பக்கம் எண் :

மனோன்மணீயம்
38

ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற்
90.பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும்,
கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக்
கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர
மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும் ;
அலமுகந் தாக்குழி யலமரு மாமை
95.நுளைச்சியர் கணவரோ டிழைத்திடு மூடலில்
வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும் ;
பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடு மன்றில்
நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா ;
வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில்,
100.உப்பார் பஃறி யொருநிரை பிணிப்பர்
இப்பெருந் யேத் தெங்கு மிராப்பகல்
தப்பினும் மாரி தன்கடன் தவறா.
கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட
அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி
105.வடியும்நீ ரேநம் மிடிதீர் சாரல்.
நன்னீர்ப் பெருக்கும் முந்நீர் நீத்தமும்
எய்யா தென்று மெதிர்த்திடும் பிணக்கில்
நடுக்கட னன்னீர் சுவைத்திடு மொருகால் ;
மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால் ;
110.வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம்
ஓமென வோவிறந் தொலிக்கப் பிரணவ
நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்,
நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும்
படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித்
115.தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா,
நிலவொளி முத்துங் கவடியும் பணமா,
அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண,
துகிர்க்கா லன்னமும் புகர்க்காற் கொக்குஞ்
செங்கட் போத்துங் கம்புட் கோழியுங்
120.கனைகுர னாரையுஞ் சினமிகு காடையும்
பொய்யாப் புள்ளு முள்ளான் குருகும்
என்றிவை பலவு மெண்ணில குழீஇச்