| 60. | அடுத்திடி லும்மையும் பிடிக்குமிம் மாயை. பிடித்திடிற் பின்நும் படிப்பும் ஞானமுங் குருட்டா சனுக்குக் கொளுத்திய விளக்கும் இருட்டறை யிருந்துகண் சிமிட்டலு மென்ன ஆர்க்குமிங் குமக்கும் பிறர்க்குமென் பயக்கும்? |
| 65. | பார்க்கப் பார்க்கஇப் படியே துயரம் மீக்கொளும். அதனால் விடுமுல கெண்ணம். சுட்டதோர் சட்டிகை விட்டிட லென்னத் துறப்பதிவ் வுலகம் மறப்பதற் கன்றோ ! மறக்கிற் சுயமே மறையும். மறைய |
| 70. | இறக்கும் நும்முளம். இறக்குமக் கணமே பிறக்கும் பிரத்தியக் பிரபோ தோதயம் ! நீரு முலகமும் நிகழ்த்திய போரும் யாருமங் கில்லை. அகண்டசித் கனமாய் எதிரது கழிந்தபே ரின்பமே திகழும் ! |
| 75. | உரையுணர் விறந்தவிந் நிருபா திகம்யான் உரைதரல், பிறவிக் குருடற் கொருவன் பால்நிறங் கொக்குப் போலெனப் பகர்ந்த கதையாய் முடியும் ! அதனாற் சற்றே பதையா திருந்துநீர் பாருஞ் |
| 80. | சுதமா மிவ்வநு பூதியின் சுகமே. | | | 1 |
| கருணாகரர். | | சுகம்யான் வேண்டிலேன் சுவாமி ! எனக்குமற்று இகம்பர மிரண்டு மிலையெனி லேகுக. யானென வொருபொரு ளுளதா மளவும், ஞான தயாநிதி நங்குரு நாதன் | | | 1 |
| 85. | ஈனனா மென்னையு மிழுத்துஅடி சேர்த்த வானநற் கருணையே வாழ்த்தியிங் கென்னால் ஆனதோர் சிறுபணி யாற்றலே யெனக்கு மோனநற் சித்தியும் முத்தியும் யாவும். ஐயோ ! உலகெலாம், பொய்ய யினுமென் ! |
| 90. | பொய்யோ பாரும் ! புரையறு குரவன் பரிந்துநந் தமக்கே சுரந்தவிக் கருணை ! இப்பெருந் தன்மைமுன் னிங்குஉமக் கேது? |
|
|
|