பக்கம் எண் :

 

சுண்டெலி


                      சுண்டெலி, சுண்டெலி,
                      துறுது றுத்த சுண்டெலி!

                 பண்ட மெல்லாம் கெடுத்திடும்;
                   பானை சட்டி உருட்டிடும்;
                 கண்ட கண்ட பொருளெலாம்
                   கடித்து நாசம் செய்திடும்


                     சுண்டெலி, சுண்டெலி,
                     துறுது றுத்த சுண்டெலி!

                 பையில் ஓட்டை போட்டிடும்;
                    பணத்தை இழக்கச் செய்திடும்;
                 கையைக் காலை இரவிலே
                    கடித்து என்னை எழுப்பிடும்


                    சுண்டெலி, சுண்டெலி,
                    துறுது றுத்த சுண்டெலி.
 

9