பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி49

நாடகத்தைப் பத்தி இன்ஃபார்மலா உன்னிடம் பேசுவாங்க...கேள்விகள்
கேட்பாங்க... கேள்விக்கெல்லாம் நீதான் கோபப்படாமல் பதில் சொல்லணும்.
என்ன சரிதானா?’’

     ‘‘நாடகமே இன்னும் தயாராகலே; அதுக்குள்ளே...இதெல்லாம் வேற
எதுக்கு?’’

     ‘‘இந்த ஊர்ல இதெல்லாம் ஒரு முறை. முன்கூட்டியே ஒரு
பப்ளிஸிடிதான். வேறென்ன? திட்டினாலும் டிபன், காபி, பீடா எல்லாம்
குடுத்திட்டு அப்புறம் திட்டினாத்தான் இங்கே கேட்பாங்க...’’

     ‘‘கொஞ்சம் கொஞ்சமா என்னை மெட்ராசுக்குத் தயாராக்கப் பார்க்கறே!
இல்லியா?’’

     ‘‘தயாராக வேண்டியதுதானே?’’

     ‘‘இதெல்லாமே ஒரு நாடகமாவில்லே இருக்கு?’’

     ‘‘அப்படித்தானே இருக்கணும்!’’

     ‘‘யாராரு வருவாங்க?’’

     ‘சினிமா நிருபர்கள், பிரபல கதை வசன கர்த்தாக்கள், டைரக்டர்கள்.
நம்ம குழுவுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிற ஆளுங்க...மற்ற நடிக நடிகையர்களிலே
சில பேரு...எல்லாரும்...வருவாங்க...’’

     ‘‘என்னை என்னவோ கேட்பாங்கன்னியே; என்ன என்ன கேட்பாங்க்...?’’

     ‘‘தப்பா ஒண்ணும் கேட்க மாட்டாங்க? ‘நீங்க எழுதப் போகிற நாடகம்
எதைப் பற்றி? எப்படி எப்ப தயாராகும்?’னு கேட்பாங்க ‘தமிழகத்தின்
மகோன்னதமான பொற்காலத்தைச் சித்தரிக்கும் மகோன்னதமான வரலாற்று
நாடகமாக இது அமையும். இதுவரை யாரும் இப்படி ஒரு நாடகத்தைத்
தமிழகத்துலே மட்டுமில்லே;