பக்கம் எண் :

208இலக்கியத் திறன்

Untitled Document

                    8. உணர்த்தல்

கலைஞர்க்கு எளிது

     வாழ்க்கையில்     உற்ற   ஒர்   அனுபவத்தை மறுபடியும்
நினைவிற்குக்  கொண்டு வருதல்  எல்லோருக்கும் எளிது. இன்ன
இடத்தில் இன்ன காலத்தில்   இவ்வாறு நிகழ்ந்தது என்று பலரும்
பழைய அனுபவத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியும்.ஆனால்
அங்கு அன்று உற்ற அதே உணர்ச்சியை, அதே மன நிலையை -
இன்று உணர்தல்   அரிதாகும்.  சென்ற வாரத்தில்  ஒரு வீட்டின்
திண்ணை மேலிருந்து ஒரு குழந்தை விழுந்து விட்டது; அப்போது
கண்ட நம்  உள்ளம் திடுக்கிட்டது;  ஒரு குழந்தையின் நெற்றியில்
இரத்தம்   கசிதலைக்  கண்டு   வருந்தியது.    இன்று நினைத்து
பார்க்கும்போது  அந்த வீடும்  திண்ணையும் குழந்தை விழுதலும்
பட்ட அடியும் ஒழுகிய  இரத்தமும் நினைவுக்கு வரலாம். ஆனால்
நம் உள்ளம்   அப்போது உள்ள திடுக்கீடும் துன்பமும் இப்போது
மீண்டும்  உறுதல்   முடியுமா?   அதுதான்   பெரும்பாலோர்க்கு
அரிதாகவும்  கலைஞர்க்கு எளிதாகவும் உள்ள நிலை. கலைகளில்
ஒன்றாகி    இலக்கியத்தை   நன்கு  கற்பவர்க்கும் அது எளிதில்
கூடுவதாகும்.


இருவகைத் திறன்

     இலக்கியத்திற்கு   வேறு  எத்தன்மை இருப்பினும் போதாது;
உணர்த்தும்  ஆற்றல்  இருத்தல் இன்றியமையாதது; உணர்த்துதல்
இல்லையேல்  அது    இலக்கியம்- ஆகாது1. "எதை உணர்த்தல்
வேண்டும்?   புலவரின்    மனத்தில்   விளங்கிய   அனுபவமே,
படிப்பவரின்   மனத்திலும்  விளங்குமாறு   செய்தல்  வேண்டும்
அனுபவித்தது   என்ன   என்று விளக்குதல் போதாது; அனுபவம்
எப்படி   ஏற்பட்டது   என்று   சொல்லுதலும்  போதாது;  வந்த


     1. Whatever else literature may be, communication
it must be: no communication, no Literature.
  -L. Abercrombir, Principledds of Literary Criticism, p.24