பக்கம் எண் :

மனோன்மணீயம்
160

மனோன்,

எந்தைபோல் தயாநிதி யெங்கணு மில்லை.
வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே!

85.ஏதோ வொருவித மெழுதினே னென்க!
வாணி! உன் மணத்திற் கிசைந்தான் மன்னன்.
காணா யீதோ வதற்குள கட்டளை.

(திருமுகங்காட்ட : வாணிவாசிக்க)

சொன்னேன் அன்றே வாணீ! முன்னமே
அன்னை தந்தைய ரன்பறி யார்சிறார்.


வாணி,90.

இத்தரு ணத்தி லிதுவென்? அம்மணி!
சத்தியம். எனக்கிது சம்மத மன்று.
நினைப்பருந் துயரில் நீயிவண் வருந்த
எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே!
உன்மனப் படியெலா முறுங்காற் காண்குவம்.


மனோன்,95.

என்மனப் படியெது? எனக்கொரு மனதோ?
எந்தையின் மனப்படி யென்மனப் படியே.
வந்தவிச் சுரத்திடை மாண்டதென் சித்தம்.


வாணி,

ஆயினு மம்மா! யாரிஃதறியார்?
பாயிருள் தொகுதியும் பரிதியுங் கொடிய

100.

வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும்
பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப்
பெருந்துயர்க் கெங்ஙன மிசைந்தனை யென்க.
என்னையுன் நினைவோ! என்னையுன் துணிபோ!
இன்னன மகிழ்ச்சியி லென்மண மேகுறை! (அழ)


மனோன்,105.

வருந்தலை வாணி! வா வா. இன்னுந்
தெரிந்தலை. ஐயோ! சிறுமியோ நீயும்?
உண்மையா னுரைத்தேன். உணருதி. உறுதி.
என்மன மாரவே யிசைந்தேன். மெயம்மை.
ஏதென எண்ணினை யிவ்வுயிர் வாழ்க்கை?

110.

தீதற வின்பந் துய்ப்பநீ யெண்ணில்
ஈதல வதற்கா முலகம். இமையவர்
வாழ்க்கையி லுந்துயர் வந்துறு மெனிலிவ்
யாக்கையி லமையுமோ நீக்கமி லின்பம்.
எனக்கெனக் கென்றெழு மிச்சையா திகளெனும்