பக்கம் எண் :

110
இந்திய சங்கீதத்தைப்பற்றிய பொதுவான அபிப்பிராயம்.

V. இந்தியசங்கீதத்தைப்பற்றிப் பலர் சொல்லும் வெவ்வேறு அபிப்பிராயம்.

1. இந்திய சங்கீதத்தைப்பற்றிய பொதுவான அபிப்பிராயம்.

தென்னிந்தியாவிற்குத் தெற்கேயிருந்த லெமூரியா என்று தற்காலத்தில் அழைக்கப்படும் ஆதிபாண்டிநாடு நாற்பத்தொன்பதும் கடலால் அழிக்கப்பட்டபின், பூர்வத்தில் அது அடைந்திருந்த எல்லா நாகரீகமும் முற்றிலும் அழிந்தன. அதைப்பற்றிப் பிறர் சொல்லித் தெரிந்து கொள்ளவாவது ஓலைச்சானங்கள் செப்புப்பட்டயங்கள் கல் வெட்டுகள் முதலியவைகளினால் அறிந்துகொள்ளவாவது ஏதுவில்லாமல் போய்விட்டது. இருந்தாலும், அங்கங்கே சிதறிக் கிடந்த சில நூல்களினாலும் இடைச்சங்கத்திலும் கடைச்சங்கத்திலுமிருந்த வித்வான்களினால் சொல்லப்பட்ட சொற்ப ஆதாரங்களினாலும் கொஞ்சம் தெரிகிறதேயன்றி முற்றும் தெரியவில்லை. ஆனாலும் பரம்பரையாய்க் கேள்விமூலமாய்க் காப்பாற்றப்பட்டு வரும் சங்கீதத்தைக் கொண்டும் சில கைத்தொழில்களைக்கொண்டும் இப்படித்தேர்ச்சியுள்ள ஒருகாலமிருந்தது என்று யாவரும் நினைக்க இடமிருக்கிறது. இப்படி நினைப்பவர்களின் அபிப்பிராயம் ஒன்றுக்கொன்று சில பாகங்களில் வித்தியாசமாயிருந்தாலும் பூர்வீகத்திலிருந்த உண்மையை ஒப்புக்கொள்வதற்குப் போதுமானவையென்றே நினைக்கிறேன். கிறிஸ்து பரமாத்துமா உலகில் அவதரிக்கும் காலத்தில் குருச்சந்திரயோகமும் சந்திர மங்களயோகமும் பெற்ற சனி மீனத்தில் நிற்க ஒரு பெயரி வானஜோதி தோன்றுமென்றும், அச்சோதி தோன்றும் ராசி பாகைகளுக்கு ஒத்ததான பூபாகத்தில் மிக மகத்துவமுள்ள ஒரு அவதார புருஷன் பிறப்பாரென்றும், லக்கனாதிபதி சூரியன் நீசபங்கராஜயோகமும் புதன் உச்சமும் புத்திர ஸ்தானத்தில் ராகுவும்நிற்பதைக்கொண்டு அவர் இராட்சசÊ ஐப்பசிமாதம் 18ம்தேதி 48(3/4)நாழிகைக்கு ஜனனமாவார் என்றும் கணிதத்தால் அறிந்துஅவர்பிறக்கிற காலத்தில் அவரைக்கண்டு காணிக்கைகளுடன்தரிசிக்கவேண்டுமென்று வெகுதூரம் யாத்திரை செய்துதரிசித்த கிழக்கு தேசத்து சாஸ்திரிகளின் கணிதத்தின்நுட்பமும் வான சாஸ்தீரத்தின் நிச்சயமும் அவதாரபுருஷர்களைத்தரிசிக்க விரும்பிய அவர்கள் பக்தியும் நாம் பார்த்து ஆச்சரியப்படவேண்டிய தாயிருக்கிறது. இவர்கள் தமிழ் மூவரசர்களாயிருக்கலாமென்று ஊகிக்கப்படுகிறார்கள். கணிதத்தில் மிகுந்த நுட்பமான பின்ன பாகங்களுக்கும் 36 ஸ்தானங்கள் வரை பெரியலக்கங்களுக்கும் பெயர்வைத்து அழைக்கிற வழக்கமானது மிகவும் கொண்டாடக்கூடியதே. அப்படியே சிற்ப சாஸ்திரத்திலும் சங்கீதத்திலும் மிகுந்த பாண்டித்திய மடைந்திருந்தார்கள். பத்துக்குப்பத்து சதுரமாயுள்ள ஒரு மெல்லிய சால்வையை ஒரு கைக்குள் அடங்கும்படியாகச் செய்திருப்பார்களானால் அவர்கள் கைத்தொழிலின் திறமையைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? ஒரு நெல்லின் உமியை இரண்டு பாகமாகப் பிரித்து, உள்ளிருக்கும் அரிசியில் விக்னேஸ்பார் சொரூபமும் சுப்பிரமணியர் சொரூபமும் எந்த அம்சத்திலும் குறைவுபடாமல் செய்து, பழையபடி அதில்வைத்து மூடித் தங்கள் கைத்தொழில் சாமர்த்தியத்தைக் காட்டக்கூடியவர்களும், மிகுந்த பலமுடையனவும் சத்துருக்கள் தொடுங்காலத்தில் தொட்ட அநேகரை அதம்பண்ணிப்போடக்கூடியனவுமான பொறிகளையும் பதுமைகளையும் செய்யக்கூடியவர்கள் அநேகரிருந்தார்கள். இப்படிக்க கைத்தொழில், சித்திரம், சங்கீதம், யோகசாதனை, வைத்தியம் முதலியவைகள் இந்தியாவில் ஒரு காலத்தில் அங்கங்கேயிருந்து வந்தனவென்று யாவரும் சொல்வார்கள். ஆனால் இவ்வரிய வித்தைகள் தங்கள் பிராணன் போகிறவரைக்கும் தங்கள் சொந்தப்பிள்ளைகளுக்குங்கூட சொல்லிவைக்க மனமில்லாதவர்களினால் அங்கங்கே மறைந்துபோய்விட்டன. அவைகள் பூர்வசரித்தரங்களை அறிய விரும்பும் சிலருக்கு விசாரணையின்மேல் கிடைக்கக்கூடியனவாகவும் ஊகிக்கக்கூடியன வாகவு மிருக்கின்றனவேயொழிய, திட்டமாய் வரக்கூடியவை மிகச்சிலவே. இருந்தாலும், சரித்திர ஆராய்ச்சிக்காரர் அவர்களுக்குக் கிடைத்ததாகச் சொல்லும் குறிப்புகளில் சில கவனிக்கத்தகுந்தவை.