன் பார்
பானை வயிற்றுக் கரடி காட்டினேன் பார்!

தீங்கரசு தலைவனைப் பார்
தெருவில் தத்தும் தவளையைப் பார்
மாங்குயிலைப் பறக்கவிட்டேன் பார்பார்
மடக்கும் கைவிரல் நிழல்களைப் பார்!




( 5 )




( 10 )




( 15 )
கண்ணுண்டு கல்வியில்லை
பெரிய தருமனுக்கு மணிபார்க்கத் தெரியவில்லை

மணிப்பொறி காட்டி என்ன மணி என்று
தாயார் பெரிய தருமனைக் கேட்டாள்.
பெரிய தருமன் பெரிய கண்ணால்
பார்த்தான். பார்த்தான். தெரியவில்லை.
அண்டையிலிருந்த ஆனையப்பன்
பெரிய தருமனுக்குப் பெரிய கண்ணிருந்தும்
தெரியவில்லையே என்று சிரித்தான்;
தாயார் சாற்றுகின்றாள்;
கண்ணுண்டு பெரிதாய் கல்வி இல்லையே!
( 20 )




( 25 )
மாணவர் கேள்வி

இத்தனை சிறுவயதில்
எத்தனை மொழி கற்பது கல்வியமைச்சே-உமக்
கிந்தமதி வாய்த்ததென்ன கல்வியமைச்சே?

முத்தனை எம் அருமை
முத்தமிழ் பயில்கையிலே, கல்வியமைச்சே-இந்தி
மூதேவி பயில்வதோ கல்வியமைச்சே?

மோசடியில் காசடிக்க
மொத்தடிகொள் வடமொழிகல்வியமைச்சே-சற்றுப்
பூசாரி ஆகுவதோ கல்வியமைச்சே?

ஊசிய வடசொல்லை
ஒருசிலர் மகிழ்ந்திடக் கல்வியமைச்சே-கற்கக்
கூசாமல் வைத்ததென்ன கல்வியமைச்சே?

இந்தி, தமிழ், ஆங்கில இ
லக்கணங்கள் மூன்றினையும் கல்வியமைச்சே-ஒன்றாய்
எப்படித்தான் கற்பதினிக் கல்வியமைச்சே?

செந்தமிழை ஒழித்திட
இந்தி வடமொழி கல்வியமைச்சே-கொண்டு
வந்ததுவும் மெய்யல்லவோ கல்வியமைச்சே?

பைந்தமிழை மொழி, கலை
ஒழுக்கங்கள்அழித்திடக் கல்வியமைச்சே-நீர்
இந்தியினைக் கொண்டுவந்தீர் கல்வியமைச்சே?

தந்தபொருள் வாங்சு, இதைச்
சந்தைக் கடையாக்கிடக்; கல்வியமைச்சே-இவண்
இந்தி மொழி பயில்வதோ கல்வியமைச்சே?

இப்பெருநா வலத்தீவில்
இன்பத்திராவிட நாடு கல்வியமைச்சே -- இணை
செப்பரிய தனிநாடு கல்வியமைச்சே!

ஒப்புவதோ அயலார்
இந்திபொது மொழிஎனில் கல்வியமைச்சே -- இங்கு
மிக்கபொருள் இந்திக்கென்ன கல்வியமைச்சே?

மக்கள் தமிழைப் பரப்ப
வகுப்பில்லை; வாத்தியில்லை கல்வியமைச்சே -- இங்கு
மிக்கபொருள் இந்திக்கென்ன கல்வியமைச்சே?

தக்க செயல் இருக்கத், த
காச்செயலைச் செய்திட நீர் கல்வியமைச்சே -- மிக்க
கொக்கரித்தல் நல்லதல்ல கல்வியமைச்சே!

