பக்கம் எண் :

புகழ் மலர்கள்

நீ. கந்தசாமி

எந்தசாமிப் பிள்ளையும்
   ஈடிணையற்று உயர்ந்தொருவன்
      எனைக் கவர்ந்த
சொந்தசாமி உண்டென்றால்
   வியப்புறுவீர், மருண்டிடுவீர்
      தூய்தமிழ்த்தாய்
தந்தசாமி தலைச்சாமி
   பழந்தமிழும் புதுத்தமிழும்
      தரமாய்க் கற்ற
கந்தசாமிப் பிள்ளையவன்
   கடலாழம் விரிவானக்
      கல்வியாளன்
பொறியியலில் பேரறிஞன்
   புலமையிலோ நுண்ணறிஞன்
      புதுமலர்ச்சி
அறிவாளன் செந்தமிழ்க்கே
   அவற்றைக் கொண்டு

நெறியியலில் திறனாயும்
   நெஞ்சுடையான் நிறைநூற்கள்
      நினைந்து கற்பான்.
வெறியியலில் நிற்காத
   வீரனவன் வீழ்தவனே
      விரி தமிழ்க்கே.

கட்டடத்தின் ஒப்பந்தம்
   ஒவ்வொன்றும் கண்டுமுதல்
      காண்ப தெல்லாம்
கொட்டிடுவான் கரந்தை தமிழ்ச்
   சங்கத்தின் கடைக்காலாய்,
      கலைமலிந்த
கட்டடமும் அவனாவான்
  தமிழ்ப்பொழிவின் கடிமணமும்
      கவின் வனப்பும்
உட்சுவையும் அவனாவான்
   உணர்வெல்லாம் உணர்ச்சியெலாம்
      உயிர்த்தமிழ்தான்.

இலக்கியமும் இலக்கணமும்
   கல்வெட்டாய் செப்பேடாய்
      இருந்தினிக்கும்.
வலக்கண்ணாய் இடக்கண்ணாய்
   வாங்குவளி நுரையீரல்
      வகைபடல் போல்
துலக்கமுறும் எந்நாளும்
   துல்லியமாய் மிகத்தெளிவாய்த்
      துய்த்தவற்றைச்
சொலத்தெரிந்த மிகச்சிறந்த
   காவிரிபோல் தலைச்சுரப்பு
      சொரியும் குன்றம்.

எள்ளிநகை யாடுவதில்,
   இலக்கணத்தில் சொக்கட்டான்       இடுவான், வெல்வான்,
வெள்ளிமின்னல் போல்சிரிக்க
   விளையாட்டாய்த் தமிழ்கற்கும்
      வேலையற்றோர்

கொள்ளிவைக்கும் கோடரிக்காம்
   பானசில வழக்கறிஞர்
      கூட்டந் தன்னைப்
பள்ளியகரப் பழங்கதைபோல்
   பலகூறி பழமைப்பித்து
      அறுப்பான் பாய்ந்தே!

மொழிபெயர்ப்பில் ஈடில்லான்
   மேனாட்டு மொழிப்புலவர்
      முதுநூல் கண்டு
தொழிலாகக் கொள்ளாமல்
   தொண்டாக்கும் பேருள்ளம்
      தூய உள்ளம்.
விழியாவான் எந்தமிழுக்கு,
   சங்கநூற் சொல்லடைவு
      விரிவனைத்தும்

பொழிகின்ற குற்றாலத்து
   ஐந்தருவி பெரும்புலமை
பொருநை ஆறே!
      எத்தனை நூல் வாங்கிடுவான்
எத்துணை நூல் கற்றிடுவான்

அத்தனையும் தன்னலத்து
   ஆழியின் முத்தல்ல!
எண்டிசைக்கும் ஏருழவன்
   ஈந்த உணவாகும்
ஒண்டமிழ்க் கான உரம்.




( 5 )




( 10 )



( 15 )





( 20 )





( 25 )




( 30 )




( 35 )





( 40 )




( 45 )





( 50 )





( 55 )





( 60 )



( 65 )





( 70 )





( 75 )
யாழ் நூல் தந்த விபுலானந்தன்

எத்தமிழால் வையம்
   இரும்பூது கொண்டிடுமோ
அத்தமிழால் வாழ்வை
   அகப்படுத்தி முத்தமிழால்
தொன்மொழிக்குத் தோலா
   துழைத்துயர்ந்தோன் சொல்லருமை
தென்மொழிக்கு யாழிசைத்தோன்.

அறிவறிந்த நாள்முதலாய்
   அந்தமிழும் தொண்டும்
நெறியறிந்த நீர்மையன்;
   நேர்மைக் குறியறிந்து
முத்தமிழ்க்குப் பண்ணானான்
   முச்சங்க யாழ்கண்டான்
எத்தமிழுக்கும் ஈந்தான் இலக்கு!

