Untitled Document | | கோதிலாச் சுதந்தி ரத்தால் குணம்பெறா தென்றும் நாட்டில் வாதினைப் பெருக்கிச் சண்டை வளர்ப்பவர் செய்கை, அம்மா! |
| | 112. உழைக்க வேண்டும் | 903 | | மன்னும் சுதந்திரத்தை - நாட்டில் மக்கள் அடைந்தவுடன் பொன்னை மழையாக - வானம் பொழிந்து கொட்டிடுமோ? |
904 | | பாலை சோலையாகிக் - கனிகள் பழுத்து தீர்ந்திடுமோ? சேலை சேலையாகப் - பருத்திச் செடிகள் காய்த்திடுமோ? |
905 | | ஆக்கம் வேண்டு மெனில் - நன்மை அடைய வேண்டுமெனில் ஊக்கம் வேண்டுமப்பா! - ஓயாது உழைக்க வேண்டுமப்பா! |
906 | | உண்ணும் உணவுக்கும் - இடுப்பில் உடுக்கும் ஆடைக்கும் மண்ணில் அந்நியரை - நம்பி வாழ்தல் வாழ்வாமோ? |
907 | | நெற்றியின் வியர்வை - நிதமும் நிலத்தில் வீழ்ந்திடிலே சற்றும் வாடாமல் - சுதந்திரம் தழைத்து வருமப்பா! |
908 | | ஜாதிச் சண்டையெலாம் - ஓய்ந்து தணிய வேண்டுமப்பா! நீதி நாடெங்கும் - நிலைத்து நிற்க வேண்டுமப்பா! |
909 | | உலக மக்களெல்லாம் - அன்போடு ஒரு தாய் மக்களைப் போல் கலக மின்றிவாழும் - காலம் காண வேண்டுமப்பா! | |
|
|