( 30 )






( 35 )





( 40 )






( 45 )






( 50 )





( 55 )






( 60 )
அத்தர் வணிகர்

அரையணாக் காசில் இரசம் பூசி
"அண்ணே ஒரு ரூபாய்க்கு அந்தர்கொடு" என்றான்;
கடைக்காரன் அத்தர் கடிதில் கொடுத்தான்.
காலையில் பார்த்தான் கடைக்காரன் ஆள்அதை!

மூலையில் இருந்த முதலாளி கையில்
"அரையணாக் காசை அளித்தான். ஐயோ
ஒருரூபாய் அத்தர் ஒழிந்ததே" என்றான்.

எசமான் பார்த்தான்: "இதிலும் நமக்கு
பதினைந்தணா இலாபம் பாராடா வேலையை,"
என்று காசை எறிந்தான் பெட்டியில்.
போருக்குபின் வணிகர்
யாரும் அத்தர்காரர் ஆனாரே.

( 65 )





( 70 )





( 75 )
உங்கள் தெரு கெட்ட தெரு

உங்கள் தெரு வீட்டின் முன்னே
மாடுகட்டி இருக்கும் -- அங்கு
உள்ளசாணி சிறுநீரில்
கொசுக்கள் நோயைப் பெருக்கும்!

அங்கங்கேயும் வீட்டெதிரில்
குப்பை கூளம் கிடக்கும் -- எனில்
அதனை நாயும் கோழியும் போய்க்
கிளரிக் காற்றைக் கெடுக்கும்.

தங்குழந்தை தெருவில் பகலில்
வெளிக்குப் போகக் கண்டு -- நல்ல
தந்தையரும் இருட்டினிலே
செய்வர் அந்தத் தொண்டு!

மங்கையரோ ஆடவரோ
சண்டையிடும்போது -- பல
வண்டைமொழி பேசிடுவார்
காது பொறுக்காது!

நகராண்மைக் கழக விளக்கும்
ஒளியைச் செய்வதில் -- எனில்
நாலைந்து நாய் வழிமறிக்கும்
அதுபெருத்த தொல்லை!

தகுந்ததொரு படிப்பகமும்
இல்லை உங்கள் தெருவில் -- எனில்
சாலையில்லை நிழலுமில்லை
கெடும்உடம்பு விரைவில்!

அகமாரப் பிறக்கின்னல்
செல்வதில்லை என்னும் -- ஓர்
அன்பிருந்தால் உம்தெருவில்
அழகு, தூய்மை மன்னும்!

வகுத்துள்ளார் சட்டம் எனில்
அவைகள் மட்டும் போதா -- நன்
மனச்சான்று வேண்டும் என்று
வழுத்துவதும் தீதா?




( 80 )






( 85 )





( 90 )






( 95 )







( 100 )






( 105 )
கல்வி ஆசிரியருக்குத் தொல்லை

பள்ளிச் சிறுவர்கட்குப் பாடம் சொல்லிக்கொடுப்போர்
உள்ளம் நலிந்தாரடி -- கிளியே -- இனி
ஊரும் துலங்காதடி!

தள்ளத் தகுமோ கல்வித் தந்தையர் முறையீடு
வெள்ளம் கரைபுரண்டால் -- கிளியே -- மேல்
விளைவுகள் என்னாகுமோ?

மண்ணளிப்பதும் நன்கு வாழ்வதும் மாணவர்க்குக்
கண்ணளிப்போரால் அன்றே -- கிளியே -- அவர்
கவன்றிடச் செய்தல் நன்றோ?

புண்படப் பேசித்தமிழ் புலவர் வருந்தச் செய்தார்
கண்கெட்டுப் போனாரடி -- கிளியே -- கேட்கும்
காதும் இழந்தாரடி!

பெருமானம் பேணுகின்ற பள்ளிக் கணக்காயர்கள்
வருமானம் போதாதென்றார் -- கிளியே -- இதை
மறுப்பதும் ஏதுக்கடி?

பெருமான்களாம் இவர்கள், கைக்கூலி பெறுவார்க்கே
அருமானம் அத்தனையும் -- கிளியே -- இவர்
அடமானம் ஆக்கிடுவார்!