பாழ்நூலே செய்து
   பதிப்பித்துப் பைந்தமிழைக்
கூழ்நூலே என்று
   கொடுக்கையில் யாழ்நூலை
இந்தா எனக்கொடுத்தான்
   எண்ணரிய ஆய்வின்பின்
சிந்தா மணிச்சிலம்பில் தேர்ந்து.

பெருங்கதையால் வாழ்வைப்
   பெருக்காமல், வையப்
பெருந்தகைக்கே வாழ்வை
   துறந்த அருந்தகையன்
தாயைத் துறந்தாலும்
   தண்டமிழைத் தான்துறவா
தூயவனை வாழ்த்தல்என் தொண்டு.

சங்கநூல் விற்பனையில்
   சாரும் மடச்சோற்றில்
தங்கநூற் காகத்
   தனையடகாய் எங்குமே
வைக்காமல் அண்ணா
   மலைப்பல் கலைக்கழகம்
கைக்கொடுத்தான் யாழ்நூலைக் கொண்டு.

எங்கே இசைநுணுக்கம்?
   எங்கே பெருநாரை?
எங்கேநம் சிற்றிசை,
   பேரிசை, பொங்கிசை நூல்?
எங்கே எனக்கேட்டார்க்
   கெல்லாம் இசையாழ்நூல்
இங்கே எனவீந்தான் ஏந்து.
ஏழிசையும் செந்தமிழே
   ஏமுற வையத்து
வாழிசை எல்லாம்
   வழங்குதமிழ்ச் சூழிசையே
காணுங்கள் என்றான்
   கலைவிபு லானந்தன்
பூணுங்கள் என்றான் புரிந்து.

சீர்செழித்த செங்கோட்டு
   யாழுடன் செந்தமிழ்
பேர்செழித்த பேரியாழ்
   சீறியாழ் வில்யாழ் நல்
எத்தனை உண்டோ
   இசைக்கருவி யாழ்வகைகள்
அத்தனையும் காட்டினான் ஆழ்ந்து

ஆங்கிலமும் ஆரியமும்
   நன்கே அறிந்திருந்தும்
பாங்கிருக்கும் பைந்தமிழ்க்கே
   தன்வாழ்வை ஓங்கிருக்கச்
செய்விபு லானந்த
   செம்மைத் துறவியினைக்
கைகுவித்து வாழ்த்தும்என்வாய்.

செம்மை நலங்கனிந்த
   செய்யுளைத் தீட்டுங்கை;
மும்மைத் தமிழை
   முழக்கும்வாய்; அம்மம்ம!
தெற்கே இலங்கைமுதல்
   செல்லும் இமயம்வரை
பற்றே படரும் தமிழ்.

( 80 )




( 85 )





( 90 )




( 95 )





( 100 )




( 105 )





( 110 )





( 115 )




( 120 )





( 125 )





( 130 )





( 135 )




( 140 )





( 145 )
அண்ணல்தங்கோ

நீண்ட நெடுந்தோற்றம்
       நேர்மை தவறாதான்
பாண்டிய நாட்டுப்
       பழந்தமிழே யாண்டும்
மொழிவான் மொழிப்போரில்
       மூத்தோன் பகைக்குப்
பொழிவான் இடியின் புயல்.

தமிழர் திருநாளைத்
       தன்பொருள் ஈந்தே
தமிழறிஞர் தம்மை
       அழைத்துத் தமிழுணர்வை
ஊட்டுவான்அண்ணல்தங்கோ
       ஆரியரை ஊரறிய
ஓட்டுவான் ஓடுஓடென்று.

செந்நீரை இந்திய
       நாட்டிற்குச் சிந்தினான்
கண்ணீரைத் தந்ததிந்த
       காங்கிரசு, வெந்நீரைச்
செந்தமிழ் வேருக்குச்
       பாய்ச்சியதும், போராட
அந்தமிழ்க்கானான் அரண்.

தமிழ்நிலத்தை மீட்கத்
       தமிழ்நில ஏட்டைத்
தமிழ்நலத்தோ டீந்தான்
       தமிழர், தமிழ்மொழி
தாய்நாட்டுக் கென்றே
       தனையீந்தான்; ஈந்தானே
நோய்நாட்டுக் கேற்ற மருந்து!

