பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு529

Untitled Document
1162 நாலுகை யானை - வழக்குரைஞர்  நீதிமன்றத்தில் அணியும்
கறுப்பு கவுன்;       நாலுகைச்       சட்டைக்காரன் என
வழக்குரைஞரைக் கிண்டலாகக்கூறுவது வழக்கம்.உள்ச்சட்டை,
மேலங்கிஆகிய இரண்டிலும் 4 கைகள்;   வழக்குரைஞரைத்
தான் நடத்துவதாகக் குமஸ்தா        கூறிக்கொள்ளுகிறான்.
1177 விக்கினம் - தடை
1183 திகையுமா - போதுமா?
1185 பாரப்படி - பாரம் (Form) எழுதுவதற்குரிய கூலி;
எந்தப்படிவத்தையும் நிரப்பக் கூலி கொடுக்க வேண்டும்.
1186 பட்டிகைப்படிகள் - விண்ணப்பக் கூலி
1190 வாசல்படிகள் - நீதிமன்ற வாயிற் படிகள்
1191 ஏணிப்படிகள் - நீதிமன்ற மாடிப்படிகள். இது கிண்டலுக்காகக்
கூறப்படுவது
1193 வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்-  வாணாளைக் கொடுத்து
வாணதீர்த்தம் ஆடுவது’ என்பது நாஞ்சில் நாட்டு வழக்காற்று
மொழி. வாணதீர்த்தம் - திருநெல்வேலி மாவட்டம். பாபநாசம்
அருவியில் உள்ள தீர்த்தக் கட்டம். இதில் தீர்த்தமாடி வருவது
சிரமமான காரியம். அதிகக்     கஷ்டப்பட்டு ஒரு காரியத்தை
நிறைவேற்றுவது என்பது  இம்மொழியின் கருத்து.
1195-
1210
நீதிமன்றத்தில் Free கட்டணங்கள்  என்றப் பெயரில்
அபகரிக்கும் செயலைக், கிண்டல் செய்யப்படும் பகுதி.
1205 இழபு பயிற்றுப்பீஸு -இறந்த  வீட்டில் வைக்கப்படும் பயிறு
என வெறுப்பும் கிண்டலுமாகக் கூறப்படுவது.
1207 முண்டு - வேட்டி
முழுமல்பீஸு - முழுதான மல்வேட்டி
1212 பீஸு பிஸாய் Fees என்னும் கட்டணம்
Piece துண்டு துண்டாக
பிச்சு - பிய்த்து; கிழித்து
1215 மூவர் - பிரம்மா, விஷ்ணு, சிவன்
1216 பொது ரிக்கார்டு புரை - ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும்
ஆவணக்களரி (Record Office) புரை - அறை
1217 முத்தொழில் இயற்றும் தெய்வம்-இல்லாததை உண்டுபண்ணுதல்,
உண்டு பண்ணியதைப் பரிபாலித்தல், உள்ளதை அழித்தல்
என்பன
தெய்வம் - இங்கு குமஸ்தா