ஏகினார் கல்விச் செல்வம் ஈவாரைக் காதறுந்த
ஊசிகள் மாளிகையில் -- கிளியே -- போய்
உட்கார லானதடி!

ஆசான்கள் மாணவரை அமைதிபடுத்துதற்குப்
"பேசாதீர என்பதற்கே -- கிளியே -- மாதம்
பெற்ற பணம் போதாதடி!

புல்விற்க ஓர் விண்ணப்பம் போட்டால் கைக்கூலி கேட்போர்
கல்விக் கணக்காயரோ? -- கிளியே -- அவர்
கைகட்டி நில்லாரடி!

செல்லும் செலவை எண்ணிச் சிறுதொகை கூட்டும்படி
சொல்லினும் கேளாவிட்டால் -- கிளியே -- அவர்
தொழில் நிறுத்தும் செய்குவார்!


( 110 )






( 115 )





( 120 )






( 125 )






( 130 )





( 135 )



இப்படி ஓர் ஓசையா?

அண்டை வீட்டின் அறையிலிருந்து
பழுத்துக் காய்த்த பனைஓலைமேல்
கூடல்வாய்த் தண்ணீர் கொட்டும் ஓசை
வந்தது, சென்று பார்த்தேன்
இந்திப்பாடல் நடத்தினர் ஈச்வரே!


( 140 )


யாழிசையும் தமிழோசையும்

அறைக்குள் யாழிசை ஏதென்று சென்றே
எட்டிப் பார்த்தேன் பேத்தி
நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே.


( 145 )
குயில் பாட்டு

குயிலே குயிலே கூவாயோ
குரலால் என்னைக் காவாயோ!

பயிலும் உன் வாய் பூவாயோ
பயனை அள்ளித் தூவாயோ?

துயிலாத் தமிழை ஈவாயோ
சுவையை உயிரில் கோவாயோ?

அயலாய் எண்ணிப் போவாயோ?
அன்பால் என்னைத் தாவாயோ?





( 150 )
வெந்நீரில் விரல்

செங்கதிர்: -- வெந்நீர் ஊற்றிச் செம்பில் வைத்தால்
             என்ன போட்டுக் குடிப்பாய்?

இளம்பிறை; வெந்நீர், ஊற்றிச் செம்பில் வைத்தால்
             விரலைப் போட்டுக் குடிப்பேன்?

செங்கதிர்: வெந்நீர் ஊற்றச் செம்பில் வைத்தால்
             விரலைப் போடுவானேன்?

இளம்பிறை: வெந்நீரிலே விரலைப் போட்டால்
             வெப்ப நிலை தெரியும்!

செங்கதிர்: வெந்நீரை நீ அப்படியே
             குடித்து விட்டால் என்ன?

இளம்பிறை: வெந்நீரிலே சூடிருந்தால்
             வெந்து போகும் குடலே!

( 155 )








( 160 )






( 165 )
எவன் நல்லவன்?

அனலன் தன் கிளியை நோக்கி
"ஆரடா திருட்டுப் பையா"
எனச் சொல்லிக் கொடுத்துக்கொண்டே
இருந்தான்!

          அங்கு வந்த
இரிசப்பன் "இவ்வாறாய் உன்
இனிதான கிளி பயின்றால்
எவரையும் திருட்டுப் பையா
எனுமன்றோ" என்றான்.
"நல்லன்
எவன்?" என்றான், இரிசன் தானே.




( 170 )






( 175 )
பண்பாடு

தம்பி; பண்பாடு பண்பாடு பண்பாடு!
     பாரெல்லாம் ஒன்றென்றே பண்பாடு!
     திண்டாடும் உலகுக்குயரப் பண்பாடு
     செந்தமிழரின் முப்பாலின் பண் பாடு!