( 150 )




( 155 )




( 160 )





( 165 )





( 170 )




( 175 )
உடையார்பாளையம் வேலாயுதம்

உடையார் பாளைய வேலாயுதத்தை
மடையர்கள் மரத்தில் கொன்று தூக்கினராம்!
கொடுமைகள் செய்யும் கூட்டமே ஆரிய
எடுபிடிகளாநீர்? எச்சிற்பொறிக்கிகள்.
பெரியார் இயக்கச் சுயமரியாதை
புரியாதிருக்கும் போக்கிலிகளே நீர்
யாரைக் கொன்றீர், யாரைத் தூக்கினீர்?
வேரையும் விழுதையும் வெட்டிச் சாய்த்தால்,
திராவிட ஆலே செத்து விடாதா?

தங்களைத் தாங்களே தற்கொலைக் காக்கும்
தகாத செயலைத் தமிழரே செய்வதா?

ஆரிய மதத்தின் அடிமை ஆனீர்
ஆரியச் சாதியால் அவதிப் பட்டீர்
ஆரியக் கொடுமையால் அல்லல்கள் கொண்டீர்
ஆரியச் சுரண்டலுக் கழிந்து கெட்டீர்
இன்றுநீர் கோடரிக் காம்பாய் இயங்கினீர்
பழியும் இழிவும் பச்சைத் தமிழரே
அழிவுக் குழியில் ஒழிப்ப தறிகிலீர்.

இரக்கப் படுவதா எரிச்சல் கொள்வதா?
உரத்த சிந்தனை கொள்ளடா திராவிடா!
நன்று சுய மரியாதை என்று நவின்று
வென்றிடும் உலகில் வீரியம் மிக்க
பகுத்தறி வாளராய்ப் பண்பாடடைந்திட
விழிப்படை யீரோ, வெல்லும் திராவிட

மொழிப்போர் இனப்போர் மூடநம்பிக்கையின்
அழிவுப் போரினில் அனைவருக் காகத்
தொண்டு செய்த தோழனைத் தூக்கில்
கொண்டு சேர்த்தீர்; கொன்றுங் களையே
ஆரிய நரிக்கே அரும்பசி தீர்த்தீர்.

ஓர்நாள் உணர்வீர்; வெட்கம் உங்களைப்
பிணம்தின்னிக் கழுகாய்ப் பிடுங்கித் தின்னும்,
அன்று நீர் ஆரிய அடிமை விலங்கினைக்
கொன்று போட்டுக் கொதிப்புற் றெழுவீர்.
உடையார் பாளைய வேலா யுதத்தின்
படையினி லிருந்து, பெரியார் இடுங்கட்டளைக்கே முடுகுவீர் அறிவனே !



( 180 )




( 185 )






( 190 )





( 195 )




( 200 )





( 205 )





( 210 )

வ சுப்பையன்

திருநெல்வேலிச்சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம் போலும்
ஒரு நல்ல தமிழ் வளர்க்கும் நிறுவனமும்,
கண்டதில்லை உலகில்! அந்த
உரைமல்கு நிறுவனமும், முப்போதும்
தமிழுக்கே உழைக்கத் தக்க
பெருநல்லான் தமிழ்ப்புதல்வன் சுப்பையன்
போற்பிறரைப் பெற்ற தில்லை.

நூலெல்லாம் விளையுமங்கே நூறாயி
ரக்கணக்கில்! நூல் ஒவ்வொன்றின்
மேலெல்லாம் அழகுசெயும் சுப்பையன்
மிகுதிறமை! அதுவுமின்றிக்
காலெல்லாம் சிலம்பொலிக்கத் தமிழரசி
உலகரங்கு காணும் வண்ணம்
தோலெல்லாம் சுளைப்பயன் கொள் புதுப்புதுநூல்
தோற்று விப்பான் அந்த மேலோன்.


( 215 )



( 220 )






( 225 )


ந. சி. கந்தையா

தென்னிலம் இதனின் தொன்மை என்ன?
செந்தமிழ் தோன்றிய காலம் செப்பெனில்
முத்துநாகரிக முளைகண்ட தெவ்வினம்?
தமிழரின் தோற்றமும் பரவலும், தரையினில்
குமரிக் கண்டநாள் கூறுக என்றால்
வையாபுரியின் கைகளா எழுதும்.

பொய்புரட்டு ஆசிரியர் கையடையாகிய
ஆங்கிலர்க் குண்மை பாங்கு தெரியுமோ?
ஓங்கியேஅவர் உண்மை காணினும்
நீலகண்டங்களின் நீளப் பரம் பரம்பரை
காலங் காலமாய்க் கண்வைத் தழிக்கையில்
மடக்குக் கத்தி விரிவது போலும்
எரிமலை யின்வாய் வெடித்தது போலும்
முத்தமிழ் நிலையப் புத்தகப் பண்ணையில்
வித்திய விளைவில் கண்டு முதலானவன்
ந. சி. கந்தையாஎனும் நல்லவன், வல்லவன்.
தமிழ், தமிழின வரலா றனைத்தையும்
தொல்பொருள் ஆய்வின் தொகைவகை விரித்து
நிலநூல் கடல்நூல் சான்றுகள் நிறைத்தும்
தமிழ்நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும்

இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும்
பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும்
வையம் வியக்க வரலாறெழுதினான்-
பொய்அகன்று மெய்க் கைஉயர்ந்தது,

குமரிநாட்டின் தமிழினப் பெருமை
நிமிரச் செய்தான், நேற்று வரையிலும்
கரடி விட்டவர் கண்முன் காண்கிலோம்.
வளைகிற மரமெலாம் முறிவதுண்டோ?
நோய்ப்படு வோரெலாம் சாவதும் உண்டோ?
முகில்மறைப் பதனால் மலைமுக டழியுமோ?
உண்மை ஒளியின்முன் பொய்யிருள் வாழுமோ?
கந்தையாவின் சிந்தையும் செயலும்
செந்தமிழ்க்குச் சேர்த்தநூல் ஒன்றா இரண்டா?
ஈட்டிய அறிவெலாம் ஊட்டினான்
காட்டுவோம் அவர்க்கு நன்றிக் கடனையே.

( 230 )





( 235 )




( 240 )




( 245 )





( 250 )





( 255 )





( 260 )
முத்தமிழ்ச் சக்ரவர்த்தி

வாருங்கள் வாருங்கள்
        என அழைப்பர் வாய்மணக்க
வணங்கி, வந்துட்
        காருங்கள் எனமுகத்தா
மரைமலர்கள் பலமலரும்
        களிக்கும் கண்கள்
கோருங்கை இருக்கைஎடுத்
        துவந்தளிக்கும் குடிப்பதற்குக்
குடிநீர் வெட்டி
        வேருங்கை மணக்குவணம்
எனக்கீயும் ஒருகுடும்பம்
        விருந்தால் துள்ளும்.

வீட்டுக்குள் மனைமக்கள்
        சுற்றமுடன் மகிழ்ச்சியினில்
விம்மி மெச்சி
        பாட்டுக்குள் பெற்றசுவை
கற்றசுவை பேரின்பம்
        பெரிதுவப்பர்,
தேட்டுக்குள் காண்பரிதாம்
        செந்தமிழ்ப் பண்பாடு
செழித்திருக்கும்
        கூட்டுக்குள் அடைபடுவேன்
கூர்ந்தமிழ்ச் சக்ரவர்த்தி
        குடும்பத் தாழ்வேன்'

அன்பார்ந்த அன்னையவர்
        அழகின்சிரிப் பொருபாட்டின்
பெருமை சொல்வார்.
         இன்பார்ந்த மனைக்கிழத்தி
எனக்குரிய சுவையமுதை
        இட்டுவப்பார்
தென்பார்ந்த இருமக்கள்
        புரட்சிப்பாட் டினும்எழுத
வேண்டும் என்பார்
        நன்காயந்து வெளிச்சிடும் நூல்
கருத்துக்களைச் சக்ரவர்த்தி
        நயினார் கேட்பார்.

பொலிவுடனும் பொருளுடனும்
        புலமைகள் மிகுநூற்கள்
பொருள் முட்டின்றி
        மலிவுடனே வாங்குதற்கு
மனம்திருப்பித் தமிழ்மக்கள்
        மனைகள் தோறும்
புலிக்குட்டி கள்போன்ற
        புரட்சிசெயும் புதுநூற்கள்
அனுப்பிவைப்பார்
        வலிவுடனே தமிழிளைஞர்
தமிழறிஞர் விழிப்பெய்த
        வகை செய்கின்றார்.
கைத்தொழில் நூல் ஒவ்வொன்றும்
        கற்றார்க்கும் கல்லார்க்கும்
கைகொடுக்கும்.
        பொய்த்தொழிலைச் செய்து உழையா
பார்ப்பனர்போல் தமிழ்க்குடும்பம்
        போகா வண்ணம்.
செய்தொழிலில் சீரடைவாய்
        பிறர் உழைப்பில் உயிர் வாழ்தல்
சிறவாதென்று
        மெய்த்தொழிலை செயத்தூண்டும்
மேன்மையுள சக்ரவர்த்தி
         வெல்க வாழ்க?

இரண்டணா நாலணா
        எட்டணா என்று
திரண்டநல் நூலைத்
        திராவிடர் வாழ்வில்
புரட்சிக்கு வித்தூன்றும்
        போக்கில் திருநூல்
வறட்சிக்கு வாய்த்த
        மழை!

( 265 )




( 270 )




( 275 )





( 280 )




( 285 )





( 290 )



( 295 )





( 300 )




( 305 )




( 310 )





( 315 )




( 320 )





( 325 )




( 330 )