Untitled Document | | சரணம் | | | | ஆகாத குணமென்னை அண்டாமல் அணுகாமல் ஆட்சி புரிந்திடாமல், நீகாவ லாய்வந்ததென் நெஞ்சத் தவிசேறி நித்தமுந் தங்கி யங்கே ஏகாதி பதியாக அரசாள என்மீ திரங்கி அருள்வா யெனில், நாகாதி பன்தாங்கு நாராயாணா! ரங்க நாதா! கருணாகரா! - இன்னும் | (எத்) | | | 19. சுதந்திர சூரியன் | | இராகம் - ரேவகுப்தி | | | தாளம் - ரூபகம் | | | பல்லவி | | 1803 | | சூரிய னுதித்தது பார்! - சுதந்திர சூரிய னுதித்தது பார்! | |
| | சீரிய ஸர்வஜித் வருஷம் சிறந்த ஆடி முப்பதினில் தேரும் முனிவர் அரவிந்தர் ஜன்ம நாளாம் திருநாளில் | (சூரிய) |
| | பார தத்தைச் சூழ்ந்த இருட் படலம் சிதறி ஒழிந்திடவே வீர முரசம் முழங்கிடவே வெற்றிக் கொடிகள் பறந்திடவே | (சூரிய) | | | புத்தம் புதிய கருத்துகள் புலவர் கவியில் பூத்திடவே சித்தம் மகிழப் பூவையர்கள் தேவ கீதம் பாடிடவே | (சூரிய) | |
|
|