தங்கை; பண்பாடு பண்பாடு பண்பாடு!
      பசித்தவர்க்கு உணவளித்தல் பண்பாடு!
      புண்பாடு தீர்ப்பதுவே பண்பாடு!
      புத்தருவி போல் குதித்துப் பண்பாடு!

தம்பி: பண்பாடு பண்பாடு பண்பாடு!
     பாரதியின் செல்முறையே பண்பாடு!
     கொண்டாடு கல்வியதே பண்பாடு
     கோவில்களில் இல்லை நம் பண்பாடு!

தங்கை: பண்பாடு பண்பாடு பண்பாடு
      பழமையைப் புதுக்கியே பண்பாடு
      மண்மேடு இட்டதண்ணே நம்நாடு
      மாநிலத்தில் மேலுயர்த்தப் பண்பாடு!




( 180 )






( 185 )





( 190 )
இறந்தவர் பிழைத்தெழுந்தார்

அன்னை இறந்தாள் அதனால்
    சலவைக்கு நாள் பிடித்த
தென்றான் சலவைத் தொழிலாளி!
    பின்புதன் அப்பன் செத்தான்
என்றான்! பிறகு தன் பாட்டி செத்தாள்
    என்றியம்பி நின்றான்
என்னைக் கடன் கேட்க வந்தார்
    இருந்தார், பிழைத்தெழுந்தே.



( 195 )




( 200 )
என்நாடு

அன்னை பிறந்த நாடு -- எங்கள்
அப்பன் பிறந்த நாடு
முன்னையோர் பல்கோடி -- வாழ்ந்த
முத்தமிழ் சேர் தென்னாடு!

சான்றோர்களின் பாடு -- தனை
சமைத் துயர்ந்த நாடு
ஆன்றோர்களின் அறிவால் -- புகழ்
அணிமிகுந்த திந்நாடு!

முத்துக் கடல்சூழ் நாடு -- வாழும்
முச்சங் கப்பொன் ஏடு
எத்தி சையும் மணக்கும் -- அறிவு
இசைத்திடும் தேன் கூடு!

அருவி மலைகொள் நாடு -- வற்றா
ஆறுகள் பாய் காடு!
கருவிருக்கும் வயல்கள் -- விளைவு
கணக்கின்றித் தரும் பீடு!

தொழில் மலிந்த நாடு -- உழைப்பு
தோள்களின் மேம் பாடு
விழிப்புணர்வி னோடு -- எம்மை
வீர ராக்கும் நாடு!






( 205 )





( 210 )





( 215 )





( 220 )
நல்ல பொங்கல்

தையும் பிறந்தது நன்றாம் -- நாம்
தை தை தை என்றாடுகின்றோம்!

    வை இங்குப் பொங்கலை என்றோம் -- நாம்
    வாயார அள்ளி உண்கின்றோம்!

நெய்யில் மிதக்கின்ற பொங்கல் -- பால்
நிறைய வார்த்த புதுப் பொங்கல்

    செய்யில் வினைத்த முத்தரிசி -- நறுந்
    தேனாய் இனிக்கின்ற பொங்கல்!

முந்திரிப் பருப்பிட்ட பொங்கல் -- கொடி
முந்திரிப் பழங்களிட்ட பொங்கல்!

    சிந்தாமல் கையில் அள்ளும் போதே -- வாய்
    தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல்!

இந்த மட்டும்தானா சேதி? -- பார்
இவ்வளவு செங்கரும்பு மீதி!

    முந்தி இதில் நீயும் ஒரு பாதி -- எடு
    மொய்த்திருக்கும் எறும்பினை ஊதி!







( 225 )






( 230 )







( 235 )
தமிழ் வீரர் எழுச்சி

எங்கள் இளந்தமிழ் வீரர் -- அவர்
இப்புவி விழினும் வீரர் வீரர்,
சிங்கப் படையினைப் போலப் -- பகைத்
தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்!

