கறுப்பும் வெள்ளையும்
கறுப்பு, வெள்ளை இரண்டு நிறமும்
கலந்தி ருக்கும் எங்கள் பசு.
காலை, மாலை இரண்டு வேளை
பாலைத் தரும் எங்கள் பசு.
கறுப்பும் வெள்ளையும் கலந்த பசுவில்
கறந்து கறந்து வெள்ளைப் பாலை
விரும்பி நாங்கள் குடித்தி டுவோம்;
மிகவும் மகிழ்ச்சி அடைந்திடுவோம். |