பக்கம் எண் :

பக்கம் :34பூங்கொடி

  நுதலிடைக் கிடந்து நுடங்கும்அக் காட்சி
கவிஞன் ஓவியன் கற்பனை தூண்டும்,
நடைக்கோர் உவமை நவிலவும் ஒல்லுமோ?
 
     
 

உலுத்தர் தொல்லை

 
     
  கடைத்தெரு வழியே காரிகை தனியாய்  
  ஏகின் சிற்றினம் ஏதம் விளைக்கும்;
நாகிளம் பருவ நல்லியல் மாதர்
உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின்
நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே
ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர்
50
  மக்கட் பண்பு மங்குதல் கண்டோம்
தெக்கணம் இப்படித் தேய்வது நன்றோ?
55
     
 

அல்லியின் வரலாறு

 
     
  வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய்
களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ்
மயில்நகர் எனும்பேர் மருவிய நகருள்
 
  கோசிகப் பேரினன் குலக்கொடி யாவேன்;
மாசி மாமகத் தண்புனல் ஆடும்
ஆசை துரப்ப ஆணை கோரினேன்;
தந்தை தடுத்தும் தவிரரும் ஆர்வம்
உந்த அவருரை உதறித் தனிமை
60
  அஞ்சிலேன் ஆய்விலா நெஞ்சினேன் சென்றேன்;
ஒருமகள் ஆதலின் உருத்துத் தடுக்கா
திருந்தனர், ஆங்கோர் இடுக்கண் நேர்ந்தது;
65

---------------------------------------------------------------

  நுதல் - நெற்றி, நுடங்கும் - அசையும், நவில - சொல்ல, சிற்றினம்- கயவர்கூட்டம், ஏதம் - துன்பம், நாகு - இளமை, உறுதுணை - ஏற்றதுணை, ஊறு - துன்பம், உலுத்தர் - கயவர். பல்கினர் - பெருகினர், களமர் - உழவர், துரப்ப - செலுத்த, உருத்து - சினந்து, இடுக்கண் - துன்பம்,.