கங்கை தவழ்ந்திடு நாடு -- தங்கள்
காதல் ஏலாமந்த நாட்டி னோடு
தங்களி னத்தவர்க் காக -- உயிர்
தன்னையு மீந்திடும் வீரர் ஆவர்.             (எங்கள்)

வெற்றி நிலைத்திட வேண்டும் -- தங்கள்
வீரமெலாம் புவி ஏற வேண்டும்
சுற்றம் சுகப்பட வேண்டும் -- நற்
சுதந்திர வாழ்வினிற் கூட வேண்டும்
மற்றிவை வீரரின் உள்ளம் -- தனில்
மண்டிக் கிளர்வன் வாழி! வாழி!
சற்றதிற் சோர்பவர் அல்லர் -- இதிற்
சாவடைதல் ஒன்று வாழ்தல் ஒன்று!     (எங்கள்)

சோழனென் றேஒரு வீரன் -- இந்தத்
தொல்புவி காத்தவன் வீரன்! வீரன்!
வாழிய பாண்டிய வீரன்! -- அவன்
வாய்மையி லேபெரும் வீரன் வீரன்
ஊழிபெ யர்த்துவந் தாலும் -- தங்கள்
ஊக்கங் கெடாக்குடி தோன்றி னோர்கள்
வாழ்க தமிழ்க்குல வீரர் -- அந்த
வண்மைத் தமிழ்க்குலம் வாழ்க!           (எங்கள்)





( 240 )





( 245 )




( 250 )





( 255 )




( 260 )
வானவில்

கதிர் எழுந்திது, மழை பொழிந்தது காணும் திசையிலே!
புதுமை கொண்டது பொலிவெழுந்தது வான்வில் இசையிலே!
செம்மை வண்ணம் செங்கொடிபோல் சிரித்த விழுழ்தது
அம்மையின்கை பச்சைவளையல் அங்குத் தெரிந்தது!
மீன் கொத்திகள் பறப்பதுபோல் நீலம் விளைந்தது!
மான் குட்டிகள் விரைவதுபோல் மஞ்சள் விளைந்தது
ஓவியனின் தூரிகைபோல் ஊதா ஒளிர்ந்தது!
தூவி மலர் மாலை போல்கரு நீலம் மிளிர்ந்தது!
புலவர்களின் பாடலைப்போல் பொன்மை நிறைந்தது!
நிலவுலகில் மக்கள் மனம் நெகிழ விரைந்தது!





( 265 )




( 270 )
இரிசன் அழகன்

படம் பிடிப்போனுக்குத் தொழில் திறம் இல்லை
இரிசனை எடுத்த புகைப்படத்தால்
இரிசன் எருமை போல இருந்தான்.

இரண்டாவதெடுத்த புகைப் படத்தால்
இரிசன் யானை போல இருந்தான்.

மூன்றாம் முறையாய் எடுத்த படத்தில்
இரிசன் கிழவன் போல இருந்தான்.

படம் பிடிக்கும் தொழிலினன் தொழில்திறம்
இலாததால் அன்றோ இந்த வேற்றுமை?

இரிசன், ஒருபடித்தான அழகியோன்
உரிய மனைக்கும் உலகினுக்குமே!






( 275 )







( 280 )
விடுதலை

தாத்தா; பள்ளிக் கூடம் போனால் படிக்கலாம்.

பேரன்; படிப்பும் எதற்குப் பகர்வீர் தாத்தா?

தாத்தா; அறிவுண்டாகும் அறிவாய் தம்பி!

பேரன்; அறிவும் எதற்கோ அன்புத் தாத்தா?

தாத்தா; சரிவழி தெரியும் தங்கத் தம்பி!

பேரன்; சரிவழி எதற்குச் சாற்றுவீர் தாத்தா?

தாத்தா; ஒற்றுமை தெரியும் உணர்வாய் தம்பி.

பேரன்; ஒற்றுமை எதற்கோ உ,ரைப்பீர் தாத்தா?

தாத்தா; கெடுதலை நீக்கித் தமிழக

விடுதலை விரைவில் பெறலாம் தம்பியே.







( 285 )









( 290 )